பளீஸ் வேணாம்..!


இது ரொம்ப சகஜமானதொரு அனைவராலும் அலட்சியமாக அட! இதனால என்ன பெருசா ஆகிடப்போகுதுன்னு மனோபாவத்தோடு செய்யப்படும் சமூக பணி!

சுத்தம் செய்யும் பணிதான் ஆனாலும் ஊர் சுத்தமாகிறது - உலகம் அசுத்தமாக்கப்படுகிறது!

குப்பைகளாகிவிட்ட இலை தழைகளை தீயிலிட்டு தயவு செய்து எரிக்காதீர்கள் என்று பல இடங்களிலிருந்து பலமுறை வேண்டுக்கோள்கள் விடுக்கப்பட்டும் கூட,மக்களிடம் பழக்கமாகிவிட்ட இந்த வழக்கத்தினை மாற்ற இயலவில்லை :-(

சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி வரைமுறைக்குட்பட்டு நடக்கும் அரசாங்க அலுவலகங்களில் கூட இதே முறையினைத்தான் பின்பற்றப்பட்டு வருகிறது! அலுவலக வளாகங்களில் வளர்ந்து நிற்கும் மரங்களின் இலைகள் வாரத்திற்கொருமுறை இவ்வாறு தீயிலிட்டு எரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது!

பெரும்பாலும் இப்படியாக அப்புறப்படுத்தும் பணிகள் அதிகாலை வேளைகளிலோ அல்லது இரவு நேரங்களிலோதான் நடைப்பெறும்!

இப்படி எரிக்கப்படும் போது வெளிப்படும் மிக நுண்ணிய தூசுகள் அந்த புகையாக வெளிப்பட்டு காற்றில் கலக்கிறது!

காற்றினை சுவாசிப்பவர்களின் சுவாசக்காற்றாக மாறுகின்றது பின் வெகு விரைவில் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகச்செய்கிறது!

சிறு பணியாக நாம் செய்தது பெரும் தவறாக வியாபித்து நம்மையே நோய் கொண்டு வதைக்கிறது!

நம்மால் முடிந்தவரை தடுப்போம்!

நம்மால் முடிந்தவரை தவிர்ப்போம்!

20 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

ஆஸ்துமா நோயாளிகள் இந்தப்புகையினால கஷ்டப்படறதைப்பாத்திருக்கேன்.

said...

//வரைமுறைக்குட்பட்டு நடக்கும் அரசாங்க அலுவலகங்களில் கூட இதே முறையினைத்தான் பின்பற்றப்பட்டு வருகிறது!//

இது உண்மை. குப்பையை சேகரித்துச் செல்ல வேண்டிய மாநகராட்சி ஊழியர்கள் சில சமயங்களில் எரித்து விட்டுச் சென்று விடுகின்றனர், அள்ளிக் கொண்டு தள்ளிச் செல்லும் வேலை மிச்சம் என்றோ என்னவோ:(!

said...

விழிப்புணர்வு பதிவுக்கு பாராட்டுக்கள்

said...

நல்ல விசயம். காற்று மாசு அடைவதைத் தவிர்க்க பொதுகக்களிடம் விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று.

said...

நல்ல பதிவு அண்ணா :))

said...

புகையில் எந்தப் புகை நல்ல புகை?

எந்தப் புகையுமே வேணாம் ப்ளீஸ்

said...

சுத்தம்
செய்யும் பணிதான்
ஆனாலும் ஊர்
சுத்தமாகிறது - உலகம் அசுத்தமாக்கப்படுகிறது!



###########

said...

சிறு பணியாக
நாம் செய்தது
பெரும் தவறாக
வியாபித்து
நம்மையே
நோய் கொண்டு
வதைக்கிறது!/////////////


உண்மை,,,,உண்மை

said...

உண்மைதான், இதற்கான மாற்று வழிமுறைகளை கையாள மக்களும் அரசும் முன் வர வேண்டும்.

நல்ல பதிவு

said...

புகை, பகை என்பதை எல்லோரும்
புரிந்து பின்பற்ற வேண்டும்.


நாட்டுப்பற்று உள்ளவர்களுக்கு ஒரு நல்ல பதிவு

said...

நல்ல விசயம்...

said...

ஆயில்யன் அண்ணன் சொல்லி இருக்கார் அதை எல்லோரும் கேட்டுக்கணும் சரியா...!

said...

சுத்தமான பதிவு! நல்ல கருத்துக்கள்!

said...

சமுதாயத்தை எப்படியாச்சும் திருத்த
நல்ல முயற்சி எடுக்கறீங்க அண்ணா!

said...

நியாயமான கோரிக்கை தான்

said...

நல்ல கோரிக்க அண்ணே! புகை நமக்கு பகை! அது புகையிலையால் வந்தாலும் சரி! குப்பை எரிப்பதால் வந்தாலும் சரியே!

said...

மிக அதிக அளவு குப்பை

சேரும்போது அதை எரித்து விடுவது

ஒரு வகையில் சரி என்று தான் தோன்றுகிறது

சென்னை போன்ற பெரிய இடங்களில் சேர்த்து வைக்க

பட்ட குப்பை மழையில் நனைந்து அதிலிருந்து

வெளிப்படுகிற நாற்றம் அதன் சுற்று புறத்தில்

நிரந்தரமாக தீமையை உண்டாக்குகிறது!


எரிக்கும் போது எரிகிற வரை மட்டும்தான்

பிரச்சனை!

மலை போல சேர்கின்ற குப்பையை எரிக்காமல்

அழிக்க என்னதான் செய்வது?

said...

//ஜீவன் said...
மிக அதிக அளவு குப்பை

சேரும்போது அதை எரித்து விடுவது

ஒரு வகையில் சரி என்று தான் தோன்றுகிறது

சென்னை போன்ற பெரிய இடங்களில் சேர்த்து வைக்க

பட்ட குப்பை மழையில் நனைந்து அதிலிருந்து

வெளிப்படுகிற நாற்றம் அதன் சுற்று புறத்தில்

நிரந்தரமாக தீமையை உண்டாக்குகிறது!


எரிக்கும் போது எரிகிற வரை மட்டும்தான்

பிரச்சனை!

மலை போல சேர்கின்ற குப்பையை எரிக்காமல்

அழிக்க என்னதான் செய்வது?
//
புகையாக்கி செல்வதை விட, பூமியில் விதையாக்கி விட்டால் நலமாகுமாம்! பெரும்பாலானோர் கூறியிருக்கின்ற மாற்றுவழி இதுவே!

said...

நல்ல பதிவு ஆயில்யன்! இதை எல்லாம் சேர்த்து இயற்கை உரம் தயாரிக்கலாம்

said...

நல்லது சொல்றீங்க.. + ஒரு ஓட்டு.