இசை ஒன்றாக இருந்தாலும்,
சொல்லும் விஷயங்களோ பல....!
ஏர்டெல்லும் விஷயங்கள்.!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
கலர் கோழி
‘எல்லாம் சில காலம்’, என்னும் தத்துவம் அந்த பிஞ்சுகளுக்கு தெரியாது! ஆனால் பிஞ்சு பருவத்திலேயே நமக்கு அந்த தத்துவத்தை உணர்த்த போடும் வேஷம் தான் கலர் கோழிகள்!
கோயில் திருவிழாக்களில், பள்ளிக்கூட வாசல்களில், தட்டி அல்லது பட்டி அடைத்து கிடக்கும் அந்த பிஞ்சுகளின் கூட்டத்தை, காண்பவர்கள் அனைவரையுமே, கவர்ந்திழுக்க வைக்கும் காட்சிதான்!
சில நேரங்களில் கூடைமேல், கூடைமேல், கூடை வைத்து கூவி வருபவனின் ‘கலர்கோழி’ ‘கலர்கோழி’ எனற குரல், அவனுக்கு அன்றாட வருமானம் ஆனால், அக்கோழிகளுக்கு அவலக்குரல்தானே!
சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கலர் கோழிகள் எனக்கு மட்டுமா? கோழி விற்பவனைக்கண்டால், தெருவே அதிரும்..!
எப்படியாவது ஒரு மாதமாவது கோழிக்குஞ்சுகளை வளர்த்து பெரியதாக்கி அதன் மூலம் கிடைக்கும் முட்டையையே மூலதனமாக்கி நாம் பெரும் காசு சேர்க்கவேண்டுமென்பது என் இளம் கால கனா!
ஆனால் ஒரு வாரம் வைத்து வளர்ப்பதற்கே நான் படும் பாடு நான் மட்டுமல்ல, அந்த கோழியும்தான்! பள்ளி செல்லும் வரை என கண் காணிப்பில் இருக்கும் அந்த கோழிக்குஞ்சுகள் பின் கூண்டில் அடைக்கப்பட்டு உத்திரத்தில் தொங்கவிடப்படும்! (அப்பத்தான் அது பத்திரமா இருக்கும் – இது பக்கத்து வீட்டு பையன் எனக்கு சொன்ன அட்வைஸ்!)
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் பாட்டி வீட்டு வாசலிலேயே சொல்லிவிடுவாள்!
சின்னபயலே..! நான் செட்டியாரு கடைக்கு போய்ட்வரதுக்குள்ளயே அந்த பாழாப்போன பூனை உள்ளாற பூந்து அதம் பண்ணிட்டு போயிடுச்சிடா!
கொஞ்சம் நேரம் சேதமடைந்து கிடக்கும் அந்த கூண்டு கலர்கோழிகளின் ரோமத்தின் எச்சங்கள், என அதையே பார்த்துகொண்டிருந்துவிட்டு, டேய் பூனை..! உன்னை கொல்றதுக்கு ஒரு ஆளு வருவான்டா! என மனதுக்குள் சவால்விட்டப்படி உறங்கிப்போவேன்..!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: மீண்டும் மலரும்
இன்வெஸ்ட்மெண்ட் ஆர்வம் உள்ளவர்களுக்கு..!
முதலீட்டாளார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, முதலீடுகள் சம்பந்தமான விவரங்களை அறிந்துகொள்ளவும் , முதலீடு சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலும் பிரத்யோகமான ஒரு இணையத்தளத்தினை நமது இந்திய அரசு உருவாக்கியுள்ளது!
Investor Education and Protection Fund
முதலீட்டாளார்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கும் அனைத்து தகவல்களும்,பாதுகாப்பான முதலீடு பற்றிய விளக்கங்களும் இதில் இடம் பெற்றுள்ளன!
தனியார் நிறுவனங்களின் இணையங்களில் பெரும்பாலும் அதிக விபரங்களை அனுமதிக்கமாட்டார்கள், ஆனால் இந்த இணையத்தளம் முதலீட்டாளர்கள் தங்களுக்கு தேவையான A – Z தகவல்கள் அனைத்தையும் இங்கிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்!
இந்த செப்டம்பர் மாதம் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
MISSION 90 DAYS – மலையாள சித்ரம்
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மே 21 ல் ஆரம்பித்து, ஒற்றை கண் சிவராசன் தற்கொலை செய்துகொண்ட ஆகஸ்ட் 20 வரைக்கும்மான, இடைப்பட்ட காலத்தில், நடக்கும் படுகொலை பற்றிய, விசாரணைகளை அடிப்படையாக கொண்ட கதை!
ராஜீவ் காந்தி படுகொலையானதற்கு பின்பு அமைக்கப்பட்ட சி.பி.ஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவின் செயல்பாடுகளையும், உண்மைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்!
அது மட்டுமல்லாமல் கேரக்டர்கள் கூட உண்மையான நபர்களின் பெயர்களுடனேயே...!
சி.பி.ஐ ஸ்பெஷல் இன்வெஷ்டிகேஷனில் பங்கு பெற்றவங்க பார்த்தாங்கான உண்மையிலேயே ,ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! மாதிரியான் மேட்டர் தான் படம் ஃபுல்லா! (டைரக்டரே அந்த டீம்ல இருந்தவர்தானாம்!)
கொலைக்கான காரணங்கள் அல்லது அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது சரியா தப்பா? விடுதலைப்புலிகள் செஞ்சது சரியா தப்பா? போன்ற விஷயங்களிலெல்லாம் ரொம்ப உள்ள போகாம, சாமர்த்தியமாக தவிர்த்து, ஒரு டிடெக்டிவ் ஆக்ஷன் படம் கொடுத்து அசத்தியிருக்காரு, டைரக்டரரு மேஜர் ரவி.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கம்பீரமான கமாண்டோ உடையில் கச்சிதமாக பொருந்துகிறார் அதுவும், அமைதிப்படை செய்தது என்ன? பழி ஒரிடம் பாவம் ஒரிடமாக இந்திய ராணுவத்துக்கே கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசிய்லவாதிகள் நடந்துகொண்ட விதம் பற்றி ஆகரோஷமாக பேசும் கட்டத்தில் சூப்பர்!
