என் ஈழ நண்பர்களுக்காக!

வந்த நாள் முதலே எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது இங்கு வாழும் ஈழ சகோதரர்கள்தான் எனக்கு சுத்தமாக புரிபடவேயில்லை என்ன அழகாக தமிழ் பேசுகிறார்கள்!

நான் காலடி எடுத்து வைத்த நாள் முதல்கொண்டு அவர்கள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை நல்லா கதைங்க மாஸ்டர்..?

அவங்களுக்கு எங்கிட்ட இருந்து ஏதாவது புதிது புதிதாய் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கோ நான் பேசுவதைவிட அவர்களை பேச சொல்லி கேட்பதில் ஆர்வம்!

சிலர் பேசுவது நகைச்சுவையாகவே இருக்கும், சிலர் பேசுவதில் தீப்பிழம்பு தெறிக்கும்!

சில வாரங்களிலேயே அனைவரது இருப்பிடத்திற்கும் செல்லும் பழக்கம் ஏகப்பட்ட பேரை நண்பர்களாக அறிமுகப்படுத்தியிருந்து.-அடேய் இவர்தான் எங்கட கொம்பனி மாண்டீஸ்- மாஸ்டர் இவன் தான் கத்தார் ஷேக் மினிஸ்டர் வீட்ல வேலை பார்க்குறான் பாருங்க எப்படி பளபளன்னு இருக்கான்னு!போன்ற அறிமுகங்களில் நான் அசந்துபோனேன்!

இது நாள் வரையில் ஒருவர் கூட என்னை பார்த்து நீங்க தமிழ் நாடான்னு கேட்டதேயில்லை! ஸ்ரீலங்கி..?! என்னை பார்த்து இந்த கேள்வி கேடக தூண்டிய என்னுடைய திராவிட கலருக்கு தாங்க்ஸ் சொல்லலாம்.


இதையெல்லாம் விட என்னை ஆச்சர்யப்படுத்தியது நம் தமிழ் திரைப்படங்களிலும்.பாடல்களிலும் இவர்கள் கொண்டுள்ள ஈடுபாடு!

தமிழக அரசியல்வாதிகள் பற்றி நெறையா தெரிஞ்சுவைச்சுருக்காங்க ஆனா பெரும்பாலும் அது நம்மாளுங்களோட பில்ட்-அப் சேதிகள்தான்னும் பலருக்கு தெளிவான எண்ணங்களுமிருக்கு. - நினைத்தே பார்க்காத வைகோ -ஜெ கூட்டணி., இதுபோலவே ராம்தாஸ்சும் திருமாவும் பல்டி பார்ட்டிகள்தான் போன்ற நினைப்பிருந்தாலும் மிகுந்த பாசத்துடன் பார்ப்பது நெடுமாறனைத்தான்!

நன்றாக கணினி பழகும்,படிக்கும் சிலரிடம் நான் கேட்டது. ஏன் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளில் ஈடுபடவில்லை என்ற கேள்விக்கு வசதி,வாய்ப்புகளற்ற வாழ்க்கை மட்டுமல்ல,வாழ்விடம் கூட வாய்க்காத வகையிலான வரம் பெற்றவர்கள் நாங்கள் என்ற வார்த்தைகளில் நான் விட்ட கண்ணீர் -அம்மாவை பிரிகையில் விமான நிலையத்தில் நான் விட்ட கண்ணீரை விட பல மடங்கு!


ஒரு வாரம் சுதந்திரமா உங்க ஊருக்கு வந்து,தங்கி தேவாரம் பாடிய கோயில்களுக்கு போய் நிம்மதியா சாமி கும்பிடணும் மாஸ்டர் - என்னிடம் ஒரு ஈழ நண்பன் கேட்டது என்னால் முடியுமா? என்று தெரியவில்லை! ஆனால் எனக்கு அது ஒரு இலக்காகிவிட்டது அன்று முதல்..!

