நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் வலை;பலர் அளவுக்கு அதிகமாகவே பிணைத்துக்கொண்டிருப்பார்கள்.
பயம் எல்லோருக்குமே இயற்கைதான்! ஆனால் கண்டபடி பயப்படுவதும், அளவுக்கு அதிகமாக பயப்படுவதும், தினப்படி பயப்படுவதும் உடல்நிலையினை பாதிப்புக்கு கொண்டு வந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ள விஷயங்களாம்!
பயத்திற்கான காரணம் என்ன?
அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?
என்ன மாதிரியான தீர்வுகள் உண்டு?
என்ன மாதிரியான முடிவுகளை நாம் எடுக்க இயலும்
இப்படியாக எந்த ஒரு பயத்தை ஏற்படுத்தும் விஷயத்தையும் அலசி ஆராய்ந்து
காயப்போட்டால், பயத்தினால் ஒரு காயமும் உண்டாகாது மனத்தில்!
நம் வாழ்க்கை என்பது ஒரு பராமரிப்பு பயணம் அல்ல, வாழ்வில் புதுப்பரிணாமங்கள் வளர்ச்சிகள் தவறுகளை செய்தல், தவறுகளை திருத்திக்கொள்ளுதல் என வாழ்க்கை பயணம் அமையவேண்டும்!
பயம் கண்டு ஓடாதீர்கள்!
பயம் உங்களை கண்டு பயந்து ஓடும்படி செல்லுங்கள் வெல்லுங்கள்!
இன்னும் சில அறிஞர்கள் உங்களுக்கு பயம் வரணும்ப்பா!? அப்பத்தான் உங்களையே நீங்க கேள்வி கேட்டுக்க முடியும் அப்படின்னு அட்வைஸ் பண்றாங்க ஆமாங்க அதுவும் கூட சரிதானே!
ஒவ்வொரு முறை பயம் வரும்போதும் அது எப்படி நமக்குள் வந்தது? நாம் என்ன தவறு செய்தோம்? என்று நமக்குள்ளேயே கேள்விகள் எழவைக்க வேண்டும்!
சரி பயத்தை எப்படி ஈசியா போக்கலாம்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது!
ஆன்மீகம், காதல், நட்பு இப்படி பல வழிகள் இருக்கு ஆனால் அதை ஒவ்வொண்ணா விளக்கமா சொல்றதுக்கு எனக்கு இப்ப ரொம்ப பயமா இருக்கறதால மீ த எஸ்கேப்பு!
24 பேர் கமெண்டிட்டாங்க:
:)
நூறு ஆயுசு.
இப்பத்தான் பயம் & ஆயில்யம் சேர்த்து ஒன்னு எழுதிக்கிட்டு இருந்தேன்!
பயத்த கெளப்பி விட்டுட்டு விமோசனம் சொல்லாம பயந்தா எப்பிடிண்ணே?
பயந்துட்டே வந்தேன். இப்ப பயம் இல்லை :-)
பயம் தான் நமக்கு கற்றுக்கொடுக்குதுன்னு எனக்கு தோணுது.
சந்தோஷமா இருக்கு ஆயில்யன் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப் நாளைக்கப்புறம் ஆயில்யனின் முத்திரையோடு ஒரு பதிவு.
comment poda bayama irukay!!
//அதை ஒவ்வொண்ணா விளக்கமா சொல்றதுக்கு எனக்கு இப்ப ரொம்ப பயமா இருக்கறதால மீ த எஸ்கேப்பு!//
:))))))))))) Pozhachuppeenga :D
// gils said...
comment poda bayama irukay!!//
Repeatae :)))
தெளிந்தது பயம்! நன்றி:)!
எல்லாம் பய மயம் !!
ஆயில்ஸ்!
தோஹா வில் வெயில் 50 டி மேல என்று சொல்லுறாங்களே... உண்மையா?
\\பயம் எல்லோருக்குமே இயற்கைதான்! ஆனால் கண்டபடி பயப்படுவதும், அளவுக்கு அதிகமாக பயப்படுவதும், தினப்படி பயப்படுவதும் உடல்நிலையினை பாதிப்புக்கு கொண்டு வந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ள விஷயங்களாம்!
\\
மிகச்சரி ஆயில்யன்
தெனாலி படம் பார்த்துகிட்டே எழுதுனீங்களா ஆயில்யன். விஷயமுள்ள பதிவுதான். ஆனால் இறுதியில் வழுக்கிகிட்டு (oil)யன் எஸ்கேப் ஆகிட்டீங்க.
எதைப்பார்த்து பர்த்து பயந்து இப்படி ஒரு பதிவு ஆயில்யன்?
பயம் கண்டு ஓடாதீர்கள்! //
சரிண்ணே’
அப்ப நாய் தொரத்திட்டு வந்தா என்ன பண்ணுறது?
ஏன் ஏன் ஏன் இப்படி? ஏற்கனவே எனக்கு பயந்த சுபாவம்.. இன்னும் பயமுறுத்திறீங்களே.. ;-)
எனக்கு எப்பவாவது காரணமே இல்லாம, பயம் வரும்...ஒரு விதமான restless உணர்வா, இல்லை பயமா, பிரித்தறியவே முடியாத ஒரு உணர்ச்சி...அதுக்கு பயம்ன்னு தான் பேர் வச்சிருக்கேன்...அது மாதிரி இருந்தா என்ன பண்ணனும்னு சொன்னீங்கன்னா உதவியா இருக்கும் :)
வணக்கம் ஸ்வாமி ஆயில்யானந்தா.. ;)
ஆயில்ஸ் , சமீபத்தில் தெரிந்துக் கொண்ட உண்மை.. எனக்கும் கடகம் ராசி.. ஆயில்யம் நட்ச்சத்திரலாம். :))
நானும் ஆயில்யன் தான் மக்கா.. :))
முக்கியமான இடத்தில எஸ்கேப் ஆயிட்டீங்க! ரொம்பத் தப்பு.
அப்ப மிச்சத்த யார் சொல்லுவாங்க ?
அண்ணே உடம்பை பார்த்துக்கோங்க..அப்படியே தைரியமாக இருங்க..;))
இன்னாடா...ஆயில்யனுக்கே பயமா?என்று வந்தேன். பயத்தை வெல்ல பயப்படாமல் வழி காட்டியிருக்கிறீர்கள். நல்லது.
ஆமா...பயம் என்றால் என்ன?
payanthuten...
Post a Comment