நானும் சினிமாவும் - இன்னொருவாட்டி!

சினிமா பத்தி எழுதணும்ன்னு நினைச்சாலே கொஞ்சம் யோசனையாத்தான் இருந்திச்சு! எம்புட்டு விசயம் இருக்கு எல்லாம் பிளாஷ் அடிச்சுட்டு அடிச்சுட்டு மறைந்துக்கொண்டே இருந்துச்சு! முதல்ல பார்த்த படம் இதுவோ அதுவோன்னு ஒரு கன்ப்யூசன்! எப்படியோ ஒரு மாதிரியா போட்டு ஒப்பேத்தியாச்சு! (இன்னும் கிடைக்கவேண்டிய இடத்திலேர்ந்து ரிப்ளை கிடைக்கல! - அட பிரதர் கிட்டேருந்துதான்! ஆனா கிடைச்ச சேதிப்படி நான் tag பண்ணிவிட்டவங்க கலக்கியிருக்காங்க!)

நேத்து பதிவு எழுதி முடிச்ச பிறகும் கூட யாரோ கூப்பிடற மாதிரி ஒரு நினைப்பு இன்னிக்கு பார்த்த மெயில் வல்லியம்மா கூப்பிடிருந்தாங்க எதிர்ப்பார்ப்பு வைச்சிருந்தா ஏமாத்தகூடாதுன்னு இன்னும் ஒரு வர்ஷன் போட்டாச்சுப்பா!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


எங்க ஊர் கொத்ததெரு மாரியம்மன் கோயில் திருவிழா ஸ்பெஷலா புரொஜெக்டர்ல்லாம் வைச்சு தெருவையே பிளாக் பண்ணி அதிகாலை வரைக்கும் முழிச்சியிருந்து படம் பார்த்துதான் நான் பப்ளிக்கா -பப்ளிக்கே- பார்த்த முதல் படம்:- அதுவும் கந்தன் கருணை! (அதுலயே நான் பாதி படத்துல மயங்கிட்டேன்!)

******************


அண்ணன் அக்கா,நானு அம்மா பாட்டி என்று எல்லோரும் போய் பார்த்த கடைசிப்படம்ன்னா அது அஞ்சலி தான்! அதுக்கு பிறகு ஏனோ எல்லாரும் சேர்ந்து போய் பார்க்கற அளவுக்கான சூழ்நிலைகள் அமையவே இல்லை! (கிளிக்கு இறக்கை முளைச்சுடுச்சு எல்லாம் பறந்துப்போச்சு ஸ்டைல்தான்!)

******************

ரொம்ப பயந்துக்கிட்டே போய் படம் பார்த்துட்டு திரும்ப வரும்போதும் பயந்துக்கிட்ட வந்ததுன்னு சொல்லணும்னா மை டியர் குட்டிசாத்தான் படம்தான்! - போகும் போது படத்தை பத்தின பயம்! திரும்ப படம் முடிஞ்சு வரும்போது பையில மறைச்சி வைச்சு கொண்டு வந்த கண்ணாடியை தியேட்டர்காரன் பறிச்சிடுவானோன்னு பயம் அம்புட்டுதான்!

******************

சொந்தக்கார பயமக்களோட படம் பார்க்க அடம்பிடிச்சு போனது சுந்தரகாண்டத்துக்கு ஆனா அதுக்கு டிக்கெட் கிடைக்காம ஒபன்ல கிடந்த ரிக்‌ஷாமாமா போனது தான் நான் முதலும் கடைசியுமாகி போன இரவு நேர இரண்டாம் ஆட்ட சினிமா!