ஒரு கட்டத்தில் சிவ்ராசன் & கோ இருக்குமிடம் தெரிந்து,லோக்கல் போலீஸ் கமாண்டோக்களுக்கு தகவல் கொடுத்து வரச்சொல்ல, அங்கு வரும் மம்முட்டி & குரூப்ஸ் என்ன சார் வீட்டுக்கு பக்கத்திலேயே இப்படி வரச்சொன்னா எப்படி சார் நாங்க பிளான் பண்றதுன்னு? கோபப்படுறதும், லோக்கல் போலீஸ்ங்களோ என்னமோ மாமூல் வாங்க வந்த மாதிரி சிவ்ராசன் & கோ தங்கியிருக்கும் வீட்டு காம்பவுண்ட் வாசல்ல ஹாயா நிற்கறதும் ! டைரக்டர் சார் உண்மை கதைதானா...?!
கிளைமாக்ஸ் காட்சி சிவராசன் குரூப்ப கார்னர் பண்ணியாச்சு,வீட்ட சுத்தி ஆங்காங்கே கமண்டோஸ் வீட்டை குறி வைச்சப்படி பார்த்துக்கிட்டு இருக்க,ஆனா மேலிடத்திலிடத்திலிருந்து,பிடிக்கறதுக்கோ அல்லது சுடறதுக்கோ ஆர்டர் வரலை, நைட் ஆரம்பிச்ச ஆபரேஷன் ஒரு பிராக்ரஸூம் இல்லாம போய்க்கிட்டே இருக்க,பகல் ஆனதும் மக்கள்ஸ் கூட்டம் கூடி – பீச்ல பொம்மை துப்பாக்கியால பலூன் சுடறவனை பார்க்கற கூட்டம் மாதிரி - லோக்கல் போலீஸ் வந்து கூட்டத்தை கலைக்குது!
ஒரு வழியா அந்த மேலிடத்து ஆர்டர் போடற ஆசாமி வந்து,இப்ப போய் புடிங்கப்பான்னு சொல்ல, அதுவரைக்கும் சிவராசன் & கோ என்ன காத்துக்கிட்டா இருப்பாங்க..!?
கடைசியா என்ன மேட்டரு அப்படின்னு பார்த்தா, சிறப்பு பிரிவு அருமையான வாய்ப்பை தவறவிட்டதுக்கு காரணம், யார் பேரு வாங்கறதுங்கற போட்டித்தான்னு முடிக்க – முடிக்கலை அத வைச்சு நம்ம டி.ஆர் கார்த்திகேயன ஒரு இடி இடிச்சுருக்காரு, டைரக்டருன்னு சில மீடியாக்கள் சொல்ல ஆரம்பிக்க, ஆனா படம் கற்பனை கலந்த கதைன்னு டைரக்டர் சொல்லிட்டாரு!
சரி படம் எப்படி போய்க்கிட்டிருக்குன்னு கேட்கறீங்களா? எங்க போகுது பொட்டியிலயே படுத்து தூங்கிக்கிட்டு இருக்காம்...!? பின்ன 90% தமிழ் வசனங்கள் அத மலையாள படம்னு சொல்லி அங்க ரீலீஸ் பண்ணுனா எங்க போகும்? கொஞ்ச நாள்ல நம்ப ஊர்ல வரும் அப்ப பாருங்க!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: சினிமா
மாயாவி
டைரக்டர் பாலா + கலைப்புலி தாணு உதவியுடன் தயாரித்த படம்,இயக்கியது, பாலாவின் உதவி டைரக்டராக பணிபுரிந்த சிங்கம்புலி! (பிதாமகன் ரீமிக்ஸ் சாங்குக்கு ஐடியா கொடுத்ததும் இவர்தானாம்)
சூர்யா ஜோதிகா ஜோடியின் வெற்றிப்படமாக, அமைந்திருக்கவேண்டியது, ஆனால் என்ன காரணமோ – மக்கள்ஸோட டேஸ்ட் அந்த டைம்ல எப்படி இருந்துச்சோ தெரியலை படம் ஃபிளாப் ஆகிப்போச்சு!
பொதுவா பார்த்தா படத்தில கதை லாஜிக்ஸ்ன்னு ஒண்ணும் கிடையாது!
ஆனாலும் பாருங்க, படம் காமெடியாத்தான் போகும்,சூர்யாவோட கேரக்டர் கொஞ்சம் சோகம்,நெறையா காமெடி ஸ்டைல்ல, வித்தியாசமா பண்ணியிருப்பாரு, பிட் டைப் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்ல ஆளு அசத்தியிருப்பாரு!
ஜோடியாகத்தான் கடைசியில் இணைவார்கள் என்ற நம்பிக்கையை பொய்க்க செய்யும் கிளைமாக்ஸ்!
நடிகை ஜோதிகாவை மீட்டு தரவேண்டி உண்ணவிரத காட்சியிலும் சரி டான்ஸ் மூவ்மெண்ட்களிலும் சரி சூர்யா அசத்தியிருப்பாரு! அதுவும் அந்த பென்சில் மீசையும் விதவிதமான கலர்களில் டிரெஸும் சூப்பர்!
அதை விட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் இடங்களிலும்,(ஒவர் ஆக்டிங்காக இருந்தாலும் ) அசத்தல்தான்!
சூர்யாவின நண்பராக, வரும் சத்யன் சிம்ரன் ரசிகர் மன்றம் பற்றி ஜோதிகாவிடம் சொல்லி கலாய்ப்பதும், ஜோ ஜோ ஜோதிகா பாடலிலும், நல்லாவே பண்ணியிருப்பாரு! – அனேகமாக அதுதான் ஹீரோ பொசிசன்லேர்ந்து, ஹீரோவுக்கு ப்ரெண்ட் கேரக்டர்களா டவுனான படமென நினைக்கிறேன்!
படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வரும் அந்த இன்ஸ்பெக்டர் ஜோ அம்மாக்கிட்ட விசாரணை நடத்தும்போதும் சரி,சூர்யாவோட உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் சீனிலும் நன்றாகவே பண்ணியிருப்பாரு!
பாலா தயாரிப்பு படம்னா எதாவது சென் டிமெண்ட் சீன் இருந்தாகுணும்ல அதுக்குத்தான் சிகப்பி கேரக்டர்!
கெஸ்ட் ரோலில் விக்ரம் வருவார் என பிரபலப்படுத்தப்பட்டாலும்,பிதாமகன் சம்பள பிரச்சனையால் அவர் நடிக்கவில்லை!
தெலுங்கு இசையமைப்பாளார் தேவிப்ரசாத்தின் இசையில் பாடல்களும் அதிலும் புஷ்பவனம் குப்பு சாமியின் பாடல் ஆட்டம் போட வைக்கும் வகைதான்!
