மறந்துட்டீங்களா? - அபி அப்பா..!


எங்களின் மண்ணின் மைந்தன் இந்த வாரம் ஸ்டாராக ஸ்டார் பண்ண ஆரம்பிச்சதுமே ஆயிரத்துக்குமேல பின் ஊட்டமிட்டு வாழ்த்திய பெருமக்களுக்கு மயிலாடுதுறை மக்கள்ஸ் சார்பாக நன்றிகள்!

Photo Sharing and Video Hosting at Photobucket


மயிலாடுதுறையின் வரலாற்று சுவட்டை மறந்த அபி அப்ஸ்!

Photo Sharing and Video Hosting at Photobucket


அதுநாள் வரையில் கொடைகானலிருந்தும், சென்னையிலிருந்தும் பெறப்படும் அலைகளினூடாக ஒலியும் ஒளியும் திரைப்படங்கள் கண்டுகளித்து, சில நேரங்களில் ரூபவாகினியில் புத்தன் சரணம் கச்சாமி பார்த்து வந்த மயிலாடுதுறை மக்களுக்கு, தந்தார் வரம்!

தொலைக்காட்சி நிலையம் @ மயிலாடுதுறை


மயிலாடுதுறையை துபாய் ஆக்க துணிந்தவரின் முதல் சாதனை!

அது முதல் ஊரே அல்லோகலப்பட்டது,பள்ளிக்கூடம் வரும் பசங்களெல்லாம் டேய் நம்ம அய்யிரு டிவி டேஷன் பெரிய ஆண்டெனா வைக்கற வேலை நடந்துக்கிட்டுருக்குடா! போன்ற டெய்லி ப்ராக்ரஸ் தெரிய ஆரம்பிச்சது!

கொஞ்ச நாள் பொறு தலைவா ரேஞ்சுக்கு காங்கிரஸ் பார்ட்டிக்களும் பாட ஆரம்பிச்சுட்டாங்க!


போற போக்கை பார்த்தா அய்யிரு ஊர எங்கயோ கொண்டு போயிடுவாரு போல அப்படின்னு மத்த கட்சிக்காரங்க (தி.மு.கவும் அ.தி.மு.கவும் தான்) பேச ஆரம்பிச்சுட்டாங்க!

அந்த நாளும் வந்தது!

இங்கன மேட்டருக்கு அபி அப்பாவிடமிருந்து சுட்டது!

************************************************************************************

கேபினெட் மினிஸ்டரா இருந்த மாதவராவ் சிந்தியாவை கெஞ்சி கூத்தாடி கூட்டிகிட்டு வந்துட்டார். அவர் கிட்ட பர்மிஷன் வாங்கியதும் நேரா அவருக்கு முன்னமே மாயவரம் வந்து அவரை வரவேற்க ஏற்பாடு செஞ்சார்.

அப்ப காமராஜ் மாளிகையில நடந்த காங்கிரஸ் செயல் வீரர் கூட்டத்துலே "அவர் கேபினட் மினிஸ்டர் என்பதால் ஹெலிகாப்டரில் வர்ரார் ஹெலிகாப்டர் பெரிய ராஜன் தோட்டத்தில் இறங்கும் பின்ன அங்கிருந்து காரில் காமராஜ் மாளிகையிலே மீட்டிங்"ன்னு அஜண்டாவை சொன்னாரு.

அவ்வளவுதான் மாயவரமே பத்திகிச்சு . பசங்க ரெடியாகிட்டாங்க வரவேற்பு குடுக்க. சரபுரன்னு முனிசிபாலிட்டி ஹெலி பேட் போடுறாங்க ராஜன் தோட்டத்திலே.

ரோடுக்கு எல்லாம் குளோரின் பவுடர், அதுக்கு முன்னால கலெக்டர் விசிட், தாசில்தார் ஹோட்டல்ல தயிர் சாத பொட்டலம் வாங்கி கிரவுண்டுலயே கொட்டிகிறார்.
ரெண்டு தொப்பை போலீஸ் ஹெலிபேட்க்கு காவல். தீயணைப்பு வண்டி மணியாட்டிகிட்டு அங்கயே பழி கிடக்குது. கதர் சட்டை கூட்டம் கூட்டமா நிக்குது.

அதை விட பெரிய கூத்து ஸ்கூல் லீவ் விடலாமா லோக்கல் ஹாலிடேன்னு ஹெட்மாஸ்டர் மீட்டிங் நடக்குது. மொத்தத்துல மயிலாடுதுறை கல்யாண பொண்ணு மாதிரி அல்ங்கரிச்சுகிட்டு நிக்குது.
எங்க எம்பிக்கோ பெருமை தாங்கலை. வந்து கிரவுண்டை பார்த்தார் அசந்து போயிட்டார்.

பொதுமக்கள் கூட்டம் அலை மோதுது. சாதாரணமா இத்தனை கூட்டம் வராதே அதனால தான வெறும் 75 பேர் உட்காரும் சின்ன காமராஜ் மாளிகையிலேயே கூட்டம் போடுறோம். சரி இந்த கூட்டத்தை விட கூடாது நாமளும் பார்க்கிலே கூட்டம் போட்டுட வேண்டியது தான் திமுக /அதிமுக மாதிரின்னு அய்யர் நெனச்சுகிட்டு அவசர அவசரமா பார்க்கிலே கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டார் மேடை எல்லாம் ரெடி ஆகிடுச்சு. காலையில 7 மணி முதல் நேரம் அதிகமாக அதிகமாக கூட்டம் அதிகமாகுது .