******************

ரொம்ப ஆர்வப்பட்டு,(மணி,ரகுமான் & ஐஸ்வர்யா) அவஸ்திபட்டு, நேரம் போயி, வெய்யில்ல நின்னு வெளுத்துப்போயி (வெள்ளை கருப்பானா கருப்பு வெள்ளையாத்தானே ஆகும்!) பார்த்து ஆனாலும் மத்தவங்க மாதிரி பாதியிலே எழுந்து போகாம பார்த்த படம்ன்னா அது இருவர்தான்! - பாதி இண்டர்வெல்ல பின்னாடியும் சரி முன்னாடியும் சரி ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் தென்பட்டிருக்க வெளியில படம்முடிஞ்சு வரும்போது ஒரு 10 -15 பேர்தான் :-(

ஆனாலும் எனக்கு இப்பவும் பார்க்க பிடிக்கிது :-)

******************

பாலிடெக்னிக் கடைசி செமஸ்டர் கடைசி பரீட்சை முடிஞ்சு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நியாபகமா படம் பார்த்துட்டு ஹோட்டல்ல போய் சாப்பிடலாம்டான்னு முடிவு பண்ண ஒ.கே பண்ணிட்டு மாரியப்பா தியேட்டருக்கு போனா காலேஜே அங்கதான் நிக்கிது (படம் - காதலுக்கு மரியாதை!) பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவல்,ஆனால் கூட்டம் ஒத்துவராது வேணும்னா இன்னொரு படத்துக்கு போவோ அதுவும் ஜூப்பரா இருக்குன்னு சொன்னாங்க என்று நான் சொன்னதை நம்பி வந்து,படத்தையும் பார்த்துவிட்டு இன்று வரை மறக்காமலே இருக்க வைத்த படம் - நாம் இருவர் நமக்கு இருவர் (போயும் போயும் இப்படி ஒரு படமாடா நமக்கு எண்ட்டூ கார்டு போடணும்ன்ன்னு நொம்பவே ஃபீல் பண்ணிட்டானுங்க நண்பர்கள்!)

******************

பயங்கரமா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஆனாலும் வேற வழியே இல்லாம வெறுப்பாய் தியேட்டருக்குள் சென்று 3 மணி நேரம் அமர்ந்திருந்து சில காட்சிகள் சில பாடல்கள் மட்டும் பார்த்து மற்ற நேரங்களில் கிடைத்த தீனிப்பண்டங்களை தின்றுகொண்டு வாரந்தாவிற்கும் தியேட்டருக்குள்ளும் நட(ன)மாடி இருந்துவிட்டு இப்பொழுது பாடல்கள் கேக்கும்போது பார்க்கவேண்டும் என்று நினைக்கவைக்கும் படம் - பாண்டி நாட்டு தங்கம்!

******************

கடைசியா ஆனா கலக்கல்ன்னு நான் நினைச்ச விசயம்:))


படையப்பா ரீலிசு!
பியர்லெஸ் தியேட்டர்ல பெரிய பெரிய சவுக்கை கட்டைகளையெல்லாம் கட்டி வழி அமைச்சு வைச்சிருக்காங்க!- ஏதோ பெரிய பார்ட்டீ மீட்டிங்க் மாதிரி! (அந்த காலகட்டத்தில இருந்த எங்க ஊரு சப்கலெக்டர் ஐடியா!) காலையில 8.30 மணிக்கு முதல் ஷோ! பேப்பர் வாங்க கடைக்கு வந்திட்டு வீட்டுக்கு போயிக்கிட்டிருந்த எனக்கு ஒரு சின்ன ஆசை போய்த்தான் பார்ப்போமே! (அந்த டைம்ல அண்ணன் ஊர்ல கிடையாது!) சைக்கிள் எதிர்ல இருந்த லைப்ரயில பேப்பரோட தள்ளிவிட்டுட்டு ஓடினேன்! ஒடினேன் கவுண்டரின் முன் வரைக்கும் ஒடினேன்! ஒரு சிக்கலும் இல்ல! டிக்கெட் வாங்கியாச்சு கடும் ஆரவாரத்திற்கிடையில் படமும் பார்த்து திருப்தியாகியாச்ச்சு - அதிலிருந்து தொடர்கிறது ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ! :-)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இந்த பதிவு மூலமாவும் நான் ஒரு ஐந்து பேரை சினிமா பற்றி எழுத அழைக்கின்றேன்! கேள்விகள் பார்க்க இங்கு போய்ட்டு வரவும்!

