இஸ்லாமிய கோட்பாட்டினை கடைபிடிக்கும் நாட்டின் ஒரு மதச்சின்னமாக திகழ்ந்த லால் மஜீத் அல்லது செங்கோட்டையை காயப்படுத்துமளவுக்கு
அதிரடி நடவடிக்கையை முஷாரப் அரசு எடுக்கும் என்று நினைத்துக்கூடபார்த்திருக்கமாட்டர்கள் பலியான திவிரவாதிகள்.
அதிரடி நடவடிக்கையை முஷாரப் அரசு எடுக்கும் என்று நினைத்துக்கூடபார்த்திருக்கமாட்டர்கள் பலியான திவிரவாதிகள்.
1965ல் அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த மசூதிக்கு ஜியா-உல்-ஹக் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த முஸ்லீம் மதகுரு மவுலானா
முகம்மது அப்துல்லா அவர்களை முதல் இமாமாக அரசு அறிவித்தது.இவரின் இரு பிள்ளைகள்தான் தற்போது நடந்த இந்த தாக்குதலுக்கு
காரணகர்த்தாக்கள்.
இந்த லால் மஜீத் மதச்சிந்தனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் அமைப்பாக திகழ்ந்த இங்கு, பொருளாதார சூழலில் பின் தங்கியிருந்த, பல
இடங்களிலிருந்து வந்த,சுமார் 5000 மேற்ப்பட்ட, ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இரு மதராஸாக்களிலும் இஸ்லாத்
பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் லால் மஜீத் அரசாங்க எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, தாலிபான் ஆதரவு கோஷங்களில் முக்கிய கவனம் செலுத்தியதுப்பற்றி அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தே இருந்தது.
முகம்மது அப்துல்லாவின் தாலிபான் ஆதரவு தீப்பொறிக்கும் பேச்சில் பல தீவிரவாத கும்பல்கள் கட்டுண்டுகிடந்தன.
1998ம் வருடம் இதே லால் மஜீத முன்பு வைத்து எதிர்தரப்பினரால் கொல்லப்பட்டார் அப்துல்லா
தன் தந்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்கய்தா தலைவன் ஒசாமா பின் லேடனை சந்தித்துள்ளார் என்று பெருமை பொங்க கூறி கொண்டிருந்தவர்தான் நேற்று நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட முகம்மது அப்துல்லாவின் இளைய மகன் அப்துல் ரஷித் காஷி.
தந்தையின் இறப்பிற்கு பின் லால் மஜீத் பிள்ளைகளின் கட்டுபாட்டில் வழக்கமான முறையில் தீவிர, தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பணியில்
ஈடுப்பட்டுவந்தனர்.
தாலிபான் தீவிரவாதிகளுடன் போரிட்டு பலியாகும் பாகிஸ்தான் படைவீரருக்கு மத சம்பிரதாயங்களை செய்யக்கூடாது. என்று ஒரு அறிவிப்பினை,2005ம் ஆண்டு இவர்கள் வெளியிட, நிர்வாகத்திலிருந்து அரசால் வெளியேற்றப்பட்டாலும் இவர்கள் தம் சேவையினை தொடர்ந்தனர்.
கடந்த சில மாதங்களாக இவர்கள் செய்த சில அதிரடி வேலைகள்,
இஸ்லாம் தீவிரவாதம் பற்றிய எப்.எம் வானெலி நிலையம்
இஸ்லாம் அடிப்படையிலான கடுமையான தண்டனைகள் கொண்ட கோர்ட் அமைக்க அடிப்படை கட்டுமானங்கள்.(விபச்சாரம் செய்ததாக கூறி வெளிநாட்டினை சேர்ந்தவர்கள் உள்பட சிலரை கடத்திசென்று பின்னர் விடுவித்தது.)
இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் மசூதியில் மாணவர்கள் கைத்தடிகளுடன் நடமாடுவதையும்,எப்பொதுமே ஜிகாதி பாடல்கள்
ஒலித்துகொண்டிருப்பதையும் அறிந்த ஐ.எஸ்.ஐ (மிக அருகாமையில்தான் இதன் அலுவலகமும்) ஏதோ பெரும் திட்டமாகத்தான் இருக்ககூடும் என்
அரசுக்கு அறிவிக்க,
அரசு அந்த இடத்தில் பாதுகாப்பு படைகளை கூடுதலாக்கியது.அப்போதும் கூட நான்கு போலீசார் கடத்தப்பட்டு மசூதியில் சிறைவைக்கப்பட, பிற்பாடு மசூதி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி போலீசாரை மீட்டனர். அனைவரையும் வெளியேற்ற அரசு முற்பட,எதிர்பார்த்ததை போன்றே,மசூதியை விட்டு வெளியேற மறுத்ததுடன்,உள்ளிருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தரப்பட,
முஷாரப்பிற்கோ சற்று அமைதியாக இருந்து பார்ப்போம் என்று, மசூதியில் உள்ளவர்கள் சரணடையுமாறு ஒரு செய்தி விடுக்க, என் உயிரே போனாலும் சரணடையமாட்டேன் என்று காஷி கர்ஜிக்க, விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
மேலை நாடுகளின் அடுத்தடுத்த அழுத்தங்களால், முஷாரப் ராணுவத்தை அழைக்க,பதினைந்து மணி நேர சண்டை, ஐம்பது பேர் பலி அவர்களுடன்
சேர்த்து, தலைமை வகித்த அப்துல் ரஷித் காஷிக்கும் முடிவு கட்டியது ராணுவம்.
பிரச்சனை முடிந்தாலும்,
மசூதிக்குள் ராணுவம் சென்றது தவறு.
அமெரிக்காவின் காலை வருடும் செயல்!
முதன்மை நீதிபதி விவகாரத்தை திசை திருப்ப முஷாரப் அரசு ஐ.எஸ்.ஐயை கொண்டு நடத்திய நாடகம் எனபல சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன.
அது மட்டுமில்லாமல், சண்டை முடிந்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அல்-கய்தாவிடமிருந்து மிரட்டலும் வந்தாகிவிட்டது.
முஷாரப் என்ன செய்யப்போகிறார் என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பு.
இதில் லேட்டஸ்ட்டாக முஷாரப் செய்தது சரிதான்! என்று ஆதரவு அறிக்கை விடுத்துள்ளார் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ.
நீ..! எதுவாக நினைக்கிறாயோ? அதுவாகவே ஆகிறாய்..! - நடந்த சம்பவங்கள் குறித்து பாகிஸ்தானிற்கான அமெரிக்க முன்னாள் தூதுவர்
வெளியிட்ட கமெண்ட்!
0 பேர் கமெண்டிட்டாங்க:
Post a Comment