பல நேரங்களில் கோவில்களுக்கு செல்கையில், இந்த 108 விஷயத்தை கேள்விப்பட்டதுண்டு, எதற்காக இந்த 108? ஏன் பெண்கள் 108 முறை சன்னதியை வலம் வருகின்றனர்? என்று, ஆனால் இதற்கென யாரிடமும் சென்று விளக்கம் கேட்டதில்லை!
சில நாட்கள் முன்பு பத்திரிக்கையாளர் ஞானியின் இக்கட்டுரையை தீம்த்ரிகிடவில் வாசித்தேன் – ஆனந்த விகடனில் ‘ஒ’ போட்டுக்கொண்டிருக்கிறாராம்!
சமய சம்பிரதாயங்களில் 108 என்ற எண் ஏன் புனிதமானதாகக் கருதப்படுகிறது என்று துருவத் தொடங்கியதில், சோதித்துப் பார்க்க முடியாத பல தகவல்கள் உட்பட, நிறைய விசித்திரமான தகவல்கள் கிடைத்தன.
உபநிஷதங்களின் எண்ணிக்கை 108;
கிருஷ்ணனின் சிநேகிதிகளான கோபிகைகள் 108 பேர்;
நடராஜரின் நடனத்தில் கரணங்கள் 108;
திபெத் பெளத்த சமய நம்பிக்கைப்படி மொத்த பாவங்கள் 108;
ஜப்பானில் 108 முறை மணி அடித்து, பழைய வருடத்துக்கு விடை தரப்படுகிறது:
நிர்வாண முக்தி நிலை அடைவதற்குக் கடக்க வேண்டிய உலகாயத சபலங்களின் எண்ணிக்கை 108;
போர்க் கலைகளில் மர்ம அடிகளுக்கான ஸ்தானங்கள் 108;
கராத்தேயில் ‘சூப்பரின்பெய்’ என்று குறிக்கப்படுவது சீன மொழியில் 108ன் உச்சரிப்பு;
‘தாஓ’ தத்துவத்தில், புனித நட்சத்திரங்கள் 108;
ஹோமரின் ‘ஒடிசி’ காவியத்தில், ஒடிசஸின் மனைவி பெனிலோப்பைத் திருமணம் செய்ய விரும்புகிறவர்கள் 108 பேர்;
பேஸ்பால் விளையாட்டின் பந்தில் இருக்கும் தையல்கள் 108;
முதல்முறையாக விண்வெளிக்குப் பயணம் செய்த சோவியத் வீரர் யூரி காக்ரின், விண்கலத்தில் உலகைச் சுற்றிய நேரம் 108 நிமிடங்கள்; கணிதத்தில் 108 ஒரு சிறப்பு எண். 1 x 1 x 2 x 2 x 3 x 3 x 3=108.
சம்ஸ்கிருத மொழியில் மொத்தம் 54 எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஆண், பெண் என்ற அடிப்படையில் 54 x 2 = 108.
மனித வாழ்க்கையின் உணர்ச்சிகள் கடந்த காலத்தில் 36, நிகழ்காலத்தில் 36, எதிர்காலத்தில் 36 என மொத்தமாக 108ஆம்!
ஜோசியத்தில் 12 வீடுகள் X 9 கிரகங்கள் = 108. (1 என்பது இறுதி உண்மைக்கான குறியீடு. 0 சூன்யம். 8 என்பது அளவற்ற நிரந்தரத்தின் குறியீடு.) சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல 108 மடங்கு. நாம் தினசரி 200x108 முறை மூச்சு விடுகிறோம்!
ரொம்ப யோசிச்சிருப்பாரேன்னு நினைக்க தோணுச்சு..!
1 பேர் கமெண்டிட்டாங்க:
வாவ்!! இவ்ளோ இருக்கா.. நல்ல தகவல்
Post a Comment