எங்கள் ஊர்களில் கேபிள் டிவி ஆதிக்கம் செலுத்த தொடங்கிய நேரம், எல்லோரையும் போல நானும் என்ன சினிமா போடுவாங்கன்னு,ஆர்வமா உட்கர்ந்து பார்த்துக்கொண்டிருந்த காலம்!
ஆனால் கல்லூரிக்கு சென்றாலோ, யாரும் கேபிள் டிவியில படம் பார்த்ததை பற்றி பேச மாட்டார்கள்,ஏதாவது இங்கிலீஸ் சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவே பேசும்போது,எனக்கு கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது! என்னாடா நம்ம பிரெண்டுகள்லாம் எங்கயோ போய்ட்டானுங்க!? ஆனா, நாம மட்டும் இந்த சினிமாவை பார்த்துக்கிட்டு இருக்கறது தப்பாச்சேன்னு?! ஒரு ஆவேசத்தோட வந்து டிவியை போட்டு குடைஞ்சி கண்டெடுத்ததுதான் இந்த புரோகிராம்!
மலைப்பாம்புக்கிட்ட விளையாடுறது, தண்ணியில முதலைக்கு போக்கு காட்டுறது எல்லாமே ஒரு திரில்லிங்காவும் இருக்கும், அதே சமயம் அந்த மாதிரி நிகழ்ச்சிகளில ஆர்வமும் வந்துச்சு!அப்புறமென்ன அடுத்த நாளே ஆரம்பிச்சாசு காலேஜ்ல கதை சொல்றத!
ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சின்னு சொல்லணுமுனா, ஸ்டீவ் இர்வினோடதுதான் மனுசன் ஒரு சின்ன புள்ளை மாதிரி போய் விளையாடுறதும்,அதில உள்ள ரிஸ்க் பத்தி கவலைப்படாததும்,இவருக்கு இந்நிகழ்ச்சி முலமா பல ரசிகர்கள உருவாக்கிச்சுன்னு சொன்னா அதான் உண்மை!
ஆஸ்திரேலியாவில குயின்ஸ்லாண்டில், ஸ்டீவவின் பெற்றோர்களால் பராமரிக்கப்பட்டு வந்த வனவிலங்குகள் காப்பகதை நண்பர்களுடன் சேர்ந்து நிர்வகித்தாலும், அதிகமாக இவர் செலவிட்டநேரங்கள் காடுகளிலும், கடல்களிலும்,டிவி நிகழ்ச்சிகளிலும்தான்! இவரது ஆர்வம் இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமிருந்ததும் ஆச்சர்யமான விஷயம்தாம்!
ஒரு நிகழ்ச்சியில் தனது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு,முதலையிடம் ஸ்டீவ் காட்டிய விளையாட்டுகள் பார்த்தவர்களை பட படக்கவும் வைத்தது!பல விதமான விலங்குகளுடன் பழகி விளையாடி,வாழ்ந்தவர்.
ஒரு நாள் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி ஆராய - டாக்குமெண்டிரி பிலிம் எடுக்க - புறப்பட்டவர்,திரும்பும்போது உடம்பில் உயிர் இல்லை,உண்மையை சொல்லவேண்டுமென்றால் உடலே இல்லாத அள்வுக்கு அவரை சிதைந்திருந்தது அவர் வாழ் நாள் முழுவதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று!
விளையாட்டே வினையான சம்பவத்தை கண்டிப்பாக ஸ்டீவ் நினைத்திருக்க மாட்டார்! இவரது கடைசி நேர காட்சிகள் கூட டாக்குமெண்டிரி பிலிமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது,ஆனால் வெளியிடப்படவில்லை!
செப் 6ந் தேதியோடு அவர் இறந்து ஒரு வருடமாகிறது..! அவர் அரங்கேற்றி விட்டுச்சென்ற அரிய நிகழ்ச்சிகள் வரும் தலைமுறைகளுக்கு வன உயிரினங்கள் மீது ஆர்வத்தை தூண்டும்படியாக அமையும் என்பது நிச்சயம்!
இதோ கிளம்பிவிட்டார் ஸ்டீவின் வாரிசு காட்டு ராணியாக!
1 பேர் கமெண்டிட்டாங்க:
//செப் 6ந் தேதியோடு அவர் இறந்து ஒரு வருடமாகிறது..! அவர் அரங்கேற்றி விட்டுச்சென்ற அரிய நிகழ்ச்சிகள் வரும் தலைமுறைகளுக்கு வன உயிரினங்கள் மீது ஆர்வத்தை தூண்டும்படியாக அமையும் என்பது நிச்சயம்!
இதோ கிளம்பிவிட்டார் ஸ்டீவின் வாரிசு காட்டு ராணியாக!//
A very fine tribute to Steeve.
Your write-up evokes mixed feelings in me; i dont know whether to appreciate the endeavor of Steeve's daughter or not, given the life threatening risks that lay ahead in her road; the followers of this channel may still feel the pain of the tragic death of Steeve.
Post a Comment