சிகப்பி பாடும் கடவுள் தந்த அழகிய வாழ்வு உண்மையிலேயே சிந்திக்க வைக்கும் வரிகள் – படத்தோடு சேர்ந்து இந்த பாடலும் அந்தளவுக்கு பேசப்படாமல் மறைந்து போனது! நேரம் இருக்கறப்ப நீங்க கேட்டு பாருங்களேன்!
என்னடா ரெண்டு வருஷத்துக்கு முன்ன வந்த படத்த பத்தி இப்ப, அப்படின்னு கேட்கறீங்களா? இப்பத்தாங்க் நெறையா டைம் கிடைக்குது அதுவுமில்லாம, ஆன்லைன்ல போட்டி போட்டுக்கிட்டு படம் கொடுக்கறாங்களே!
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: சினிமா
மறந்துட்டீங்களா? - அபி அப்பா..!
எங்களின் மண்ணின் மைந்தன் இந்த வாரம் ஸ்டாராக ஸ்டார் பண்ண ஆரம்பிச்சதுமே ஆயிரத்துக்குமேல பின் ஊட்டமிட்டு வாழ்த்திய பெருமக்களுக்கு மயிலாடுதுறை மக்கள்ஸ் சார்பாக நன்றிகள்!
மயிலாடுதுறையின் வரலாற்று சுவட்டை மறந்த அபி அப்ஸ்!
அதுநாள் வரையில் கொடைகானலிருந்தும், சென்னையிலிருந்தும் பெறப்படும் அலைகளினூடாக ஒலியும் ஒளியும் திரைப்படங்கள் கண்டுகளித்து, சில நேரங்களில் ரூபவாகினியில் புத்தன் சரணம் கச்சாமி பார்த்து வந்த மயிலாடுதுறை மக்களுக்கு, தந்தார் வரம்!
தொலைக்காட்சி நிலையம் @ மயிலாடுதுறை
மயிலாடுதுறையை துபாய் ஆக்க துணிந்தவரின் முதல் சாதனை!
அது முதல் ஊரே அல்லோகலப்பட்டது,பள்ளிக்கூடம் வரும் பசங்களெல்லாம் டேய் நம்ம அய்யிரு டிவி டேஷன் பெரிய ஆண்டெனா வைக்கற வேலை நடந்துக்கிட்டுருக்குடா! போன்ற டெய்லி ப்ராக்ரஸ் தெரிய ஆரம்பிச்சது!
கொஞ்ச நாள் பொறு தலைவா ரேஞ்சுக்கு காங்கிரஸ் பார்ட்டிக்களும் பாட ஆரம்பிச்சுட்டாங்க!
போற போக்கை பார்த்தா அய்யிரு ஊர எங்கயோ கொண்டு போயிடுவாரு போல அப்படின்னு மத்த கட்சிக்காரங்க (தி.மு.கவும் அ.தி.மு.கவும் தான்) பேச ஆரம்பிச்சுட்டாங்க!
அந்த நாளும் வந்தது!
இங்கன மேட்டருக்கு அபி அப்பாவிடமிருந்து சுட்டது!
************************************************************************************
கேபினெட் மினிஸ்டரா இருந்த மாதவராவ் சிந்தியாவை கெஞ்சி கூத்தாடி கூட்டிகிட்டு வந்துட்டார். அவர் கிட்ட பர்மிஷன் வாங்கியதும் நேரா அவருக்கு முன்னமே மாயவரம் வந்து அவரை வரவேற்க ஏற்பாடு செஞ்சார்.
அப்ப காமராஜ் மாளிகையில நடந்த காங்கிரஸ் செயல் வீரர் கூட்டத்துலே "அவர் கேபினட் மினிஸ்டர் என்பதால் ஹெலிகாப்டரில் வர்ரார் ஹெலிகாப்டர் பெரிய ராஜன் தோட்டத்தில் இறங்கும் பின்ன அங்கிருந்து காரில் காமராஜ் மாளிகையிலே மீட்டிங்"ன்னு அஜண்டாவை சொன்னாரு.
அவ்வளவுதான் மாயவரமே பத்திகிச்சு . பசங்க ரெடியாகிட்டாங்க வரவேற்பு குடுக்க. சரபுரன்னு முனிசிபாலிட்டி ஹெலி பேட் போடுறாங்க ராஜன் தோட்டத்திலே.
ரோடுக்கு எல்லாம் குளோரின் பவுடர், அதுக்கு முன்னால கலெக்டர் விசிட், தாசில்தார் ஹோட்டல்ல தயிர் சாத பொட்டலம் வாங்கி கிரவுண்டுலயே கொட்டிகிறார்.
ரெண்டு தொப்பை போலீஸ் ஹெலிபேட்க்கு காவல். தீயணைப்பு வண்டி மணியாட்டிகிட்டு அங்கயே பழி கிடக்குது. கதர் சட்டை கூட்டம் கூட்டமா நிக்குது.
அதை விட பெரிய கூத்து ஸ்கூல் லீவ் விடலாமா லோக்கல் ஹாலிடேன்னு ஹெட்மாஸ்டர் மீட்டிங் நடக்குது. மொத்தத்துல மயிலாடுதுறை கல்யாண பொண்ணு மாதிரி அல்ங்கரிச்சுகிட்டு நிக்குது.
எங்க எம்பிக்கோ பெருமை தாங்கலை. வந்து கிரவுண்டை பார்த்தார் அசந்து போயிட்டார்.
பொதுமக்கள் கூட்டம் அலை மோதுது. சாதாரணமா இத்தனை கூட்டம் வராதே அதனால தான வெறும் 75 பேர் உட்காரும் சின்ன காமராஜ் மாளிகையிலேயே கூட்டம் போடுறோம். சரி இந்த கூட்டத்தை விட கூடாது நாமளும் பார்க்கிலே கூட்டம் போட்டுட வேண்டியது தான் திமுக /அதிமுக மாதிரின்னு அய்யர் நெனச்சுகிட்டு அவசர அவசரமா பார்க்கிலே கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டார் மேடை எல்லாம் ரெடி ஆகிடுச்சு. காலையில 7 மணி முதல் நேரம் அதிகமாக அதிகமாக கூட்டம் அதிகமாகுது .
கிரவுண்டில் அவசர டீ கடை , ஐஸ் வண்டி, மிளகாய் பஜ்ஜி கடை, கடலை வண்டி ன்னு ஜே ஜேன்னு திருவிழா மாதிரி இருக்கு.
வந்தாருய்யா சிந்தியா ஒரு வழியா, மேலே இருந்து பார்க்கிறார். அப்படியே மாயவரமே ஒரு இடத்துல கூடி நிக்குது. அவருக்கு புல்லரிச்சு போச்சு. அவரு கைய காமிக்கிறார் . நம்ம ஜனங்க அப்படியே பாச மழையிலே குதிச்சு குதிச்சு கை காட்டுறானுங்க. பசங்க ஆர்வத்தை பார்த்துட்டு அவரு பைலட் கிட்ட சொல்லி மூணு ரவுண்ட் அடிக்கிறாரு.
