இரவு பத்து மணி அண்ணா சாலையில் ஹிக்கின்பாதம்ஸ் கிட்ட உள்ள அன்னலட்சுமிக்கு ஹோட்டலுக்கு செல்லவேண்டும்னு கலாம் சொன்னதுமே, ஆஹா ஆரம்பிச்சிட்டாருயான்னுதான் செக்யூரிட்டி அதிகாரிகள் நினைச்சிருப்பாங்க!
பாருங்க வந்து ஒரு நாள் கூட ஆகலை அதுக்குள்ள கிளம்பிட்டரு!
(ஃபாரின்ல கொஞ்சம் வருஷம் இருந்து நல்ல சாப்பாட்டுக்கே வழியில்லாம நாமதான் இப்படி கடைகண்ணியை தேடி ஒடுவேமுனா இவருமா?)
அங்க போயி இஸ்ரோ பிரண்டுக்காக வெயிட் பண்ணி, சாப்பிட வந்த,
குட்டிஸ்க்கிட்ட கேள்வி கேட்டு ஆட்டோகிராப் போட்டு, சாதம் சாம்பார் வத்த குழம்பு எல்லாம் ஐட்டத்தையும் ஜமாய்ச்சிட்டு வீட்டுக்கு போறப்ப நைட்டு மணி 12
வெளி நாட்ல இருக்கறவங்கத்தான் ,ஊருக்கு போறப்ப,அந்த ஹோட்டல்ல போய் சாப்பிடணும் இந்த கோயிலுக்கு கண்டிப்பா போய் வரணுமுனு ஒரு திட்டம் போட்டு வைப்பாங்க அத மாதிரியே இவரும் நல்லா பிளான் பண்ணிருப்பாரோ!
சரி அப்படி என்னாதான் அந்த ஹோட்டல இருக்கு பார்ப்போம்
அருமையான இன்டீரியர் டெகரேஷனுடன் மர வேலைப்பாடுகளமைந்த இந்த ஹோட்டல் எப்பவுமே பிஸிதாங்க!
சைவ சாப்பாட்டுக்குன்னே ஒரு தனி ஹோட்டல் அதுவும் அத சர்வ் பண்றவங்க எல்லாரும் வாலண்டியர்ஸ்! ஆச்சர்யமாருக்குல்ல..!
இதை ஆரம்பித்தது சுவாமி சஹாநந்த சரஸ்வதி. இவரு சிவானந்தா சாமிகளோட சீடராம்.
இந்த ஹோட்டலின் மூலம் பெறப்படும் பணம் சிவாஞ்சலி என்னும் அறக்கட்டளை மூலம் சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது!
ஸ்பெஷல் சாப்பாடுன்னு சொன்னா ரெண்டு மாடல்ல நம்ம சாப்பிடலாம்!
ஒண்ணு சம்பூர்ணா இன்னொன்னு சுவர்ணலெக்ஷ்மி
நான் தங்கதட்டுல சாப்பிட்டவன் அப்படின்னு பில்ட்-அப் கொடுக்கணுமுனா நீங்க செலக்ட் பண்ண் வேண்டியது சுவர்ணலெக்ஷ்மி இதுலதான் எல்லா ஐட்டமும் தங்கத்தாலான பாத்திரங்கள பரிமாறுவாங்களாம்
எல்லாம் ஒஹோதான்! ஆனா சாப்பாட்டுக்குன்னு நீங்க செலவளித்த தொகை கொஞ்சம் பெருசாத்தான் தெரியும்! ஆனா என்ன அந்த காசு ஏதோ ஒரு விதத்தில சேவைக்குத்தானே போகுது அதனால ஒகேதான்!