ரிஷான் ஷெரிப்...!?


பிழைப்பு தேடி வரும் அயல் நாட்டில் நோய்வாய்ப்பட்டு உதவிக்கு யாரும் இல்லாத சூழலில்,அத்தருணத்தில் சொந்தங்களை நினைத்து மேலும் உடல் வருத்திக்கொள்ளும் கொடிய சூழலில், நன்கு அறிந்தவர்கள் இந்த கட்டத்தில் இருந்தால் அனைவருக்குமே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அந்த வகையில் ஷைலஜா அக்காவின் உதவி கேட்டு வந்த செய்தியிலும் ஈரோடு கார்த்திக்கின் தகவலிலும்,ரிஷான் ஷெரிப் உடல் சுகம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த தகவல்கள் சற்று அதிரச்செய்தது!

பதிவுகளை தவிர்த்து மற்றபடி வேறு எந்தவிதமான அறிமுகம் இல்லாவிடிலும் முயற்சித்து பார்த்துவிடலாம் என்று தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்த தொலைபேசி மூலம் எந்த தகவல்களும் பெற முடியாமல் தோல்வியிலேயே முடிந்தது.

ஒருக்கட்டத்தில் எத்தனையோ பேருக்கு பரிச்சயமாயிருந்த இவரைப்பற்றி - ஒரே ஒரு தொலைபேசி எண்ணை தவிர -வேறு ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது அதை அறிந்துக்கொள்ளும் ஆர்வமின்றி மற்ற விடயங்களை கவனம் செலுத்திய நட்புக்கள் மீது கொஞ்சம் கோபமும் கூட வந்தது. பிறகு எவ்வளவோ முறை கேட்டும் கூட அவர் தம் தகவல்களினை தர மறுத்துவிட்டார் என்ற பதிவுலக நண்பரின் பதிலில் அந்த கோபமும் மறைந்துபோனது!

ஒரு வழியாக அபி அப்பா பதிவின் மூலம் கிடைக்கப்பெற்ற தொலைப்பேசியில் சற்றுமுன் தொடர்பு கொண்டதில் -
நலமாக இருக்கிறார்,
உடலெங்கும் பரவியது,
வதந்தி போன்ற தொடர்புகளற்ற பதிலே கிடைக்கப்பெற்றாலும் முடிவாய் தற்பொழுது நலமாக இருக்கிறாரா...? என்ற கேள்விக்கு நலமாக இருக்கிறார் ஒண்ணும் பிரச்சனையில்லை என்ற பெற்றுக்கொண்ட தகவலோடு முடித்துக்கொண்டேன்!

எந்த விதமான செய்திகளுமே தெரியாமல் இருக்கும் இச்சமயத்தில் இந்த செய்தி மட்டுமே!

இதையே நற்செய்தியாக ஏற்றுக்கொண்டு, ரிஷான் முழு பூரண உடல் நலத்துடன் மீண்டும் வலம் வர அன்போடு அழைத்து, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

23 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆண்டவனுக்கு நன்றி! நன்றி ஆயில்யா!

said...

ரிஷான் பூரண குணமடைய வாழ்த்துக்கள்.
தகவல் தெரிவித்தமைக்கு நன்றி ஆயில்யன்.

said...

//
தமிழ்ப்பறவை said...

ரிஷான் பூரண குணமடைய வாழ்த்துக்கள்.
தகவல் தெரிவித்தமைக்கு நன்றி ஆயில்யன்.
//
வழிமொழிகிறேன்

said...

ரிஷான் விரைவில் குணமடைய வாழ்த்துகள்...

said...

// இதையே நற்செய்தியாக ஏற்றுக்கொண்டு, ரிஷான் முழு பூரண உடல் நலத்துடன் மீண்டும் வலம் வர அன்போடு அழைத்து, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.//

கத்தார்ல எனக்கு தெரிஞ்சவங்க ரண்டு பேர் ஒன்னு நீங்க அடுத்தது ரிஷான்.
அவர் பத்திய அந்த மெய்ல் வந்ததும் பலபேர் என்னையும் கேட்டாங்க.அதனால நானும் உங்கள கேக்க வேண்டியதாப்போச்சு

இப்போ அவர் நலம்.சந்தோசம்.