ஒரே ஆரவாரம் , அய்யர் கண்ணுல ஆனந்த கண்ணீர் மாயவரம் பாசக்கார பசங்களோட ஆதரவ நெனைச்சு.
மெதுவா கீழ இறங்குது ஹெலிகாப்டர், ஒரு 30 அடி உயர்த்துல வரும் போது அதன் ஃபேன் சுத்தின வேகத்துல கீழே கிடந்த காஞ்சு போன புழுதி பறந்து அந்த ஹெலிகாப்டரே மறைஞ்சு போச்சு ஓரு வழியா கீழே லேண்ட் ஆகிடுச்சு.
************************************************************************************
அங்கேயிருந்து அப்படியே கிளம்பி வைத்தீஸ்வரன் கோவில் போற வழியில எட்டாவது கி.மீட்டர்ல சோழசக்கர நல்லூர்தான் ஸ்பாட் (எங்களுக்கு அப்ப அதுதான் டிவி கோயிலு)
ஒரு பேரணி மாதிரி பின்னாடியே காரு ஸ்கூட்டரு சைக்கிளு (அது என்னை மாதிரி எளவட்டங்கள்) சில வயசான கேஸுங்க ஹெலிகாப்டர பார்த்துக்கிட்டே ராஜன் தோட்டம் மரத்தடியிலேயே குந்த வைச்சி உக்காந்துட்டுதுங்க ( அபி அப்பா.!??)
காரணம் ஒண்ணுமில்லைங்க ராஜன் தோட்டத்துல இறங்குனவரு பின்ன அங்க வந்துதானே ஏறியாகணும் அப்ப எப்படி ஹெலிக்காப்டர் கிளப்பறாங்கன்னு பார்த்துட முடியும்ல!
சரி எதுக்கு பின்ன சோழசக்கர நல்லூருக்கு போனங்கன்னு கேட்கறீங்களா? அங்கதானே மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்திலேயே முதன் முதலாக ஏன் மாவட்டத்திலேயே முதல் முறையாக பெரிய கட்-அவுட் ஒரு 25 அடி இருக்கும் ரோட்டுக்கு இந்த பக்கம் மாதவராவ் சிந்தியா அந்தாண்ட பக்கம் அய்யிரு கை ஆட்டற மாதிரி வைச்சிருந்தாங்க!
அத அண்ணாந்து பார்த்துக்கிட்ட சுமாரா ஒரு பத்து நிமிஷம் பிரமிச்சுப்போயிட்டாரு சிந்தியா! (அதுதான் அவருக்கு முதல் அனுபவமாக இருக்கும் போல..!)
அப்புறம் ஒரு நல்ல நேரமா பார்த்து எல்லார் வீட்டு டி.விலயும் சோழசக்கரநல்லூரிலிருந்து அலைவரிசை 1 தொடர்கிறது காமிச்சாரு!
திரும்ப ரிடர்ன் ஜர்னி! அவ்ளோதான்
கடைசியா...!
எங்க ஊருக்காரருக்கு வயசாயிடுச்சுல்ல அதான் நெறைய விஷயம் மறந்துப்போச்சு..!
நீங்க அதெப்பத்தியெல்லாம் கவலைப்படாம சும்மா! கும்மு, கும்முன்னு கும்மியெடுங்க!
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
வெளையாட்டு பசங்க...!
எனக்கு கை வலிக்குதுப்பா கிட்ட போய் அடிச்சுட்டு வர்றேன்!
டேய்...! பைப்ப காட்ச் புடிச்சு உள்ள உட்டெறிடா!
பார்த்தாலே சும்மா அதிருதுதா? இது சும்மா சாம்பிள்தான்!
டேய் உள்ள போகதீங்க, அங்க எல்லாரும் விளையாடிக்கிட்டிருங்காக அங்க போயி அவங்கள் டிஸ்டர்ப் பண்ணாதீங்க்!
யப்பா இந்த பய பவுலிங் சரியில்லப்பா விக்கெட் குறிபார்க்கமாட்டிக்கிறான்!
தம்பி வேணாம் தம்பி அத நான் எடுத்துட்டு போறேன்..!
அகிம்சா வழியில் ஆர்ப்பாட்டம்..!? (சும்மா கைய தூக்குனா அது வன்முறையாகிடுமா?)
வீட்டுக்காரி கொடிக்கட்ட கம்பு கேட்ட இது கரெக்ட்டா இருக்கும்முனு நெனைக்கிறேன்..!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
நன்றிகளுடன் திரும்பி பார்க்கிறேன்..!
நாள் 24.09.06
நேரத்திற்கு வரவில்லையென்றாலும் சீக்கிரத்திலேயே கொண்டு வந்து விட்டுச்சென்ற அந்த கால் டாக்ஸி டிரைவருக்கும்;
நான் கண் கலங்காமல் இருக்க, தங்களுக்குள்ளேயே கிண்டலடித்து சிரித்துக்கொண்டிருந்த என் உயிர் நண்பர்களுக்கும்
கண் கலங்கினாலும் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட என் தாய்க்கும்;
அந்த நாள் வரையில் கலங்கிய நிலையில் பார்த்திராத, எனக்காக
கண் கலங்கி நின்ற என் சகோதரனுக்கும்;
கண் கலங்க நின்றிருந்தவனின், சோகத்தை பார்வையால் பரிமாறிக்கொண்ட, வரிசையில் நின்றிருந்த, வேறொரு நாட்டுக்கு சென்ற அந்த சகோதரிக்கும்;
ஒரு ரூபாய் தந்து தொலைபேசியில் தொலைவில் நின்றிருந்த என் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள செய்த அந்த் சகோதரனுக்கும்;
முன்பின் முகம் பாராமல் தம் நாட்டிலிருந்து வ்ருகிறான் எனற காரணத்திற்காக எனக்காக வந்து காத்திருந்த எனது உயர் அதிகாரிக்கும்;
அந்த இரவிலும் என்னுடன் இருந்து எனது தங்குமிடத்தை த்யார் செய்து தந்த வங்கத்து நண்பனுக்கும்;
ரம்லான் மாதத்தில் தனக்கா இருந்த உணவினை, முதல் வேளை உணவாக எனக்கு கொடுத்த தமிழகத்து நண்பனுக்கும்;
தமிழ் நாட்டிலிருந்து வரப்போகிறான் ஒருவன் என்று கேள்விப்பட்ட நாள் முதலே என்னைக்காண ஆவலுடன் இருந்த,
வந்த நாளிலிருந்தே, எனக்கு உணவும் கொடுத்து,என் பிரித்துயரத்தை நீக்கி,என்னுடனே உண்டு உறவாடி வரும் தமிழ் ஈழத்து சகோதரர்களுக்கும்:
என் மனம் நிறைந்த,
நன்றி!
