கலக்கிய கலைஞர்!


தமிழகத்தில் இன்று செவ்வாய்கிழமை,பிற்பகலில் நடைப்பெற்று முடிந்த ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் தலையீட்டு முயற்சிகளினை முடுக்கும் நடவடிக்கைகளில் தமிழகத்தின் நடவடிக்கைகள் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

இரு வார கால கெடு கொடுத்து தமிழ் பகுதிகளில் நடைப்பெற்றுவரும் சண்டைகளினை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு,

கொஞ்சமும் செவி சாய்க்காமல் தம் உதவிகளை மத்திய அரசு தொடருமெனில் தமிழக எம்.பிக்கள் தங்களின் பதவிகளினை ராஜினாமா செய்வார்கள் என்ற அதிரடி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது!

(எனக்கு தெரிந்து எந்த எம்.பிக்களும் அத்தனை சீக்கிரத்தில் தம் பதவிகளினை விட்டுக்கொடுத்து வந்ததாக ஞாபகமில்லை - காவிரி பிரச்சனையில் வாழப்பாடி ராமமூர்த்தியின் எம்.பி ராஜினாமா தவிர்த்து!)

மதிமுக அதிமுக தேமுதிக கட்சிகள் புறக்கணித்தது குறித்த நிருபரின் கேள்விக்கு கலைஞர் அளித்த பதிலாக “எதிர்கட்சிகளுக்கு எவர்மீதும் கோபம் இல்லை வெறுப்பு இல்லை என் மீதான கோபத்தின் காரணமாகவே புறக்கணித்திருக்கிறார்கள் என்றார்.!

சில எதிர்கட்சிகள் இக்கூட்டத்தினை புறக்கணித்தது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் பேசினர் டி.ஆரும் கூட பேசினார்! - இது கலைஞர் ஸ்டைல் :-)

(ஆமாம் எங்க ஊருக்காரரூ என்ன கட்சியெல்லாம் ஆரம்பிச்சிடாரா? - இத்தினி நாளா எனக்கு இது கூட தெரியலயே?)


பிபிசி தமிழோசை!

14 பேர் கமெண்டிட்டாங்க:

said...

புதிய முயற்சிகள் பலனளிக்கட்டும்!

said...

அலட்சிய தி.மு.க என்று ஒன்றை பல வருடமா. கூட்டனிக்கு ஆள் தேடிட்டு இருக்கார். உஙக் ஊர்க்காரர்

said...

நல்லது நடந்தால் சரி

said...

தன்னடக்கத்துடன் கருமமே கண்ணாகி
செய்திருக்கும் செயலுக்கு அனைத்துத் தமிழர்களும் நன்றியும்,பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்வோம்.\
கலந்து கொண்ட அனைவர்க்கும்,இனி அடுத்த நடவடிக்கைகளில் அனைவருங் கலந்து கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளை ஏற்போருக்கும் இப்போதே வாழ்த்து தெரிவிப்போம்..

said...

வாழ்க கலைஞர்!
வளர்க அவரது புகழ்!

மயிலாடுதுறை சிவா...

said...

இத்தனை நாட்கள் கழித்து துயிலெழுந்தமைக்கு நன்றி. இது உண்மையான விழிப்பாக இருக்குமெனில், அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

பதவி மேல் உள்ள பாசத்திற்காகவாவது நமது எம்பிக்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என நம்புவோம்!

said...

நீண்ட நெடுநாளுக்குப்பிறகு தமிழக முதல்வர் கலைஞர் செய்திருக்கும் நல்ல முயற்சி. தமிழர்கள் அனைவரும் இதற்குக் காரணமாக இருந்த கலைஞரையும், பா.ம.க., வி.சி.க.உட்பட அனைத்து கட்சியினரையும் பாராட்ட வேண்டும்.

இக்ககூட்டத்திற்காக துண்டு சீட்டு கட்சி உட்பட அனைத்து கட்சிக்கும் அழைப்பு அனுப்பிய தமிழக அரசு தமிழீழ மக்களுக்காக உண்மையக தொடந்து போராடும் பெரியார் திராவிடர் கழகத்திற்கு அழைப்பு அனுப்பாதது ஏன் என்று தெரியவில்லை.

said...

கலைஞரிடம் இதைதான் எதிர் பார்த்தோம்.இன்னும் அதிகமாக கூட எதிர் பார்த்தோம்!


தமிழக MP கள் பதவிக்காலம் முடிய போகும் இந்த நேரத்தில்.

(''கொஞ்சமும் செவி சாய்க்காமல் தம் உதவிகளை மத்திய அரசு தொடருமெனில் தமிழக எம்.பிக்கள் தங்களின் பதவிகளினை ராஜினாமா செய்வார்கள் என்ற அதிரடி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது!' )


இந்த முடிவு! முன்னமே வந்து இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்!!

said...

நல்லது நடக்க வேண்டும்

said...

Hiyo...Hiyooo... (Vadivelu stylela padikkavum!)

said...

:):):)

said...

//புதிய முயற்சிகள் பலனளிக்கட்டும்!//

Repeatu!

//நல்லது நடந்தால் சரி//
double Repeatu!!!

said...

நல்ல முயற்சி! பாப்போம் எப்பிடி போகுதுன்னு ...புதினா சாதம் சாப்பிட்டு சொல்லுங்க எப்பிடி வந்துதுன்னு

said...

நல்லது நடக்கட்டும்...!