பாலு - உக்கார சீட் இல்ல - தயாநிதி!




என்ன கொடுமை பாலு இது !






நன்றி - தினமணி

பயம்..!


நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் வலை;பலர் அளவுக்கு அதிகமாகவே பிணைத்துக்கொண்டிருப்பார்கள்.

பயம் எல்லோருக்குமே இயற்கைதான்! ஆனால் கண்டபடி பயப்படுவதும், அளவுக்கு அதிகமாக பயப்படுவதும், தினப்படி பயப்படுவதும் உடல்நிலையினை பாதிப்புக்கு கொண்டு வந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ள விஷயங்களாம்!

பயத்திற்கான காரணம் என்ன?

அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?

என்ன மாதிரியான தீர்வுகள் உண்டு?

என்ன மாதிரியான முடிவுகளை நாம் எடுக்க இயலும்

இப்படியாக எந்த ஒரு பயத்தை ஏற்படுத்தும் விஷயத்தையும் அலசி ஆராய்ந்து
காயப்போட்டால், பயத்தினால் ஒரு காயமும் உண்டாகாது மனத்தில்!

நம் வாழ்க்கை என்பது ஒரு பராமரிப்பு பயணம் அல்ல, வாழ்வில் புதுப்பரிணாமங்கள் வளர்ச்சிகள் தவறுகளை செய்தல், தவறுகளை திருத்திக்கொள்ளுதல் என வாழ்க்கை பயணம் அமையவேண்டும்!

பயம் கண்டு ஓடாதீர்கள்!

பயம் உங்களை கண்டு பயந்து ஓடும்படி செல்லுங்கள் வெல்லுங்கள்!

இன்னும் சில அறிஞர்கள் உங்களுக்கு பயம் வரணும்ப்பா!? அப்பத்தான் உங்களையே நீங்க கேள்வி கேட்டுக்க முடியும் அப்படின்னு அட்வைஸ் பண்றாங்க ஆமாங்க அதுவும் கூட சரிதானே!

ஒவ்வொரு முறை பயம் வரும்போதும் அது எப்படி நமக்குள் வந்தது? நாம் என்ன தவறு செய்தோம்? என்று நமக்குள்ளேயே கேள்விகள் எழவைக்க வேண்டும்!

சரி பயத்தை எப்படி ஈசியா போக்கலாம்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது!

ஆன்மீகம், காதல், நட்பு இப்படி பல வழிகள் இருக்கு ஆனால் அதை ஒவ்வொண்ணா விளக்கமா சொல்றதுக்கு எனக்கு இப்ப ரொம்ப பயமா இருக்கறதால மீ த எஸ்கேப்பு!

மே 2009 - PITக்கு!












இது ச்சும்மா!

கானா பிரபா!



நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா

அன்புடன்,
ஆயில்யன்

அமிர்தவர்ஷினி அம்மா!



பிறரின் சுயநல சூதாட்டத்தில்
வெட்டுப்பட்டுக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

தவறிப்போய் விழும் தாயங்களும்
மீட்டெடுத்துக் கொள்கிறது
தனக்கான காய்களை

அதிசயமாய் விழும் ஆறும் பன்னிரெண்டும்
நகர்த்திப்போகிறது நமக்கான இருப்பிடத்தை

வெட்டுப்படுவதும்,விட்டுக்கொடுப்பதுமான
வாழ்க்கையில் தொலைந்தே போனது
சுயம்

ஆட்டம் முடிந்ததும் அழிக்கப்படும்
ஆட்டக்களத்தைப் போல...

- அமிர்தவர்ஷினி அம்மா

சுயம் தொலைத்தலும் அடைதலும் எப்பொழுதுமே சில பல இன்ப துன்பங்களை தந்து கொண்டு இருக்கிறது!

எழுத்தில் - எழுத்தால்- பெற்ற நட்புக்களிடமிருந்து எதிர்பாராமல் வரும் பாரட்டுக்களில் மகிழ்ந்து போகப்போகிறது சுயம் இன்று...!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா!

தேறுதல்!


எவ்வளவுதான் நாம் நம்பிக்கை கொண்டிருந்தாலும் எந்த வேட்பாளாரும் கண்டிப்பாய் தான் ஜெயித்த பிறகு தனக்கென ஒரு கூட்டம் உருவாக்கிக்கொண்டு பொதுமக்களுக்கும் தனக்கும் இடையில் மெல்லிய திரையாக ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு திரியத்தான் போகிறார்.

நற்பணிகள் செய்வோம் என்ற சொல்லிக்கொண்டிருப்பவர்கள், நாளை செய்யாமலும் போகலாம் - நம்மால் அப்பொழுதும் கூட எந்த கேள்வியும் கேட்க இயலாது!

கட்சியினரின் கோரிக்கைகளை - எந்த விதமான வழிமுறைகளையும் பின்பற்றி - நிறைவேற்றுவதிலும், கட்சி தலைவர்களின் நிர்ப்பந்தகளுக்கு - எல்லா விதமான வழிமுறைகளிலும்- கட்டுபடுவதிலும் நாம் தேர்ந்தெடுக்கப்போகும் நபர் முன்னின்று செய்துதான் தீரவேண்டும்!

எல்லாரும் திருடர்கள் தான்!

திருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க!

புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !










அகிலமெங்கும் இன்று அன்னையர் தினம்!

உலகின் மூலை முடுக்குகளில்,

வாழ்க்கையின் நம்பிக்கை கீற்றின்;

நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;

உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

ரிஷான் ஷெரிப்...!?