நன்றி!!
நன்றி!!!
நாள் ; 24.09.07
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நன்றி
காயத்ரி அக்கா’வின் கவிதைச்சரத்திற்கு – போட்டியாக..!
இந்த வார நட்சத்திரமான காயத்ரி அக்கா ஒரே கவிதைகள் போட்டு, கவிதைகளமாக்கி கொண்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க!
நம்ம மட்டும் சும்மாவா! தமிழ் கவிதைகளவிடுங்க, தமிழ் கவிதைகளோடா இன்னும் சூப்பரான கவிதைகளெல்லாம் மலையாளத்துல இருக்கறது நெறையா பேருக்கு தெரியாது அதனால மலையாள மனேரமாவில வந்த இந்த கவிதைய பாருங்க!
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: மாமியார் வீடு, மொக்கை
தி பான்யன் – போய்த்தான் பாருங்களேன்!
மனநலம் குன்றிய பெண்களுக்கான அடைக்கலமாக செயல்பட்டு வரும் இந்த பான்யன் அமைப்பு 1993 ல் தொடங்கப்பட்டு தனி நபர்களின் முழு ஒத்துழைப்புடனும்,அரசின் உதவியோடும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது!
சென்னை மாநகரத்தில் ஆதரவின்றி திரியும் பெண்கள்,குழந்தைகள் மற்றும் மன நலம் குன்றியவர்களுகளை பற்றி பொதுமக்கள்,காவல் துறையினரிடமிருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் அவர்களை அழைத்து அடைக்கலம் கொடுத்து,உணவு மருத்துவ வசதிகளை வழங்குவதோடு,முடிந்தவரையில் அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை கொண்டு, அவர்களை திரும்பவும் குடும்பத்துடன் இணைப்பதற்கான வழிகளை மேற்கொள்கின்றனர்!
எத்தனையோ பிரச்சனைகளுக்கு நடுவில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தாலும்,ஊரில் நம் குடும்பத்தினர்; சொந்தங்கள், நண்பர்கள் என ஒரு சூழலுக்குள் இருப்பதாலும் நமக்கு தினக்கவலை ஏதுமின்றி ஒரளவுக்கு நிம்மதியாக பணியாற்ற முடிகின்றது!
வாழ்வின் ஏதோ ஒரு காரணத்தால் குடும்ப அமைப்பில் இருந்து விலகி,தவறி,மனநலம் குன்றி, ஆதரவின்றி,இது போன்ற அமைப்புக்களில் அடைக்கலமாகும்,மனித உறவுகளுக்கு நம்மாலான சிற்சில உதவிகளை செய்யலாமே!
இது நவீன யுகம்!
உதவிகள் செய்வதற்கு கூட்டம் சேர்க்கவும் வேண்டாம்
குழு அமைக்கவும் வேண்டாம்!
பெயர் பெரிதுபடுத்தவும் வேண்டாம்!
பெரிய அளவிலும் கூட தேவையில்லை,
இருந்த இடத்திலிருந்து அனைத்து உதவிகளையும் செய்யலாம், அது முடியவில்லையா, ஊரிலுள்ள உங்களின் உறவுகளிடம் சொல்லிக்கூட செய்யலாமே!
வலைப்பூக்களினூடாக சமூக சேவை செய்வதில் உங்களை முன்னிறுத்திக்கொள்ளுங்களேன்!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: உதவி
சிவாஜி 100
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ரஜினி
வேட்டையன் @ கலைஞர்
சந்திரமுகியின் 804 வது நாள் வெற்றி விழா கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது!
கலைஞர் டிவி காண கிடைக்காதவர்களுக்காக வேண்டி எடுத்தது, ரஜினி ரசிகர்கள் இணையத்திலிருந்து....!
நன்றி!
கலைஞர் டிவி
ரஜினிஃபேன்ஸ்.காம்
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நிகழ்வுகள், மொக்கை, ரஜினி
108 & பத்திரிக்கையாளர் ஞானி
பல நேரங்களில் கோவில்களுக்கு செல்கையில், இந்த 108 விஷயத்தை கேள்விப்பட்டதுண்டு, எதற்காக இந்த 108? ஏன் பெண்கள் 108 முறை சன்னதியை வலம் வருகின்றனர்? என்று, ஆனால் இதற்கென யாரிடமும் சென்று விளக்கம் கேட்டதில்லை!
சில நாட்கள் முன்பு பத்திரிக்கையாளர் ஞானியின் இக்கட்டுரையை தீம்த்ரிகிடவில் வாசித்தேன் – ஆனந்த விகடனில் ‘ஒ’ போட்டுக்கொண்டிருக்கிறாராம்!
சமய சம்பிரதாயங்களில் 108 என்ற எண் ஏன் புனிதமானதாகக் கருதப்படுகிறது என்று துருவத் தொடங்கியதில், சோதித்துப் பார்க்க முடியாத பல தகவல்கள் உட்பட, நிறைய விசித்திரமான தகவல்கள் கிடைத்தன.
உபநிஷதங்களின் எண்ணிக்கை 108;
கிருஷ்ணனின் சிநேகிதிகளான கோபிகைகள் 108 பேர்;
நடராஜரின் நடனத்தில் கரணங்கள் 108;
திபெத் பெளத்த சமய நம்பிக்கைப்படி மொத்த பாவங்கள் 108;
ஜப்பானில் 108 முறை மணி அடித்து, பழைய வருடத்துக்கு விடை தரப்படுகிறது:
நிர்வாண முக்தி நிலை அடைவதற்குக் கடக்க வேண்டிய உலகாயத சபலங்களின் எண்ணிக்கை 108;
போர்க் கலைகளில் மர்ம அடிகளுக்கான ஸ்தானங்கள் 108;
கராத்தேயில் ‘சூப்பரின்பெய்’ என்று குறிக்கப்படுவது சீன மொழியில் 108ன் உச்சரிப்பு;
‘தாஓ’ தத்துவத்தில், புனித நட்சத்திரங்கள் 108;
ஹோமரின் ‘ஒடிசி’ காவியத்தில், ஒடிசஸின் மனைவி பெனிலோப்பைத் திருமணம் செய்ய விரும்புகிறவர்கள் 108 பேர்;
பேஸ்பால் விளையாட்டின் பந்தில் இருக்கும் தையல்கள் 108;
சம்ஸ்கிருத மொழியில் மொத்தம் 54 எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஆண், பெண் என்ற அடிப்படையில் 54 x 2 = 108.
