வேலைக்கு வந்த புதிதில் ஆபிஸ் பாயிடம் டீ கேட்கவே மிகவும் யோசனையாக இருக்கும், வேற என்ன? லாங்க்வேஜ் பிரச்சனைத்தான் அவன் ஈரானி நான் ஒண்ணு சொன்னா அவன் ஒண்ணு செய்வான்,சில வாரங்களிலேயே இந்த பிரச்சனைக்கு முடிவு வந்ததது.
இலங்கை தமிழ் ஆளு ஒருத்தர் வந்தாரு! நான் கேட்கறதுக்கு முன்னமே கரெக்டா காபி வந்துடும், அதுவுமில்லாம ஏகப்பட்ட வெரைட்டிகள் இருப்பதையும் அவர் மூலம் தான் நான் தெரிந்துகொண்டேன். என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, செம்பருத்தி டீ!
முக்கியமான இன்னொரு ஐட்டம் காவா!
பெரிய அளவில் அரபிகள் விரும்பி அருந்தும் காபிடீ! ஆமாங்க இத காபில சேர்க்கறதா இல்லை டீயில சேர்க்கறதான்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம், அந்தளவுக்கு விவாதங்கள் உண்டு!
நம்மூரு காப்பி மாதிரி சொம்பு அள்வுக்கு குடிக்க முடியாது கொஞ்சூண்டு சுமார் நூறு மில்லி ஊத்திக்கிட்டாபோதும் சும்மா சுப்பரா இருக்கும்..!
உங்களுக்கும் குடிக்கணுமுனு ஆசையிருந்த டிரை பண்ணி பாருங்க..!
ஏலக்காய் விதைகளை எடுத்து தண்ணியோட சேர்த்து கொஞ்சம் நேரம் கொதிக்க வைச்சு,காபிக்கொட்டையை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, அதோட சிறிதளவு ஏலக்காய் மற்றும் பாதாம், குங்குமப்பூ, இஞ்சி சேர்த்து(கண்டிப்பா இனிப்பு கெடையாது)
இளம் சூட்டில் ஒரு "சிப்"பிப்பாருங்கள் இதைத்தான் அரபிய நாட்டு ஷேக்குகள் குடித்து நல்லா ஷோக்கா இருக்காங்க!
நீங்களும் டிரை பண்ணி பாருங்க, ஆனா முதல் தடவை ரெடிப்பண்ணும்போதே நீங்க நெனைக்கிற டேஸ்ட் வந்துடாது, நல்ல விஷயம் அதனால் கொஞ்சம் நெறையா தடவை டிரை பண்ணுனா, காவா வரத்தானே வேணும்!
2 பேர் கமெண்டிட்டாங்க:
காவான்னதும் என்னன்னு வந்து பார்த்தேன். தினம் குங்குமப்பூ எல்லாம்
கட்டுப்படியாகுமா நமக்கு?
ஃபிஜித்தீவுகளில் 'காவா'ன்னு சொல்லப்படும் ட்ரிங் அங்கத்து தேசீய ட்ரிங்.
யகோனா என்னும் செடியின் வேரை அரைச்சு அதுலே தண்ணீர் கலக்கிக் குடிப்பாங்க.
இது 'யகோனா செரிமனி'ன்னு தேசீய மதிப்பு வாய்ந்தது. வெளிநாட்டு விருந்தினர்
பங்கெடுக்கும் அரசு விருந்துகளில்கூட இது கட்டாயம் இடம் பெறும்.
உங்க பதிவில் படம் அருமையா இருக்கு.
//வேலைக்கு வந்த புதிதில் ஆபிஸ் பாயிடம் டீ கேட்கவே மிகவும் யோசனையாக இருக்கும், வேற என்ன? லாங்க்வேஜ் பிரச்சனைத்தான் அவன் ஈரானி நான் ஒண்ணு சொன்னா அவன் ஒண்ணு செய்வான்,சில வாரங்களிலேயே இந்த பிரச்சனைக்கு முடிவு வந்ததது.// here we dont have any office boys or peons... including top managers, everyone will walk to kitchen/cafeteria to have whatever they wish. However, I do agree... this language problem is really killing...i too suffered a very bad run couple of years ago...ippO pazhagidichhi :)
Post a Comment