அறிமுகமாக நிலையிலும் ஆசையாக சாதமும் பருப்பும்,கொடுத்த,

ஊருக்கு செல்கையில் விமான நிலையத்தில் வந்திருந்து ஆசையாக அனுப்பிய!

எங்கோ ஒரு மூலையில் வெயிலில் வாடினாலும் அடிக்கடி வரும் ஹலோவிற்காகவும்!

என் ஈழ நண்பர்களுக்காக...!

12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்..........

எல்லாத்துக்கும் தமிழும் ஒரு காரணம் இல்லையா?

said...

உங்கள் நட்பு... உறவாக மாறட்டும்.

said...

மிக்க நன்றி ;-)

said...

ஈழத்துத் தமிழ் சகோதரர்களின் தமிழ்ப் பற்று என்னை வியக்க வைத்த ஒன்று..

said...

இந்த பாடலை கேட்கும் எல்லா ஈழத்தவர்களுக்கும் பொங்கும் உணர்வுகளில் நீங்களும் கலந்து கொண்டமைக்கு நன்றி.

said...

உண்மையில் நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜத்தில் வார்த்தைகள்
1)போர்காலத்தாலும் அதன் தாக்கம் பொருளாதாரத்தில் காட்டியதாலும் கல்வியிழந்தோர் பல் அதாவது ஒருகாலத்தில் இலங்கையில் தரப்படுத்தல் கொண்டு வர முன்பு பல்கலைகழகத்தினுள் புகுவதில் 65 வீதமானவர்கள் தமிழர்களாக இருந்தார்கள் இன்று தரப்படுத்ல் இல்லை என்றால் பல்கலைகழகம் போக முடியுமா என்ற நிலையை தமிழனுக்கு உருவாக்கியது யுத்தம் என்றால் அதை மறுக்கமுடியாது
2)தமிழக அரசியலில் அன்று தொட்டு தமிழீழ மக்கள் அக்கறை கொண்டிருந்தார்கள் அன்று அண்ணாத்துரை (காமராயரில் அவ்வளவு தமிழீழமக்கள் ஈடுபாடுவைக்கவில்லை பின்பு புரட்சிதலைவர் இன்று ஏனோதானோ என்று கலைஞர் மீதும் அவர்கள் நெடுமாறன் மீது வைத்திருப்பது அரசியல் கடந்த ஒரு நட்பு அல்லது உறவு என்று கூட சொல்லலாம் வைகோ மீது ஒரு புரட்சிபாசம் அவ்வளவுதான் ஜெயாவை நினைத்தும் பார்ப்பதில்லை இதை நான் ஈழத்துதமிழன் என்ற வகையில் கூறுகிறேன்

said...

//நன்றாக கணினி பழகும்,படிக்கும் சிலரிடம் நான் கேட்டது. ஏன் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளில் ஈடுபடவில்லை என்ற கேள்விக்கு வசதி,வாய்ப்புகளற்ற வாழ்க்கை மட்டுமல்ல,வாழ்விடம் கூட வாய்க்காத வகையிலான வரம் பெற்றவர்கள் நாங்கள் என்ற வார்த்தைகளில் நான் விட்ட கண்ணீர் -அம்மாவை பிரிகையில் விமான நிலையத்தில் நான் விட்ட கண்ணீரை விட பல மடங்கு!//

truly touching.
நீங்கள் சொன்னது அனைத்தும் 100% உண்மை.

Anonymous said...

நன்றிகள் பல..

said...

மிக்க நன்றிகள்.

said...

உங்களைப் போன்ற தமிழ் நாட்டு உறவுகளுக்கு நாம் என்றும்
நன்றி உடையவர்களாக இருப்போம்.

said...

உங்களைப் போன்ற பல நல் உள்ளங்களின் அன்புக்கு நம் நன்றிகள்...!

said...

மிக்க நன்றி