நாள் 24.09.06
நேரத்திற்கு வரவில்லையென்றாலும் சீக்கிரத்திலேயே கொண்டு வந்து விட்டுச்சென்ற அந்த கால் டாக்ஸி டிரைவருக்கும்;
நான் கண் கலங்காமல் இருக்க, தங்களுக்குள்ளேயே கிண்டலடித்து சிரித்துக்கொண்டிருந்த என் உயிர் நண்பர்களுக்கும்
கண் கலங்கினாலும் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட என் தாய்க்கும்;
அந்த நாள் வரையில் கலங்கிய நிலையில் பார்த்திராத, எனக்காக
கண் கலங்கி நின்ற என் சகோதரனுக்கும்;
கண் கலங்க நின்றிருந்தவனின், சோகத்தை பார்வையால் பரிமாறிக்கொண்ட, வரிசையில் நின்றிருந்த, வேறொரு நாட்டுக்கு சென்ற அந்த சகோதரிக்கும்;
ஒரு ரூபாய் தந்து தொலைபேசியில் தொலைவில் நின்றிருந்த என் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள செய்த அந்த் சகோதரனுக்கும்;
முன்பின் முகம் பாராமல் தம் நாட்டிலிருந்து வ்ருகிறான் எனற காரணத்திற்காக எனக்காக வந்து காத்திருந்த எனது உயர் அதிகாரிக்கும்;
அந்த இரவிலும் என்னுடன் இருந்து எனது தங்குமிடத்தை த்யார் செய்து தந்த வங்கத்து நண்பனுக்கும்;
ரம்லான் மாதத்தில் தனக்கா இருந்த உணவினை, முதல் வேளை உணவாக எனக்கு கொடுத்த தமிழகத்து நண்பனுக்கும்;
தமிழ் நாட்டிலிருந்து வரப்போகிறான் ஒருவன் என்று கேள்விப்பட்ட நாள் முதலே என்னைக்காண ஆவலுடன் இருந்த,
வந்த நாளிலிருந்தே, எனக்கு உணவும் கொடுத்து,என் பிரித்துயரத்தை நீக்கி,என்னுடனே உண்டு உறவாடி வரும் தமிழ் ஈழத்து சகோதரர்களுக்கும்:
என் மனம் நிறைந்த,
நன்றி!
நன்றி!!
நன்றி!!!
நாள் ; 24.09.07
1 பேர் கமெண்டிட்டாங்க:
எத்தனை பேருக்குத் திரும்பிப் பார்க்கும் போது நன்றி கூறும் மனம் வாய்க்கும்! வாழ்க!!
அன்புடன்,
மா சிவகுமார்
Post a Comment