அன்புள்ள ரஜினிகாந்த்..!

1984ல் வெளியான, "அன்புள்ள ரஜினிகாந்த்"முதன் முதலில் நடிகரின பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த பெருமையை,கொண்ட படம்.
ஒரு ஆங்கில படத்தின் கதைக்கரு,கெஸ்ட் ரோலில் நடிக்க முத்லில் அப்ரோச் செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர் அரசாங்க அலுவல் காரணமாக,நடிக்க மறுத்துவிட,டைரக்டர் கே.நட்ராஜ் தேர்வு செய்தது நெருங்கிய நண்பரான, ரஜினியை!
Photo Sharing and Video Hosting at Photobucket
பெற்றோரின் அரவணைப்பை அறியாத சிறுமி பெரும்பாலும் அனைவரையும் வெறுக்கும் கேரக்டர்,அங்கு நடைபெறும் விழாவிற்கு வரும் ரஜினியை காண ஆர்வமின்றி வெறுப்புடன் இருக்கும் சிறுமி பின்னர் அந்த ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார் பின்னர்பிறிதொரு சமயத்தில் ரஜினியின் "அன்னை ஒர் ஆலயம்" திரைப்படத்தை காணும் போது அதில் வரும் சம்பவங்கள், ரஜினியின் மீது அளவு கடந்த ப்ரியத்தை உண்டாக்கும்,(அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்டமுனுகூட சொல்லலாம்)

இக்காட்சிகள் மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் பல காட்சிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு காரணம்!
ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல
தயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்!
பாடல்களில் கூட கதைக்கேற்ப ஒருவித சோகம் இழையோடும்.
அதிலும் குறிப்பாக,

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...!

ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

"சிவாஜி" காலத்தில் அ.ர பற்றிய ஒரு இடுகை . :))))

எனக்கும் பிடித்த படம் அது. முக்கியமாக சிறு வயது மீனா..

said...

//ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல!//

உண்மைதான்!

said...

நல்ல விமர்சனம்...அதென்ன ஆயில்யன் கடகம் உங்கள் நட்சத்திரமும் ராசியுமா? நல்ல தமாசு

said...

எனது உறவுகளுக்கு பயந்து,(எல்லா பயலுகளும் கணிணித்தட்டிக்கிட்டு இருக்கானுவோ)
புனைபெயர் தேடி அலுத்துபோய் உட்கார்ந்த போதுதான் எனக்கு நினைவிக்கு வந்தது இந்த பேரு உங்களுக்கு சிரிப்பாக இருக்கு ( பேரு வைக்க நான் பட்ட பாடு எனக்குள்ள தெரியும் )

said...

புனைப்பெயர் வைக்க தடுமாறிய முதல் ஆள் நீங்கதான் என்று நினைக்கிறேன்.இதுவும் தமாசுதான்

http://ushnavayu.blogspot.com/

said...

Nice post!