மிக்க நன்றி தல.

said...

ரிஷான் பூரண குணமடைய வாழ்த்துக்கள்...

said...

சீக்கிரமே அவர் முழு குணமடைய என் பிரார்த்தனைகள்.

said...

ரிஷான் பரிபூரண குணமடைய என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.

said...

ரிஷான் பூரண குணமடைய வாழ்த்துக்கள்...

said...

தகவலுக்கு நன்றி. ரிஷான் பூரண குணமடைய வாழ்த்துக்கள்.

said...

ரிஷான் பூரண குணமடைய வாழ்த்துக்கள்...

said...

ரிஷான் நல்லவிதமாய் இருக்கிறார் எனபதில் மிக சந்தோஷம். நம் அனைவருடைய பிரார்த்தனைகளும் அவரை விரைவில் குணமாக்கும் என்ற நம்பிக்கையில்!!!

அவரது தகவல்களை தந்ததற்கு நன்றி!!!!

நரேஷ்
www.nareshin.wordpress.com

said...

தகவலுக்கு நன்றி ஆயில்ஸ்! அவர் எப்போதும்போல வலம்வர வேண்டும், இறைவா..எங்கள் பிரார்த்தனைக்கு பதில் கொடு!

said...

thanks a lot. we pray Rishan to recover fast

said...

ரிஷான் பூரண நலத்துடன் மீண்டெழுந்து வலையுலகில் பவனி வர ஆண்டவனை ப்ரார்த்திக்கின்றேன்!

said...

இதையே நற்செய்தியாக ஏற்றுக்கொண்டு, ரிஷான் முழு பூரண உடல் நலத்துடன் மீண்டும் வலம் வர அன்போடு அழைத்து, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

நானும் வேண்டிக்கொள்கிறேன்

said...

ஆண்டவனுக்கு நன்றி! எனக்கு ரிஷான் பதிவுகள் மிகவும் நெருக்கம். ஆனால் அவருக்கு இது தெரியாது. விஷயம் கேள்விப்பட்டவுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரார்த்தித்தது அன்றுதான். அவர் பூரண குணமடைய பிரார்த்தனை தொடரும்..

பி.கு. அந்த பூங்கொத்து படத்தை எடுத்துவிடுங்கள். அது வேறொரு அர்த்தம் தந்ததால், அரண்டு போய் இந்தப்பதிவை படித்தேன்.

said...

விரைவில் பூரண நலமடைந்து பவனிவர பிரார்த்திக்கிறேன்

said...

நலம் செய்திக்கு நன்றி.பூரண குணமாகி இன்முகம் காண்க.

said...

ரிஷான் நலம் பெற வாழ்த்துக்கள். அவரது வலைப்பூ மூலமும் அவரது திண்ணைக் கட்டுரைகள், கதைகள் மூலமே பரிச்சயம். நேரில் சந்தித்தது இல்லை.. கத்தாரில் இருந்தாலும்.

நலம் பெறுவார்....

அன்புடன்,

ஜெயக்குமார்

said...

ரிஷான் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்...

said...

மீளவும் வந்துவிட்டேன் நண்பர் ஆயில்யன் !

அன்பான உங்கள் பிரார்த்தனைகளுக்கும், பிரார்த்தனைக்கென நண்பர்களை ஒருங்கிணைத்ததற்கும், இன்னும் எனக்காகப் பிரார்த்தித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்காகவும் எனது நன்றிப் பதிவு இங்கே
http://rishanshareef.blogspot.com/2009/05/blog-post.html

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.

said...

நண்பர்கள் அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க விகடனில் தொடராக வெளிவரும் எனது மருத்துவமனை அனுபவங்களை http://mrishansharif.blogspot.com/2009/05/01.html இங்கு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் நண்பர்களே.