மனித வாழ்க்கையின் உணர்ச்சிகள் கடந்த காலத்தில் 36, நிகழ்காலத்தில் 36, எதிர்காலத்தில் 36 என மொத்தமாக 108ஆம்!
ஜோசியத்தில் 12 வீடுகள் X 9 கிரகங்கள் = 108. (1 என்பது இறுதி உண்மைக்கான குறியீடு. 0 சூன்யம். 8 என்பது அளவற்ற நிரந்தரத்தின் குறியீடு.) சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல 108 மடங்கு. நாம் தினசரி 200x108 முறை மூச்சு விடுகிறோம்!
ரொம்ப யோசிச்சிருப்பாரேன்னு நினைக்க தோணுச்சு..!
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
ச்சூடான இடுகைகள்..!
நார்மலாத்தான் வாழ்ந்துக்கிட்டுருப்போம் ஒரு நாள் திடீருன்னு பார்த்தீங்கன்னா ரொம்ப இன்ட்ரஸ்ட் வந்து பரண்ல போய் ஒக்காந்துக்கிட்டு, அங்க இருக்கற ஒவ்வொரு பொருளா எடுத்து, - உபயோகமா இருந்தாலும் சரி இல்லை, நோ யூஸ் மேட்டரா இருந்தாலும் சரி எடுத்து வைச்சிகிட்டு,ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு ஃபீல் ஆகி கொஞ்சம் சிரிப்பு,கொஞ்சம் அழுகை இப்படியா நேரம் போயிக்கிட்டே இருக்கும்!
அத போலத்தான் திடீருன்னு தமிழ்மணத்துக்காரங்களுக்கு என்ன ஆச்சோ? தெரியலை, கொஞ்சம் பழச தோண்டிருப்பாங்க போல, அட..! சங்கதி நல்லாத்தானே இருக்கு அப்படின்னு, நினைச்சு சரி இத ப்ரெண்டு பேஜ்ல வைச்சா கொஞ்சம் நல்லாத்தான் இருக்குமுனு நினைச்சு,ச்சூடான இடுகையை தூக்கி கடைசியில கடாசிட்டு முதல் பக்கத்திலேயே பரண்லேர்ந்து எல்லா மேட்டரையும் இறக்கிக்கிட்ட்டு இருக்காங்க! (சில மூத்த பதிவர்கள் இத பார்த்து மலரும் நினைவுகளில் முழ்கிப்போயிருக்காங்களாம்)
புதுசா வரவங்களுக்கு பழைய சரித்திர?! சம்பவங்கள தெரிஞ்சுக்கிறதும் நல்லதுதானே.! அப்ப அருமையா பதிஞ்சவங்கெல்லாம் இப்ப......
அது சரி, ச்சூடான மேட்டரு வர வர ரொம்ப அதிகமா போறதாலயும் அதுக்குன்னு ஒரு தனி இடம் கொடுத்துட்டாங்க போல..!
ச்சூடான மேட்டருக்கு கொஞ்சம் இந்த வார்த்தைகள்ல மட்டும் தலைப்பு கொடுத்தாபோதும், அப்படியே பத்திக்கும்
போலி
நான் போறேன்
நான் வரமாட்டோன் போ..!
ஹா ஹாஹஹஹ..! (சிரிப்பு சரியா வரமாட்டேங்குது)
ரஜினி
பெரியார்
பதிவர்கள் பேரில் பதிவுகள்
என்னைய கூப்பிட்டாங்க
நாய்,போடா,கம்னாட்டி பேமானனி
இன்னும் டைப்ப பண்ணவே கஷ்டப்படுத்தும் வார்த்தைகள்
அதுக்காக ச்சூடான மேட்டருங்கள கடைசியில போட்டா ச்சூடு ஆறிடாதான்னு கேட்கறவங்களுக்கு, இன்னின்ன காரண்ங்களுக்காக தமிழ்மணம் கடைசி பக்கத்தில் கொண்டு போய் சூட்டை தவிர்க்க முயற்சித்துள்ளது தெரிகிறது
1.ஒண்ணுமேயில்லாத பதிவுகளில் பேரு மட்டும் சும்மா ச்சூடு பறக்க வைத்து முதல் பக்கத்தை பிடிக்கும் சிலருக்காக
2.சூடுன்னு ஒரு பதிவர் பதிவு போட்டா உடனே அதப்பார்த்துட்டு நல்ல சூடு, செம ஹீட்டுமா, அய்யோ சூடு தாங்கலையே என வரும் கன்டினியூ பதிவுகளை கட்டுப்படுத்த!
3.சும்மாச்சுக்கும் ஒரு பதிவ போட்டுக்கிட்டு அதபோய் தமிழ்மணத்துல அமுக்கோ அமுக்குன்னு அமுக்கி, பதிவு பண்ற யோசனைய விட பல மடங்கு -ச்சூடான இடத்த பிடிக்கறதுன்னு - யோசனை பண்ணி திரியும் என்னை போல சிலருக்கு பலருக்கு பெப்பே காண்பிக்க!
4.கடந்த மாதங்களில் வந்த என்னன்னவோ பிரச்சனைகுரிய வாரங்களால் தமிழ்மணத்தில் கொஞ்சம் தீஞ்ச வாசனை வந்ததற்கு காரணமே இந்த ச்சூடான இடுகைகள்தான் கண்டுபுடிச்சுட்டாங்க! சொல்லமுடியாதுங்க, கொஞ்ச நாள்ல ச்சூடு அமிஞ்சும் போகலாம்! அதுவுமில்லாம தனக்கு தானே பின்னூட்டமிடுதல் மூலம் ஹாட்டாகும் பதிவுகளுக்காக இன்னும் கொஞ்சம் காலத்தில் 40+ம் அப்பீட்டாகபோகிறதாம்!
இதெல்லாம் நான் ச்சும்மா இருக்கறப்ப கண்டுபுடிச்ச விஷயமுங்க!
(நான் என்ன பண்றது மேட்டரே இல்லை ஆனாலும் பதிஞ்சாகுணுமுல எதையாச்சும்!? வேலை வேற பாதி நேரம் தான்! ஒரு மாசத்துக்கும் இப்படித்தான் கன்னாபின்னான்னு வரும் கண்டுக்காம போயிக்கிட்டே இருங்க!)