கிரவுண்டில் அவசர டீ கடை , ஐஸ் வண்டி, மிளகாய் பஜ்ஜி கடை, கடலை வண்டி ன்னு ஜே ஜேன்னு திருவிழா மாதிரி இருக்கு.

வந்தாருய்யா சிந்தியா ஒரு வழியா, மேலே இருந்து பார்க்கிறார். அப்படியே மாயவரமே ஒரு இடத்துல கூடி நிக்குது. அவருக்கு புல்லரிச்சு போச்சு. அவரு கைய காமிக்கிறார் . நம்ம ஜனங்க அப்படியே பாச மழையிலே குதிச்சு குதிச்சு கை காட்டுறானுங்க. பசங்க ஆர்வத்தை பார்த்துட்டு அவரு பைலட் கிட்ட சொல்லி மூணு ரவுண்ட் அடிக்கிறாரு.

ஒரே ஆரவாரம் , அய்யர் கண்ணுல ஆனந்த கண்ணீர் மாயவரம் பாசக்கார பசங்களோட ஆதரவ நெனைச்சு.

மெதுவா கீழ இறங்குது ஹெலிகாப்டர், ஒரு 30 அடி உயர்த்துல வரும் போது அதன் ஃபேன் சுத்தின வேகத்துல கீழே கிடந்த காஞ்சு போன புழுதி பறந்து அந்த ஹெலிகாப்டரே மறைஞ்சு போச்சு ஓரு வழியா கீழே லேண்ட் ஆகிடுச்சு.

************************************************************************************
அங்கேயிருந்து அப்படியே கிளம்பி வைத்தீஸ்வரன் கோவில் போற வழியில எட்டாவது கி.மீட்டர்ல சோழசக்கர நல்லூர்தான் ஸ்பாட் (எங்களுக்கு அப்ப அதுதான் டிவி கோயிலு)

ஒரு பேரணி மாதிரி பின்னாடியே காரு ஸ்கூட்டரு சைக்கிளு (அது என்னை மாதிரி எளவட்டங்கள்) சில வயசான கேஸுங்க ஹெலிகாப்டர பார்த்துக்கிட்டே ராஜன் தோட்டம் மரத்தடியிலேயே குந்த வைச்சி உக்காந்துட்டுதுங்க ( அபி அப்பா.!??)

காரணம் ஒண்ணுமில்லைங்க ராஜன் தோட்டத்துல இறங்குனவரு பின்ன அங்க வந்துதானே ஏறியாகணும் அப்ப எப்படி ஹெலிக்காப்டர் கிளப்பறாங்கன்னு பார்த்துட முடியும்ல!

சரி எதுக்கு பின்ன சோழசக்கர நல்லூருக்கு போனங்கன்னு கேட்கறீங்களா? அங்கதானே மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்திலேயே முதன் முதலாக ஏன் மாவட்டத்திலேயே முதல் முறையாக பெரிய கட்-அவுட் ஒரு 25 அடி இருக்கும் ரோட்டுக்கு இந்த பக்கம் மாதவராவ் சிந்தியா அந்தாண்ட பக்கம் அய்யிரு கை ஆட்டற மாதிரி வைச்சிருந்தாங்க!

அத அண்ணாந்து பார்த்துக்கிட்ட சுமாரா ஒரு பத்து நிமிஷம் பிரமிச்சுப்போயிட்டாரு சிந்தியா! (அதுதான் அவருக்கு முதல் அனுபவமாக இருக்கும் போல..!)

அப்புறம் ஒரு நல்ல நேரமா பார்த்து எல்லார் வீட்டு டி.விலயும் சோழசக்கரநல்லூரிலிருந்து அலைவரிசை 1 தொடர்கிறது காமிச்சாரு!

திரும்ப ரிடர்ன் ஜர்னி! அவ்ளோதான்

கடைசியா...!

எங்க ஊருக்காரருக்கு வயசாயிடுச்சுல்ல அதான் நெறைய விஷயம் மறந்துப்போச்சு..!

நீங்க அதெப்பத்தியெல்லாம் கவலைப்படாம சும்மா! கும்மு, கும்முன்னு கும்மியெடுங்க!



3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சூப்பர்! ஆயில்யா! நான் அப்போ அந்த கூட்டத்தில் இருந்தவன் தான், அப்போ நீங்க சிறுவனா இருந்திருக்கலாம், எல்லாம் சரிதான், இந்த கட்டுரை சரிதான், நான் கொஞ்சம் மட்டுமே மாத்தினேன் காமடிக்காக(அன்று பார்க்கில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட வில்லை, அது தவிர சோழ சக்கர நல்லூரில் நடந்த கூட்டத்திலும் நான் போனேன், காரணம் பூண்டி அய்யா வந்திருந்தார், அவருக்கு கதை மாலை அணிவிக்க அப்பா போனாங்க அப்போ நானும் போனேன்!!!

said...

கதர் மாலை என்பது கதை மாலைன்னு டைப் ஆகிடுச்சுப்பா!

said...

ஸ்டார் டென்ஷன்ல இருக்குறது புரியுதுங்கண்ணா!

ஆமாம் பூண்டி அய்யா பத்தி ஏதாவது ஸ்பெஷல் உண்டா இந்த வாரம்?