கலைஞர் கேள்வி :- எதிர்க்கட்சிகள், ஆட்சியினரைத் தாக்குவதை விட அதிகமாக உங்களுடைய தோழமைக் கட்சியான பா.ம.க. தலைவர் தொடர்ந்து
உங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கிறாரே?
உங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கிறாரே?
கலைஞர் பதில் :- அவர் தாக்குவதாக யார் சொன்னது? ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைத்தான் வழங்குகிறார். தி.மு.க.வினர் அவர் பேசுவதை எப்படி எடுத்துக் கொண்டாலும், என்னைப் பொறுத்தவரையில் நான் அப்படித்தான் எடுத்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் அவர் எழுப்பிய பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளேன். அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் சமச்சீர் கல்வி வழங்குவதற்கான முத்துக்குமரன் குழுவினரின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, அதுபற்றி விவாதிக்கவும், முடிவு எடுக்கவும் சட்டப் பேரவையின் தனிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்றும் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.
உடனடியாக சட்டமன்றத்தை இதற்காகக் கூட்டி அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமென்கிறார். சில நாட்களுக்கு முன்பு டைட்டானியம் தொழிற் சாலை பற்றிய பிரச்சினை வந்தபோதும், சட்டமன்றத்தை இதற்காகக் கூட்டி விவாதிக்க வேண்டுமென்று அப்போதும் ஓர் அறிக்கை விடுத்தார் டாக்டர் ராமதாஸ்.
ஒவ்வொருநாளும் எழும் ஒவ்வொரு பிரச்சினைக்காக அவ்வப்போது சட்டமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்துவதென்பது இயலக் கூடிய காரியமா
என்பதை தமிழ்நாட்டிலே உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்! முறைப்படி, சட்டமன்றம் செப்டம்பர், அக்டோபர் திங்களில்கூடத்தான் இருக்கிறது. அப்போது இது பற்றியெல்லாம் விவாதிக்கத்தான் இருக்கிறோம். அதற்குள் சட்டமன்றத்தைக் கூட்டு என்பதும், அதிலே இதைப் பற்றி விவாதம் நடத்து, என்பதும் மேடைகளில் பேசுவதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்குமே தவிர, அரசை நடத்துவோருக்கு நடைமுறைச் சாத்தியமா என்பதையும் எண்ணிப் பார்ப்பது நல்லது.
மேலும் டாக்டர். முத்துக்குமரன் அறிக்கையினை நடைமுறைப்படுத்த முன்வரும் போது அதற்கு எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் தேவைப்படும். அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அவசரப் பட்டுப் பயனில்லை. இன்னும் சொல்லப் போனால், சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்திட தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளைப் போல இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாட மொழியாக்குவதற்கே இத்தனை ஆண்டுகாலமாகப் போராட வேண்டியிருந்தது. டாக்டர் ராமதாஸ் அவருடைய
அறிக்கையில் Òமுதல்வரின் குடும்பக் குழந்தைகளும், உயர் அதிகாரிகளின் குடும்பக் குழந்தைகளும், தொழிலாளியின் குழந்தைகளும் ஒரே பள்ளியில் அருகருகே அமர்ந்து படிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
என்னுடைய குடும்பக் குழந்தைகள் மீது டாக்டர் ராமதாசுக்கு எப்போதும் அக்கறை உண்டு என்பதை நான் அறிவேன். என்னைப் பொறுத்தவரையில்
எங்கோ உட்கார்ந்து கொண்டிருப்பவனாக என்னைக் கருதிக்கொள்பவன் அல்ல. அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களில் ஒருவனாகத்தான் என்னைக் கருதிக் கொண்டிருப்பவன்.
என் வீட்டுப் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால் டாக்டர் ராமதாசின் உள்ளத்தைப் புரிந்து
கொள்ளாமல், இன்றைய நாளேடு ஒன்று "டாக்டர் ராமதாசின் பேரக் குழந்தைகளை டெல்லியில் மேல் தட்டு வர்க்க பள்ளியில் படிக்க வைக்காமல், தமிழக அரசு ஆரம்பப் பள்ளிகளில் படிக்க வச்சிருக்கலாம்ல...! என்று விமர்சனம் செய்திருப்பதைப்போல, நான் பதில் அளிக்க விரும்பவில்லை....?!
0 பேர் கமெண்டிட்டாங்க:
Post a Comment