பிழைப்பு தேடி வரும் அயல் நாட்டில் நோய்வாய்ப்பட்டு உதவிக்கு யாரும் இல்லாத சூழலில்,அத்தருணத்தில் சொந்தங்களை நினைத்து மேலும் உடல் வருத்திக்கொள்ளும் கொடிய சூழலில், நன்கு அறிந்தவர்கள் இந்த கட்டத்தில் இருந்தால் அனைவருக்குமே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அந்த வகையில் ஷைலஜா அக்காவின் உதவி கேட்டு வந்த செய்தியிலும் ஈரோடு கார்த்திக்கின் தகவலிலும்,ரிஷான் ஷெரிப் உடல் சுகம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த தகவல்கள் சற்று அதிரச்செய்தது!

பதிவுகளை தவிர்த்து மற்றபடி வேறு எந்தவிதமான அறிமுகம் இல்லாவிடிலும் முயற்சித்து பார்த்துவிடலாம் என்று தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்த தொலைபேசி மூலம் எந்த தகவல்களும் பெற முடியாமல் தோல்வியிலேயே முடிந்தது.

ஒருக்கட்டத்தில் எத்தனையோ பேருக்கு பரிச்சயமாயிருந்த இவரைப்பற்றி - ஒரே ஒரு தொலைபேசி எண்ணை தவிர -வேறு ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது அதை அறிந்துக்கொள்ளும் ஆர்வமின்றி மற்ற விடயங்களை கவனம் செலுத்திய நட்புக்கள் மீது கொஞ்சம் கோபமும் கூட வந்தது. பிறகு எவ்வளவோ முறை கேட்டும் கூட அவர் தம் தகவல்களினை தர மறுத்துவிட்டார் என்ற பதிவுலக நண்பரின் பதிலில் அந்த கோபமும் மறைந்துபோனது!

ஒரு வழியாக அபி அப்பா பதிவின் மூலம் கிடைக்கப்பெற்ற தொலைப்பேசியில் சற்றுமுன் தொடர்பு கொண்டதில் -
நலமாக இருக்கிறார்,
உடலெங்கும் பரவியது,
வதந்தி போன்ற தொடர்புகளற்ற பதிலே கிடைக்கப்பெற்றாலும் முடிவாய் தற்பொழுது நலமாக இருக்கிறாரா...? என்ற கேள்விக்கு நலமாக இருக்கிறார் ஒண்ணும் பிரச்சனையில்லை என்ற பெற்றுக்கொண்ட தகவலோடு முடித்துக்கொண்டேன்!

எந்த விதமான செய்திகளுமே தெரியாமல் இருக்கும் இச்சமயத்தில் இந்த செய்தி மட்டுமே!

இதையே நற்செய்தியாக ஏற்றுக்கொண்டு, ரிஷான் முழு பூரண உடல் நலத்துடன் மீண்டும் வலம் வர அன்போடு அழைத்து, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

சென்ஷி - காதலன்!

காதல் என்பது அனுபவம்; காதலித்தல் சுகானுபவம்; காதலிக்கப்படுதல் பேரனுபவம்

காதல்... நமது ஆசைகளின் முதல் திறவுகோளாக மாறி மனம் திறந்து பூட்டிக் கொள்ளும் விசித்திர சாவி.

காதல்.... நம்மை நமக்கும், நம்மைப் பற்றி பிறர்க்கும் காட்டிக்கொடுக்கும் அற்புத கண்ணாடி.

காதல்... அமைதியாய் தொங்குகிற திரைச்சீலையின் மடிப்பில் அமர வைக்கும் அற்புத தொட்டில்.

காதல்... ஆழ்கடலின் அமைதியை வெளியிலும் அளவில்லாத அலைஓசையை மனதிலும் நிறுத்தி வைக்கும் பூந்தொட்டி.

காதல்... இனக்கவர்ச்சியின் முதல் விருந்து.

காதல்... மனக்கலவரத்தின் மறு அத்தியாயம்.

காதல்... கூடுகளில் வாழும் சந்தோஷம்.

காதல்... வானவில்லில் கலந்த புதிய நிறம்.

காதல்... எதிரொலிகளில் எதிர் ஒளி

காதல்... நினைவுகளின் சங்கமம்

காதல்.. மோசமான யுத்தத்தின் மிகப்பெரிய வெற்றி

காதலைப்பற்றி எழுதுவதென்றால் ஒரு பதிவில் முடியாத விஷயம். வார்த்தைகளில் அடங்காத சுவாரசியம்.

காதல்.... எல்லைகள் இல்லாத தொடுவானத்தின் முற்றுப்புள்ளி.

காதல்.... பாதைகள் போட்டுக்கொள்ளாத புல்வெளி.

காதல்.... ரசனைகள் கைகோர்க்கின்ற ரசவாதம்.

காதல்.... கண்களில் வழிகின்ற கானல் நீர்.

காதல்.... கற்பனைகள் வளர்க்கின்ற புத்தகம்.

காதல்.... கனவுகள் தருகின்ற நல்லுறக்கம்.

இடைவெளிகளை நிரப்புகின்ற அந்த தருணங்கள் காதலென சொல்வதை கடினமாக கருதும் அசௌகர்யம் கொண்டவர்கள் நட்பென்ற பூக்களின் மேல் நடக்கட்டும். ஏனெனில் காதல் பாதையில் சற்று முட்கள் அதிகம். அதனாலேயே காதல் பரிசாக ரோஜா போற்றப்படுகிறது.

*********************************************************************************
பெயருக்கேற்றார்போலவே காதலன் - காதலுக்கு கொடுத்த விளக்கங்களை வரிகளில் வாசித்திருப்பீர்கள்!

வாழ்த்து சொல்லி செல்லுங்கள், அவர் தம் இனிய பிறந்த நாளாம் இன்று தங்களின் வாழ்த்துக்களோடு, அவரின் வாழ்க்கை,காதலோடு இனிமையாக பூத்துக்குலுங்கட்டும் !



இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா...!