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: வெட்டி முயற்சி
மரணம் துரத்திய மனிதன்!
2004 டிசம்பர் 26 உலகையே கலக்கிய சுனாமியில், புக்கெட்டில் போய் சேர்ந்திருக்க வேண்டிய மனிதர் ராபர்ட், ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
ஆஸ்திரேலியாவில் பெர்த்லிருந்து புக்கெட் வந்து பொழப்பை பார்த்துக்கிட்டிருந்தவர்
இரண்டாவது முறையாக கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்திலும்,சிக்கி கைகளிலும்,கால்களிலும் தீக்காயங்களுடன் சக பயணியால் காப்பாற்றப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் ராபர்ட்!
நல்லபடியாக உடல்நலம் பெற்று மூட்டை முடிச்சோட ஊர பார்க்க போய் சேர, நல்ல புத்திய கொடுக்கணுமுனு, நாம ஆண்டவன் வேண்டுவோம்!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நிகழ்வுகள்
புள்ளையாரு வாங்க போறேன்..!
தெரியிது, அத வீட்டுக்கு எடுத்து வந்தாத்தான் என்ன? ஏன் இப்படி என் உயிர வாங்குறப்பா?
என்ன பிரச்சனைன்னா - எடுத்து வர்றதுதான்!?
அந்த பொம்மக்காரன் அப்பதான் ஃபிரஷ் பீஸா கொடுப்பான் அத, எடுத்து பலகையில குந்த வைச்சு, களிமண்ணால சைடு கொடுத்து, கூடைக்குள்ள வைக்கறது இருக்கே அதாங்க பிரச்சனையே ரொம்ப கஷ்ட்டப்பட்டு வைச்சு ஒரு கையால பேலன்ஸ் பண்ணி சைக்கிள் ஓட்டிட்டு போய் வீட்ல பார்த்த
விநாயகர் தும்பிக்கைக்குள்ள சின்னதா இன்னொரு தும்பிக்கை முளைச்சிருக்கும் - விரிசல் விட்டிருக்கும்- அத அப்படியே சைடு கட்டுன களிமண்ணால டச்- அப் பார்த்து கொண்டு போய் உள்ள வைச்சாத்தான் பாதி உயிரு திரும்ப வரும்!
பார்த்துப்பாரு!
வர்றதுக்கு எனக்கு அழைப்பு வரும்!
பார்க்கறதுக்கு!
(சொல்லாமல் விட்டது)
இல்லடா, நம்ம காய்கறிக்காரன் நாளைக்கு புள்ளையாரத்தான் விக்க போறானாம்! தெரு புல்லா ஆர்டர் எடுத்துட்டு போயிருக்கான்!?
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: பண்டிகை
நானும் போறேன்..! - நீங்களும் வர்றீங்களா?
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் 3ம் ஆண்டில்
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற போகும்,
தலைவன் அழைக்கிறான் புதுக்கோட்டைக்கு!
முதல்வர்களுக்கெல்லாம் பாராட்டு விழா எடுத்த,
நாளைய அரசாங்கமே அழைக்கிறது உங்களை..!
இன்று புதுக்கோட்டை..!
நாளை புனித ஜார்ஜ் கோட்டை...!!
நாளானைக்கு செங்கோட்டை...!!!
நான் போறேன் நீங்களும் வர்றதா இருந்தா,ஏதாவது பை பாஸ் ரோட்ல வெள்ளை வேஷ்டி,சட்டை போட்டுகிட்டு நில்லுங்க யாரவது அழைச்சிட்டு போயிடுவங்க!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நிகழ்வுகள், மொக்கை
என்ன பண்றது தலைவாஆஆஆ!? - ஆனால் எப்போதும் ஜெயிப்போம்
தலைவா...!நாங்கள் அப்போதே நினைத்தோம்!
சில சமயங்களில் கண்ணீர் விட்டு தவித்தோம்..!
அவர்களை அரியணை ஏற விட்டு அமைதிகாத்தாய் நீ!
நாங்களும் காத்திருந்தோம்! (நாலு காசு கிடைக்குமா? என்று..!)
கடைசியில்...
கலை(ஞர்) உன்னிடமிருந்து விலகி செல்ல..!
மனம் கொதியோ கொதியென்று கொதித்தது எங்களுக்கு!
கலைஞர் டிவியாவது உன்னை அரட்டையை அரவணைக்கும்! என்று
எதிர்பார்த்து ஏமாந்தோம்..!
இனியும்...!
இதற்குமேலும் நீ தரவேண்டாம் அவர்களுக்கு ஆதரவு!
விலகி வா...!
விஜய(ம்) வேண்டி வருபவர்களை அரவணைப்போம்!
இனி வரும் காலங்களில் நாம் ஜெயிப்போம்...!
(பின்குறிப்பு)என்னையும் எவனும் வேற கட்சியில சேர்த்துக்க மாட்டிக்கிறான்!உன்னையும் எவனும் கூட வைச்சுக்க மாட்டிக்கறான்என்ன பண்றது தலைவா!
இவண்,
********
நகரச் செயலாளர்,
1.தாயக மறுமலர்ச்சி கழகம்
2.பேரு மறந்துப்போச்சி
3.லட்சிய திராவிட முன்னேற்றகழகம்
4.சிம்பு சினி ரசிகர் மன்றம்
5.லிட்டில் சூப்ப்ர் ஸ்டார் 4பேர் அவை
மயிலாடுதுறை
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நிகழ்வுகள்
அஞ்சா நெஞ்சன்-அழகிரி!
டியர் உடன் பிறப்ஸ்!
இதெல்லாம்,
கொஞ்சம்
ஒவரா தெரியலை..!
அதுக்கும் இதுக்கும் ஒண்ணும் சம்பந்தமில்லை!
கொஞ்சமா சிரிச்சுட்டு
போகறதுக்குத்தான்....!?
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நிகழ்வுகள்
டாக்டர்.கலைஞர் Vs டாக்டர். ஐயா
உங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கிறாரே?
உடனடியாக சட்டமன்றத்தை இதற்காகக் கூட்டி அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமென்கிறார். சில நாட்களுக்கு முன்பு டைட்டானியம் தொழிற் சாலை பற்றிய பிரச்சினை வந்தபோதும், சட்டமன்றத்தை இதற்காகக் கூட்டி விவாதிக்க வேண்டுமென்று அப்போதும் ஓர் அறிக்கை விடுத்தார் டாக்டர் ராமதாஸ்.