மழை - ஸ்ரேயா

ஸ்கிரிப்பிளிங் ஸ்க்ரைப் - சங்கீத்

செல்லம் - ஸாவரியா

தயாமலர் - தினேஷ்

டிவிங்கிள் டிவிங்கிள் - சபரி

33 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அண்ணே! சினிமா பற்றிய நினைவுகளை வேற மாதிரி எழுதிட்டீங்க... நல்லா இருக்கு. நானும் இது போல் முயற்சி செய்யவா?

Anonymous said...

அருமையான நினைவுகள் சகோதரா..

said...

:))

said...

அடுத்த வாட்டியுமா ?????!!!!

said...

அப்புறமா வந்து கருத்து சொல்றேன்...:)

said...

:-))))...

said...

ஹை நல்லாருக்கு..!! :))

said...

கலக்கலான பதிவு... சூப்பர்...

said...

அப்பாடா இந்த வாட்டியும் கூப்புடுவீரோன்னு பயந்துகிட்டே படிச்சேன் ;-)

said...

(வெள்ளை கருப்பானா கருப்பு வெள்ளையாத்தானே ஆகும்!)

அட்றா அட்ரா.

நினைவுகளை மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்.

said...

//(கிளிக்கு இறக்கை முளைச்சுடுச்சு எல்லாம் பறந்துப்போச்சு ஸ்டைல்தான்!)
//

ஆயில் கிளி பச்சையா இருக்கும் நம்ம கலரில் இருந்தா அது பேறு வேற!:)))

said...

ரொம்ப ரொம்ப நன்றி ஆயில்யன்.
இப்படி எழுதி இருக்கலாமே நானும்னு யோசிக்கவச்சிட்டீங்களே!!!!

சூப்பர்பா. அதுவும் படையப்பா
வந்து ஹாய்ய்ய்ய்னு வேற சொல்றாரு. கேக்கண்ணுமா. இவரும் இயக்குனர் ரவிகுமாரும் ஆடும் நடனம்பார்க்கணும்னு (உடனே) ஆவலாயிடுச்சு:)

said...

நல்லா இருக்கு... இன்னொரு வெர்சன் போட்டாலும் கலக்கிவிடுவீர்கள்...

said...

மிகவும், ரசித்து, ரசித்து படித்தேன்..
சிரித்து, சிரித்து, இன்னும் ரசித்து படித்தேன்.
பதிவு ரொம்ப நல்லா..
இருக்குன்னு...நினைக்கிறப்ப..கீழே பார்த்தா..ஆ..!!!

எனக்கு ஆப்பு காத்துக்கொண்டிருந்தது!

உங்கள ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன்...:(

TRY பண்ரேன்...பாத்துச் சொல்லுங்க I mean commentங்க

said...

//தமிழ் பிரியன் said...
அண்ணே! சினிமா பற்றிய நினைவுகளை வேற மாதிரி எழுதிட்டீங்க... நல்லா இருக்கு. நானும் இது போல் முயற்சி செய்யவா?
//

என்னாதிது? சின்னபுள்ளதனமா கேட்டுக்கிட்டு ஆரம்பிங்க!!

அதுலயும் திரும்பவும் எனக்கு டேக் பண்ணுங்க நாம இப்படியே சுத்தி சுத்தி வெளையாடுவோம் ஒ.கே!!!
:))))))))

said...

//Thooya said...
அருமையான நினைவுகள் சகோதரா..
//

டேங்க்ஸ் தங்கச்சி :))

said...

//தமிழன்... said...
அடுத்த வாட்டியுமா ?????!!!!
///

ம்ம்ம் :)))

said...

//தமிழன்... said...
அப்புறமா வந்து கருத்து சொல்றேன்...:)
//

கண்டிப்பா சொல்லணும் :))

said...

