வீட்ல சும்மா இருந்தா எப்படி? - தண்டச்சோறு


பொதுவாக அனைவரின் மனதிலும் ஏற்படும் எண்ணங்கள்,
பலர் நினைக்கும் ஒரு விஷயம்-வெளிப்படுத்த இயலாத-சிலர் வெளிப்படுத்தும்போது, அட நாம் என்ன நினைச்சோமோ, அப்படியே புட்டு, புட்டு வைக்கிறார்ன்னு ஒரு ஆச்சரியம் ஏற்படும்.

சில மனிதர்களிடம் மட்டுமே இத்தகைய திறமைகள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன் அப்படிப்பட்டவர்களுள் எனக்கு பிடித்தமானவர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தவார விகடன் "கேள்விக்குறி"யில் இவரின் எழுத்தை வாசித்து பாருங்களேன்

ஒரு வேலை - வாழ்க்கையை சிறப்பானதாக்கிக்கொள்ள- பெற எதிர்கொள்ளும் அனுபவங்களின் தொகுப்பு

//தவிர்க்க இயலாமல் அந்த வலியை ஒவ்வொரு-வரும் ஏதோவொரு வயதில் எதிர்கொள்கிறார்கள். கல்லூரி முடிக்கும் வரை வாழ்வு பற்றிய கனவுகளில் சிறகடிப்பவனின் கால்களை, திடீரென ஒரு முதலை கவ்வி தண்ணீருக்குள் இழுப்பது போன்று வாழ்வின் நெருக்கடிகள் இழுக்கத் துவங்குகின்றன.

சாப்பிடும் தட்டிலிருந்து முகம் பார்க்கும் கண்ணாடி, காபி டம்ளர் என்று ஒவ்வொன்றும் ‘ஏன் வீட்ல சும்மா இருக்கிற?’ என்று கேட்கிறது. தட்டில் போடப்படும் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட முடியாமல் நாக்கு கசக்கிறது. யாராவது ஏதாவது பேசினால்கூட அது தன்னைப் பற்றித்தானோ?
என்ற எரிச்சல் வருகிறது. இதமாக இருந்த வீடு, திடீரெனப் பற்றி எரியும் காட்டைப் போல வெக்கை உமிழ்கிறது. கனவுகள் சிதறடிக்கப்படுவதில் இருந்துதான் நம்மில் பலரது வாழ்க்கையும் துவங்குகிறதா?

வாழ்வு எளிதானதில்லை என்று உணரச் செய்யும் இதுபோன்ற தருணங்கள், வேலை கிடைக்காதவர்களைக் காணும்போது மனதில் மெல்லிய நடுக்கத்தை உருவாக்குகிறது. அவர்களுக்கு உரிய வேலை கிடைக்கட்டும் என்று மனம் தானே பிரார்த்தனை செய்கிறது.
இவ்வளவு பெரிய உலகில் ஏதோவொரு வேலை இல்லாமல் போய்விட்டதா என்ற சந்தேகமும் கூடவே ஏற்படுகிறது. வேலையின் வழியாக மட்டுமே நம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான் இத்தனைக்கும் காரணமா?
வீட்டில் சும்மா இருப்பதற்கு உண்மையில் எந்த மனிதனும் விரும்புவதில்லை. ஆனால், சூழல் அவனை வெளியே செல்லமுடியாதபடி ஒடுக்கிவைத்திருக்கிறது. வாழ்வை எதிர்கொள்வதற்கான துணிச்சலை நம் கல்வி முறை கற்றுத் தருவதில்லை; மாறாக, அது கல்வியின் வழியாக பொற்காலம் உருவாகிவிடும் என்ற பொய்யான கற்பிதம் ஒன்றையே உருவாக்குகிறது. அது கலையும்போது வாழ்வை நேரடியாக எதிர்கொள்ளும் துணிச்சல் நம்மிடம் இல்லை.

நன்றி!
எஸ்.ராமகிருஷ்ணன் & விகடன்

2 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

நினைத்தென்னவோ படிப்பகத்தில் வேலை.ஆனா அங்க இங்க முட்டி மோதி கடைசியா தமிழ் ஒண்ணாம் வகுப்பு சேர்ந்து இப்பத்தாங்க பின்னுட்டம் வரைக்கும் வந்திருக்கேன்.படிப்பு கட்டாயம் வேணுங்க அது எந்த மாதிரியாக இருந்தாலும்.மேலும் நம்மகிட்ட பிளாக்கெல்லாம் கிடையாது.எனவே அனானியாக

அன்புடன்
நடராஜன்.

said...

ராமகிருட்டிணனின் எழுத்துக்கள் மிக அருமை..நானும் விகடனில் படித்தேன்...இதில் கூறப்பட்டுள்ள விசயங்கள் மிக மிக உண்மையானவை. இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அனுபவிக்காத நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் மிக அரிது.