ஒவ்வொருநாளும் எழும் ஒவ்வொரு பிரச்சினைக்காக அவ்வப்போது சட்டமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்துவதென்பது இயலக் கூடிய காரியமா
என்பதை தமிழ்நாட்டிலே உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்! முறைப்படி, சட்டமன்றம் செப்டம்பர், அக்டோபர் திங்களில்கூடத்தான் இருக்கிறது. அப்போது இது பற்றியெல்லாம் விவாதிக்கத்தான் இருக்கிறோம். அதற்குள் சட்டமன்றத்தைக் கூட்டு என்பதும், அதிலே இதைப் பற்றி விவாதம் நடத்து, என்பதும் மேடைகளில் பேசுவதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்குமே தவிர, அரசை நடத்துவோருக்கு நடைமுறைச் சாத்தியமா என்பதையும் எண்ணிப் பார்ப்பது நல்லது.
மேலும் டாக்டர். முத்துக்குமரன் அறிக்கையினை நடைமுறைப்படுத்த முன்வரும் போது அதற்கு எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் தேவைப்படும். அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அவசரப் பட்டுப் பயனில்லை. இன்னும் சொல்லப் போனால், சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்திட தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளைப் போல இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாட மொழியாக்குவதற்கே இத்தனை ஆண்டுகாலமாகப் போராட வேண்டியிருந்தது. டாக்டர் ராமதாஸ் அவருடைய
அறிக்கையில் Òமுதல்வரின் குடும்பக் குழந்தைகளும், உயர் அதிகாரிகளின் குடும்பக் குழந்தைகளும், தொழிலாளியின் குழந்தைகளும் ஒரே பள்ளியில் அருகருகே அமர்ந்து படிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
என்னுடைய குடும்பக் குழந்தைகள் மீது டாக்டர் ராமதாசுக்கு எப்போதும் அக்கறை உண்டு என்பதை நான் அறிவேன். என்னைப் பொறுத்தவரையில்
எங்கோ உட்கார்ந்து கொண்டிருப்பவனாக என்னைக் கருதிக்கொள்பவன் அல்ல. அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்களில் ஒருவனாகத்தான் என்னைக் கருதிக் கொண்டிருப்பவன்.
என் வீட்டுப் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால் டாக்டர் ராமதாசின் உள்ளத்தைப் புரிந்து
கொள்ளாமல், இன்றைய நாளேடு ஒன்று "டாக்டர் ராமதாசின் பேரக் குழந்தைகளை டெல்லியில் மேல் தட்டு வர்க்க பள்ளியில் படிக்க வைக்காமல், தமிழக அரசு ஆரம்பப் பள்ளிகளில் படிக்க வச்சிருக்கலாம்ல...! என்று விமர்சனம் செய்திருப்பதைப்போல, நான் பதில் அளிக்க விரும்பவில்லை....?!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நிகழ்வுகள்
முதலை வீரன்!
ஆனால் கல்லூரிக்கு சென்றாலோ, யாரும் கேபிள் டிவியில படம் பார்த்ததை பற்றி பேச மாட்டார்கள்,ஏதாவது இங்கிலீஸ் சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவே பேசும்போது,எனக்கு கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது! என்னாடா நம்ம பிரெண்டுகள்லாம் எங்கயோ போய்ட்டானுங்க!? ஆனா, நாம மட்டும் இந்த சினிமாவை பார்த்துக்கிட்டு இருக்கறது தப்பாச்சேன்னு?! ஒரு ஆவேசத்தோட வந்து டிவியை போட்டு குடைஞ்சி கண்டெடுத்ததுதான் இந்த புரோகிராம்!
மலைப்பாம்புக்கிட்ட விளையாடுறது, தண்ணியில முதலைக்கு போக்கு காட்டுறது எல்லாமே ஒரு திரில்லிங்காவும் இருக்கும், அதே சமயம் அந்த மாதிரி நிகழ்ச்சிகளில ஆர்வமும் வந்துச்சு!அப்புறமென்ன அடுத்த நாளே ஆரம்பிச்சாசு காலேஜ்ல கதை சொல்றத!
ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சின்னு சொல்லணுமுனா, ஸ்டீவ் இர்வினோடதுதான் மனுசன் ஒரு சின்ன புள்ளை மாதிரி போய் விளையாடுறதும்,அதில உள்ள ரிஸ்க் பத்தி கவலைப்படாததும்,இவருக்கு இந்நிகழ்ச்சி முலமா பல ரசிகர்கள உருவாக்கிச்சுன்னு சொன்னா அதான் உண்மை!
ஆஸ்திரேலியாவில குயின்ஸ்லாண்டில், ஸ்டீவவின் பெற்றோர்களால் பராமரிக்கப்பட்டு வந்த வனவிலங்குகள் காப்பகதை நண்பர்களுடன் சேர்ந்து நிர்வகித்தாலும், அதிகமாக இவர் செலவிட்டநேரங்கள் காடுகளிலும், கடல்களிலும்,டிவி நிகழ்ச்சிகளிலும்தான்! இவரது ஆர்வம் இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமிருந்ததும் ஆச்சர்யமான விஷயம்தாம்!
ஒரு நிகழ்ச்சியில் தனது குழந்தையை கையில் வைத்துக்கொண்டு,முதலையிடம் ஸ்டீவ் காட்டிய விளையாட்டுகள் பார்த்தவர்களை பட படக்கவும் வைத்தது!பல விதமான விலங்குகளுடன் பழகி விளையாடி,வாழ்ந்தவர்.
ஒரு நாள் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி ஆராய - டாக்குமெண்டிரி பிலிம் எடுக்க - புறப்பட்டவர்,திரும்பும்போது உடம்பில் உயிர் இல்லை,உண்மையை சொல்லவேண்டுமென்றால் உடலே இல்லாத அள்வுக்கு அவரை சிதைந்திருந்தது அவர் வாழ் நாள் முழுவதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று!
விளையாட்டே வினையான சம்பவத்தை கண்டிப்பாக ஸ்டீவ் நினைத்திருக்க மாட்டார்! இவரது கடைசி நேர காட்சிகள் கூட டாக்குமெண்டிரி பிலிமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது,ஆனால் வெளியிடப்படவில்லை!
செப் 6ந் தேதியோடு அவர் இறந்து ஒரு வருடமாகிறது..! அவர் அரங்கேற்றி விட்டுச்சென்ற அரிய நிகழ்ச்சிகள் வரும் தலைமுறைகளுக்கு வன உயிரினங்கள் மீது ஆர்வத்தை தூண்டும்படியாக அமையும் என்பது நிச்சயம்!
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நிகழ்வுகள்