ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மே 21 ல் ஆரம்பித்து, ஒற்றை கண் சிவராசன் தற்கொலை செய்துகொண்ட ஆகஸ்ட் 20 வரைக்கும்மான, இடைப்பட்ட காலத்தில், நடக்கும் படுகொலை பற்றிய, விசாரணைகளை அடிப்படையாக கொண்ட கதை!
ராஜீவ் காந்தி படுகொலையானதற்கு பின்பு அமைக்கப்பட்ட சி.பி.ஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவின் செயல்பாடுகளையும், உண்மைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்!
அது மட்டுமல்லாமல் கேரக்டர்கள் கூட உண்மையான நபர்களின் பெயர்களுடனேயே...!
சி.பி.ஐ ஸ்பெஷல் இன்வெஷ்டிகேஷனில் பங்கு பெற்றவங்க பார்த்தாங்கான உண்மையிலேயே ,ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! மாதிரியான் மேட்டர் தான் படம் ஃபுல்லா! (டைரக்டரே அந்த டீம்ல இருந்தவர்தானாம்!)
கொலைக்கான காரணங்கள் அல்லது அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது சரியா தப்பா? விடுதலைப்புலிகள் செஞ்சது சரியா தப்பா? போன்ற விஷயங்களிலெல்லாம் ரொம்ப உள்ள போகாம, சாமர்த்தியமாக தவிர்த்து, ஒரு டிடெக்டிவ் ஆக்ஷன் படம் கொடுத்து அசத்தியிருக்காரு, டைரக்டரரு மேஜர் ரவி.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கம்பீரமான கமாண்டோ உடையில் கச்சிதமாக பொருந்துகிறார் அதுவும், அமைதிப்படை செய்தது என்ன? பழி ஒரிடம் பாவம் ஒரிடமாக இந்திய ராணுவத்துக்கே கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசிய்லவாதிகள் நடந்துகொண்ட விதம் பற்றி ஆகரோஷமாக பேசும் கட்டத்தில் சூப்பர்!
ஒரு கட்டத்தில் சிவ்ராசன் & கோ இருக்குமிடம் தெரிந்து,லோக்கல் போலீஸ் கமாண்டோக்களுக்கு தகவல் கொடுத்து வரச்சொல்ல, அங்கு வரும் மம்முட்டி & குரூப்ஸ் என்ன சார் வீட்டுக்கு பக்கத்திலேயே இப்படி வரச்சொன்னா எப்படி சார் நாங்க பிளான் பண்றதுன்னு? கோபப்படுறதும், லோக்கல் போலீஸ்ங்களோ என்னமோ மாமூல் வாங்க வந்த மாதிரி சிவ்ராசன் & கோ தங்கியிருக்கும் வீட்டு காம்பவுண்ட் வாசல்ல ஹாயா நிற்கறதும் ! டைரக்டர் சார் உண்மை கதைதானா...?!
கிளைமாக்ஸ் காட்சி சிவராசன் குரூப்ப கார்னர் பண்ணியாச்சு,வீட்ட சுத்தி ஆங்காங்கே கமண்டோஸ் வீட்டை குறி வைச்சப்படி பார்த்துக்கிட்டு இருக்க,ஆனா மேலிடத்திலிடத்திலிருந்து,பிடிக்கறதுக்கோ அல்லது சுடறதுக்கோ ஆர்டர் வரலை, நைட் ஆரம்பிச்ச ஆபரேஷன் ஒரு பிராக்ரஸூம் இல்லாம போய்க்கிட்டே இருக்க,பகல் ஆனதும் மக்கள்ஸ் கூட்டம் கூடி – பீச்ல பொம்மை துப்பாக்கியால பலூன் சுடறவனை பார்க்கற கூட்டம் மாதிரி - லோக்கல் போலீஸ் வந்து கூட்டத்தை கலைக்குது!
ஒரு வழியா அந்த மேலிடத்து ஆர்டர் போடற ஆசாமி வந்து,இப்ப போய் புடிங்கப்பான்னு சொல்ல, அதுவரைக்கும் சிவராசன் & கோ என்ன காத்துக்கிட்டா இருப்பாங்க..!?
கடைசியா என்ன மேட்டரு அப்படின்னு பார்த்தா, சிறப்பு பிரிவு அருமையான வாய்ப்பை தவறவிட்டதுக்கு காரணம், யார் பேரு வாங்கறதுங்கற போட்டித்தான்னு முடிக்க – முடிக்கலை அத வைச்சு நம்ம டி.ஆர் கார்த்திகேயன ஒரு இடி இடிச்சுருக்காரு, டைரக்டருன்னு சில மீடியாக்கள் சொல்ல ஆரம்பிக்க, ஆனா படம் கற்பனை கலந்த கதைன்னு டைரக்டர் சொல்லிட்டாரு!
சரி படம் எப்படி போய்க்கிட்டிருக்குன்னு கேட்கறீங்களா? எங்க போகுது பொட்டியிலயே படுத்து தூங்கிக்கிட்டு இருக்காம்...!? பின்ன 90% தமிழ் வசனங்கள் அத மலையாள படம்னு சொல்லி அங்க ரீலீஸ் பண்ணுனா எங்க போகும்? கொஞ்ச நாள்ல நம்ப ஊர்ல வரும் அப்ப பாருங்க!
0 பேர் கமெண்டிட்டாங்க:
Post a Comment