கட்டிடப்பொறியியல் வல்லுநர்
கணினித்தமிழ் வல்லுநர்.
கணினித்தமிழ் வல்லுநர்.
1960களில் தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணியாற்றிய, இவர் தன்னை துறைக்கேற்ப சமரசப்படுத்திக்கொண்டிருந்தால், இந்நேரம் தமிழ்நாட்டளவில் தலைமை பொறியாளர் வரைக்கும் பணி வகித்து இந்நேரம் தம் ஒய்வு காலத்தை கழித்துக்கொண்டிருந்திருக்ககூடும்!
பொதுப்பணித்துறையின் பணிகளை விட கல்விபணி இவரை கவர்ந்திழுக்க கான்பூர் ஐ.ஐ.டியில் கல்வியாளராக பணி வகித்த இவருக்கு நினைத்தையெல்லாம் செயல்படுத்துமளவுக்கு சுதந்திரம்., மிக்க மகிழ்ச்சியுடன், அன்று இவர் மேற்கொண்ட பணிகள் - இன்று தரமான தொழில்நுட்ப உயர் கல்வி அளிக்கும் ஒரு நிறுவனமாக அமைவதற்கு போட்ட விதைகள்!
புதிய, புதிய, தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை நம் நாட்டிற்கேற்ற முறையில் பயன்படுத்துதல் தொடர்பான பணிக்காக, இந்திய அரசு சில குறிப்பிட்ட நாடுகளின் இந்திய தூதரகங்களில் அறிவியல் ஆலோசகர் என்ற, பதவியினை ஏற்படுத்தி அதில் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமித்தது. இப்பணிக்காக அமெரிக்காவிற்கு சென்றார் ஆனந்தகிருஷ்ணன்.
அமெரிக்காவில் கணினி தொடர்பான பணிகளால் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம்தான் பின்னாளில் தமிழை கணிணிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த விஷயங்களில், தமிழகம் பெரும் வளர்ச்சியடைய, இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு காரணம் என்றும் கூறலாம்.!
பின்னர் சில வருடங்கள் ஐ.நாவின் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு,தமிழ்நாட்டில் அண்ணா பல்கலையில் துணைவேந்தராக பணியாற்றிய காலகட்டத்தில்தான் தொழில்நுட்ப கல்வித்துறையில் மிக பெரும் மாற்றங்கள் கண்டது. தொழில்நுட்ப கல்லூரிகளில் நுழைவு தேர்வு முறையில் சேரும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்து வந்த கலைஞர் அரசில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கான முதல்வரின் ஆலோசகராக பணியாற்றிய சமயத்தில்தான்,கணிணித்துறையில் தமிழை கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமடைந்தன.
1997ல் சிங்கப்பூரில் ஆரம்பித்து, இன்று வரை புதிய தொழில்நுட்பங்களை, நான்காம் தமிழாம் கணினித்தமிழிற்கு அறிமுகப்படுத்தும் பணியில் மு. ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பணியாற்றிவரும்
மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் தொழில் நுட்ப கல்வி சார்ந்த கட்டுரைகளை வருடம்தோறும் வெளிவரும் “தினமணி” மாணவர் மலரில் படித்து பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் பெருமைதான்..!
கல்வி சான்றிதழ் மட்டுமே நம்மை ஒரு நல்ல வேலைக்கு தகுதியான நபராக மாற்றது கூடுதல் தகுதிகளாக கணினிக்கற்றல், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை..!
கல்லூரிகளில் கற்றறிந்தது மட்டுமே போதுமென்ற நிலையை தவிர்த்து,புதிது புதிதாக பயில தயாராக இருக்க வேண்டியதன் அவசியம்.தம் பயின்ற துறை தவிர்த்து,சார்ந்திருக்ககூடிய துறைகளிலும் சற்று ஈடுபாட்டை அதிகரித்தல் போன்ற விஷயங்களை திரு மு.ஆனந்த கிருஷ்ணன் அவர்களிடமிருந்து என்னை போன்று பலரும் கற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.!
1 பேர் கமெண்டிட்டாங்க:
/அமெரிக்காவில் கணினி தொடர்பான பணிகளால் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம்தான் பின்னாளில் தமிழை கணிணிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கி,/
here we go again...!!
Post a Comment