தேறுதல்!

எவ்வளவுதான் நாம் நம்பிக்கை கொண்டிருந்தாலும் எந்த வேட்பாளாரும் கண்டிப்பாய் தான் ஜெயித்த பிறகு தனக்கென ஒரு கூட்டம் உருவாக்கிக்கொண்டு பொதுமக்களுக்கும் தனக்கும் இடையில் மெல்லிய திரையாக ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு திரியத்தான் போகிறார்.

நற்பணிகள் செய்வோம் என்ற சொல்லிக்கொண்டிருப்பவர்கள், நாளை செய்யாமலும் போகலாம் - நம்மால் அப்பொழுதும் கூட எந்த கேள்வியும் கேட்க இயலாது!

கட்சியினரின் கோரிக்கைகளை - எந்த விதமான வழிமுறைகளையும் பின்பற்றி - நிறைவேற்றுவதிலும், கட்சி தலைவர்களின் நிர்ப்பந்தகளுக்கு - எல்லா விதமான வழிமுறைகளிலும்- கட்டுபடுவதிலும் நாம் தேர்ந்தெடுக்கப்போகும் நபர் முன்னின்று செய்துதான் தீரவேண்டும்!

எல்லாரும் திருடர்கள் தான்!

திருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க!

புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!

25 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!//

:)))))))))))))))

said...

//
புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!//

ஏன், புதுசா வர்றவங்க எப்படி திருடுவாங்கன்னு செய்முறை விளக்கத்தோட சொல்லுவாங்களா?!

said...

இப்பெல்லாம் கொஞ்சமா திருடுபவன் யாருன்னு பார்த்துத்தான் வோட்டு போட வேண்டி இருக்கு ஆயில்யன்

said...

திருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க!

kandipa intha murai matram varum

said...

நற்பணிகள் செய்வோம் என்ற சொல்லிக்கொண்டிருப்பவர்கள், நாளை செய்யாமலும் போகலாம் - நம்மால் அப்பொழுதும் கூட எந்த கேள்வியும் கேட்க இயலாது!
sathyamana varthainga

said...

:-) ஒக்கே!!

said...

//
நற்பணிகள் செய்வோம் என்ற சொல்லிக்கொண்டிருப்பவர்கள், நாளை செய்யாமலும் போகலாம் - நம்மால் அப்பொழுதும் கூட எந்த கேள்வியும் கேட்க இயலாது!//

ம்ம்..ஆமா! உண்மை!

said...

//
திருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க!

புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!//

ஆயில்ஸ் ஏன் இப்படி?!! :-)))

said...

சூப்பர்...

said...

எல்லாரும் திருட்டு பசங்க தான்!கொஞ்சம் சின்ன திருடனை பார்த்து ஜெயிக்கா வைக்கவும்!

said...

:))

said...

பொருத்தமான படம்... உண்மை தான். புதிதாய் வருபவர்கள் கொஞ்சம் ஆரம்ப காலத்தில் லக்ஷியங்களோடு இருப்பார்கள். அதற்காவேனும் அவர்களை நம்பலாம்

said...

//
புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!//

சரிப்பா, அப்ப நீங்க அரசியலுக்கு வாங்கப்பா...

said...

அண்ணே! அதென்னா ஆஃப் ஃப்ரை ... நல்லாவே ஃப்ரை பண்ணிக் கொடுங்க சாப்பிடலாம்.. நல்லா ஃப்ரை பண்ணினா தான் டேஸ்ட் வரும்... ;-)

said...

அப்புறம் இந்த பதிவில் ஒரு தவறு இருக்கு... அதென்ன மெல்லிய திரை.. பெரிய கோட்டைச் சுவரே வந்து விடுகின்ரதுண்ணே.. :(

said...

/*திருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க!*/
தெரியாமல் திருடறவங்களை எப்படி திருடறாங்கனு கண்டுபிடிக்கிறது? :-))

said...

//அமுதா said...

/*திருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க!*/
தெரியாமல் திருடறவங்களை எப்படி திருடறாங்கனு கண்டுபிடிக்கிறது? :-))//

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னுத்தான் அந்த வரிகள் போட்டேன் சுருக்கமா சொல்லவைக்காதீங்க
”அப்பாவி” அமுதா அக்கா :))

said...

\\\
அபி அப்பா said...
எல்லாரும் திருட்டு பசங்க தான்!கொஞ்சம் சின்ன திருடனை பார்த்து ஜெயிக்கா வைக்கவும்!
\\\

திருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க!

said...

சென்ஷி said...
//
புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!//

ஏன், புதுசா வர்றவங்க எப்படி திருடுவாங்கன்னு செய்முறை விளக்கத்தோட சொல்லுவாங்களா?!
//

repeatu

said...

//
புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!
//

எதுக்கு அவனும் திருடவா?

said...

//
S.A. நவாஸுதீன் said...

இப்பெல்லாம் கொஞ்சமா திருடுபவன் யாருன்னு பார்த்துத்தான் வோட்டு போட வேண்டி இருக்கு ஆயில்யன்
//
ரீப்பீட்டேய்..

said...

//புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!//

புதுசா ஒருத்தன் பணக்காரன் ஆகட்டும்ன்னு சொல்றீங்க? என்ன ஒரு நல்லெண்ணம் :)

said...

சென்ஷி said...
//
புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!//

ஏன், புதுசா வர்றவங்க எப்படி திருடுவாங்கன்னு செய்முறை விளக்கத்தோட சொல்லுவாங்களா?!

//

டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

ஒரே ஆளு திருடி அவர் குடும்பம் பெரிய கோடீஸ்வரர் ஆகறதக்காட்டிலும் புது திருடனும் கொஞ்சம் பணம் பார்க்கட்டுமே .. அரசியல்லயாச்சும் சமமான பணம் வச்சிருக்கவங்களா ஆகட்டும்..:))

said...

//தான் ஜெயித்த பிறகு தனக்கென ஒரு கூட்டம் உருவாக்கிக்கொண்டு பொதுமக்களுக்கும் தனக்கும் இடையில் மெல்லிய திரையாக ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு திரியத்தான் போகிறார்.//

இப்படி சரியாகச் சொல்லி விட்டு கடைசியில் ஒரு சவுண்டு விட்டிருக்கிறீர்களே. அவரும் அந்த மெல்லிய திரைக்குப் பின்னால்தானே போவார்? என்னமோ போங்க, தேர்தல் வந்து வந்து போகிறது. தேறுதல் எதைப் பார்த்தும் வர மாட்டேன்கிறது:(!