ஆலமரத்தை பார்த்தால் ஒன்று அடையாறு ஞாபகத்திற்கு வரும் அல்லது இவர்களின் ஞாபகம் வரும் நம் சென்னை வாழ் மக்களுக்கு!
மனநலம் குன்றிய பெண்களுக்கான அடைக்கலமாக செயல்பட்டு வரும் இந்த பான்யன் அமைப்பு 1993 ல் தொடங்கப்பட்டு தனி நபர்களின் முழு ஒத்துழைப்புடனும்,அரசின் உதவியோடும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது!
சென்னை மாநகரத்தில் ஆதரவின்றி திரியும் பெண்கள்,குழந்தைகள் மற்றும் மன நலம் குன்றியவர்களுகளை பற்றி பொதுமக்கள்,காவல் துறையினரிடமிருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் அவர்களை அழைத்து அடைக்கலம் கொடுத்து,உணவு மருத்துவ வசதிகளை வழங்குவதோடு,முடிந்தவரையில் அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை கொண்டு, அவர்களை திரும்பவும் குடும்பத்துடன் இணைப்பதற்கான வழிகளை மேற்கொள்கின்றனர்!
பெரும்பாலன சமயங்களில், மனநலம் குன்றிய பெண்களை அவர்கள் குடும்பத்தார் ஏற்று கொள்ள மறுக்கும் சமயங்களிலோ அல்லது குடும்பம் சம்பந்தமானா தகவல்கள் இல்லாதப்போது தங்களின் மறுவாழ்வு மையங்களிலேயே அடைக்கலமளிக்கின்றனர்! பாதிக்கப்பட்டவ்ருக்கு வேண்டிய மருத்துவ வசதிகள் அளித்து, தினசரி பணிகளை கவனிக்க கூடிய வகையில் பயிற்சி அளித்து நார்மல் வாழ்க்கைக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எத்தனையோ பிரச்சனைகளுக்கு நடுவில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தாலும்,ஊரில் நம் குடும்பத்தினர்; சொந்தங்கள், நண்பர்கள் என ஒரு சூழலுக்குள் இருப்பதாலும் நமக்கு தினக்கவலை ஏதுமின்றி ஒரளவுக்கு நிம்மதியாக பணியாற்ற முடிகின்றது!
எத்தனையோ பிரச்சனைகளுக்கு நடுவில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தாலும்,ஊரில் நம் குடும்பத்தினர்; சொந்தங்கள், நண்பர்கள் என ஒரு சூழலுக்குள் இருப்பதாலும் நமக்கு தினக்கவலை ஏதுமின்றி ஒரளவுக்கு நிம்மதியாக பணியாற்ற முடிகின்றது!
வாழ்வின் ஏதோ ஒரு காரணத்தால் குடும்ப அமைப்பில் இருந்து விலகி,தவறி,மனநலம் குன்றி, ஆதரவின்றி,இது போன்ற அமைப்புக்களில் அடைக்கலமாகும்,மனித உறவுகளுக்கு நம்மாலான சிற்சில உதவிகளை செய்யலாமே!
இது நவீன யுகம்!
உதவிகள் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவும் வேண்டாம்
குழு அமைக்கவும் வேண்டாம்!
பெயர் பெரிதுபடுத்தவும் வேண்டாம்!
பெரிய அளவிலும் கூட தேவையில்லை,
இருந்த இடத்திலிருந்து அனைத்து உதவிகளையும் செய்யலாம், அது முடியவில்லையா, ஊரிலுள்ள உங்களின் உறவுகளிடம் சொல்லிக்கூட செய்யலாமே!
வலைப்பூக்களினூடாக சமூக சேவை செய்வதில் உங்களை முன்னிறுத்திக்கொள்ளுங்களேன்!
0 பேர் கமெண்டிட்டாங்க:
Post a Comment