// விஜய் ஆனந்த் said...
:-))))...
/

ரைட்டு ஒ.கே!

said...

//ஸ்ரீமதி said...
ஹை நல்லாருக்கு..!! :))
///

ஹை எப்பவுமே நல்லாத்தான் இருக்கும்!

பதிவு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!

said...

//சரவணகுமரன் said...
கலக்கலான பதிவு... சூப்பர்...
///

நன்றி சரவணகுமரன்! :)

said...

//கானா பிரபா said...
அப்பாடா இந்த வாட்டியும் கூப்புடுவீரோன்னு பயந்துகிட்டே படிச்சேன் ;-)
//

அப்படியியெல்லாம் நீங்களே நினைச்சு பயப்படபிடாது!

(நல்லவேளை பயந்துக்கிட்டே படிச்சீங்க நீங்க வெக்கப்பட்டுக்கிட்டே படிக்காம போய்டுவீங்களேன்னு நான் பயந்து இருந்தேன்!)

said...

//AMIRDHAVARSHINI AMMA said...
(வெள்ளை கருப்பானா கருப்பு வெள்ளையாத்தானே ஆகும்!)

அட்றா அட்ரா.

நினைவுகளை மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்.
///


:)))))))))

நன்றி அ.அ.அக்கா

said...

//குசும்பன் said...
//(கிளிக்கு இறக்கை முளைச்சுடுச்சு எல்லாம் பறந்துப்போச்சு ஸ்டைல்தான்!)
//

ஆயில் கிளி பச்சையா இருக்கும் நம்ம கலரில் இருந்தா அது பேறு வேற!:)))
//

ம்ஹுக்கும் நொம்ப முக்கியமா வந்து சொல்லிட்டு போறீங்க :((

நானெல்லாம் உங்க கலரு கிடையாது நல்லா செவப்பு தெரியுமுல்ல (இப்படித்தான் நெனைச்சு 27 வருசம் ஓட்டியாச்சு நண்பா!)

said...

//வல்லிசிம்ஹன் said...
ரொம்ப ரொம்ப நன்றி ஆயில்யன்.
இப்படி எழுதி இருக்கலாமே நானும்னு யோசிக்கவச்சிட்டீங்களே!!!!

சூப்பர்பா. அதுவும் படையப்பா
வந்து ஹாய்ய்ய்ய்னு வேற சொல்றாரு. கேக்கண்ணுமா. இவரும் இயக்குனர் ரவிகுமாரும் ஆடும் நடனம்பார்க்கணும்னு (உடனே) ஆவலாயிடுச்சு:)
//

நன்றி வல்லிம்மா!


ஒ.கே தேங்க்ஸ் திரும்ப தலைவருக்கு ஹாய் சொல்லிட்டீங்களா? பாட்டு கேட்டுட்டு :)))

said...

// அமுதா said...
நல்லா இருக்கு... இன்னொரு வெர்சன் போட்டாலும் கலக்கிவிடுவீர்கள்...
//

ஆமாம் அப்படியே சினிமாவை வைச்சு கலக்கிக்கிட்டே இருக்கலாம் எம்புட்டு வர்சன் போட்டும் :))))

(இன்னும் கூட நான் பார்த்து அழுத படங்கள் நான் பார்த்து சிரித்த படங்கள் நான் பார்த்த படம் பார்த்து என்னை பார்த்து சிரித்த மனிதர்கள் இப்படியே போய்க்கிட்டே இருக்கும்....! -
இல்ல இதெல்லாம் சும்மா பயமுறுத்துறதுக்கு சொன்னேன்! )

said...

//ஸாவரியா said...
மிகவும், ரசித்து, ரசித்து படித்தேன்..
சிரித்து, சிரித்து, இன்னும் ரசித்து படித்தேன்.
பதிவு ரொம்ப நல்லா..
இருக்குன்னு...நினைக்கிறப்ப..கீழே பார்த்தா..ஆ..!!!

எனக்கு ஆப்பு காத்துக்கொண்டிருந்தது!

உங்கள ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன்...:(

TRY பண்ரேன்...பாத்துச் சொல்லுங்க I mean commentங்க
//

அட என்னங்க இதை போய் ஆப்புன்னு சொல்றீங்க! இதெல்லாம் சும்மா ஜுஜுபி மேட்டரூ!

(பட் உங்க கிட்ட மட்டும்தான் கேக்காம உங்களை tag பண்ணிட்டேன் சாரி! - kadagam80@gmail.comக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு போங்க!)

கலக்குங்க!
நான் கமெண்டிட வர்றேன் :))

said...

//மாரியப்பா தியேட்டருக்கு போனா காலேஜே அங்கதான் நிக்கிது (படம் - காதலுக்கு மரியாதை!) பார்த்தே தீரவேண்டும் //

See , kaathalukku mariyathai is a nice film.

i am also like that one.

said...

சூப்பர்:):):)

இருவர் எனக்கும் பிடிக்கும், ஆனா படம் ஒரு கோர்வையே இல்லாத பீல் கொடுக்குது. பெரியார் படமும் அப்படித்தான் இருந்துச்சி:(:(:(
பாண்டி நாட்டுத் தங்கம் கார்த்திக், நிரோஷா நடிச்சதா?
நான்கூட சுந்தரகாண்டம் தியேட்டரில்தான் பார்த்தேன்:):):)

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
//மாரியப்பா தியேட்டருக்கு போனா காலேஜே அங்கதான் நிக்கிது (படம் - காதலுக்கு மரியாதை!) பார்த்தே தீரவேண்டும் //

See , kaathalukku mariyathai is a nice film.

i am also like that one.
//


தெரியும் ராசா?

எம்புட்டு வாட்டி பாத்துருபீங்க அதுவும் கிளைமாக்ஸ்ல ஸ்ரீவித்யாக்கிட்ட, எடுத்துங்கோங்க அப்படின்னு சொல்றப்ப ஆனந்த கண்ணீர் மழையெல்லாம் பொழிஞ்சுதாம்ல :)))))))

said...

// rapp said...
சூப்பர்:):):)

இருவர் எனக்கும் பிடிக்கும், ஆனா படம் ஒரு கோர்வையே இல்லாத பீல் கொடுக்குது. பெரியார் படமும் அப்படித்தான் இருந்துச்சி:(:(:(
பாண்டி நாட்டுத் தங்கம் கார்த்திக், நிரோஷா நடிச்சதா?
நான்கூட சுந்தரகாண்டம் தியேட்டரில்தான் பார்த்தேன்:):):)
//

அதுதான் பெயில் ஆகிப்போச்ச்சா? :(

ஆமாம் நிரோஷாவும் கார்த்திக்கும் நடிச்ச படம்! (கழுத்தில மப்ளர் போட்டுக்கிட்டு ஊரை சுத்துறது ஒரு பேஷனாக்கியது!)
உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது!
சிறுகூட்டுல உள்ள குயிலுக்கு இப்படி அம்புட்டு பாட்டுமே ஹிட்ஸ்தான்:))

நன்றி ராப்!

said...

பாண்டிநாட்டுதங்கத்தை எங்க பள்ளிக்கூடத்துலயே காட்டினாங்களே.. :)நீங்கள்ளாம் தியேட்டர்ல போய் பார்த்தீங்களா..?

இன்னும் நிறைய வெர்சன் வச்சிருக்கேன்னு இப்படி எல்லாம் பயமுறுத்தக்கூடாது..

சபரியை கூப்பிட்டதுக்கு நன்றி .

said...

"இருவர்" படம் எனக்கும் பிடித்தது. இப்பவும் பிடிக்குது. நமக்குத் தெரிந்தவர்களைப் பற்றிய நிஜக் கதை என்கிற பார்வையில் இன்னும் இன்னும் சுவாரஸ்யம்.