வாழ்த்து அட்டை!


பொங்கல்,தீபாவளி மற்றும் புத்தாண்டு போன்ற இன்னபிற விசேஷங்கள் வருகிறதென்று தெரிந்தால் ஒரு மாதத்திற்கு முன்பே ரொம்ப ஜாலி + இண்ட்ரஸ்ட் ரெண்டும் கலந்து கட்டி அடிக்கும் !குட்டி பையனை இருக்கும்போது கடையில கார்டு வாங்கி வாழ்த்துக்கள் எழுதி அனுப்புற பழக்க இருந்துச்சு பிறகு இப்ப சுட்டி பையன் ஆனாப்பிறகு எதையாச்சும் கிரியேடிவ்வா செஞ்சு வாழ்த்து சொல்லணும்ன்னு மனசு கிடந்து துடியாய் துடிக்கும்! அதுவும் போட்டோஷாப் இன்னும் பல கிறுக்கு வேலைகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்ட பிறகு நிறைய நிறைய டெஸ்ட் செஞ்சு பார்க்க தோணிடும்!

கூகுள்ல அலைஞ்சு திரிஞ்சு சூப்பரா ஒரு போட்டோவை சுட்டு அதுல என்னோட (இல்லாட்டி மல்லு ஃபிகர்) போட்டோவை போட்டு பேக்கிரவுண்ட் எல்லாம் சூப்பரா செட் பண்ணி கீழ அழகாய் வாழ்த்துக்கள்ன்னு டைப் செஞ்சுட்டு அதை அப்படியே ஒரு பத்து பதினைஞ்சு ப்ரெண்ட்ஸ்க்கு அனுப்பிச்சு வைச்சுட்டா ஹப்பாடான்னு ஒரு திருப்தி வரும்! அதுக்கு ரிப்ளை வருதோ அல்லது அந்த வாழ்த்து or போட்டோ யாரையாச்சும் ஈர்க்குதா அப்படின்னு எல்லாம் கவலைப்பட்டதே கிடையாது!- (ஒரே ஒரு முறை மட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அனுப்பிச்சதுக்கு ஒரு நண்பர் அதெல்லாம் நம்ம கலாச்சரம் இல்லைன்னு போட்டு கும்மிட்டாங்க!)

இயல்பாவே வாழ்த்து அட்டைகள் மேல ஒரு பிரியம் இருக்கறவங்களாலதான் தொடர்ந்து இது மாதிரி வாழ்த்து அட்டைகள் செஞ்சு அல்லது வாங்கி அனுப்பிச்சிக்கிட்டே இருக்கமுடியும்! இதை செய்யறதால என்ன பெருசா சாதிச்சுட்டோம் பதில் ஒருத்தங்க கூட போடமாட்டேங்கறாங்களேன்னு சில சமயம் தனக்கு தானே கேள்விகள் ரைஸ் ஆனாலும்,வெகு சீக்கிரத்துலயே அதை மறக்க வைக்கிற மாதிரி அடுத்து வர்ற விசேஷ நாளுக்கு என்ன செய்யலாம்ன்னுதான் யோசிக்க தோணும்! - லைஃப்ல இதெல்லாம் சாதா’ரண’மப்பான்னு போய்க்கிட்டே இருக்கணும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க :)

போட்டோஷாப்ல ரெடி பண்றது ஒரு ஸ்டைல்ன்னா இன்னும் சில பேர் ஓவியங்கள் வரையறது,படங்களில் சின்ன சின்ன மணிகளை கொண்டு ரொம்ப பொறுமையாக ஒட்டி அனுப்புவாங்க! -சூப்பரா இருக்கும் - முன்பெல்லாம் இப்படி வரும் ஓவியங்களை நிறைய பேர் ஆர்வத்தோட ஃப்ரேம் செஞ்சு,யாரு கொடுத்தான்னு பேர் எல்லாம் எழுதி வீட்ல மாட்டி வைச்சுப்பாங்க! இப்ப அதெல்லாம் ரொம்ப கம்மியாகிடுச்சு !

சரி இப்ப எதுக்கு இந்த பீலிங்க்ஸ் அப்படின்னு நீங்க கேக்கமாட்டீங்க இருந்தாலும் சொல்லவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருக்கே! (பின்னே எண்ட்கார்டு போடணும்ல!) இன்னிக்கு உலகம் பூரா வாழ்த்து அட்டைகள் கிரியேடிவா தாங்களாகவே தயாரிப்பவர்களை உற்சாகப்படுத்தணும்ன்னு உலக நாடுகள் சபை சார்பாக WORLD CARD MAKING DAY கொண்டாடுறாங்க அதான்!

வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் ஆர்வம் நிறைய இருக்கறவங்க ந்த பக்கம்போனீங்கன்னா - ஏகப்பட்ட வித விதமான டிசைன் கார்டுகள் செய்யுறதுக்கு மாடல்கள் கொடுத்து - சோறு போட்டு குழம்பும் ஊத்துறாங்க! டிரை பண்ணி பாருங்க!

28 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல பதிவு ஆயில்யா!

said...

வாழ்த்து அனுப்புவதும் பெறுவதும் அலாதியான இன்பம்தான். அதுவும் நமக்கு மிகவும் பிரியமானவர்கள் தரும்போது அதன் இன்பமே தனி. உங்கள் இடுகை எனது கடந்தகாலத்தை நினைவுபடுத்தியது ஆயில்யன். நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள். :)

said...

பாஸ் வாழ்த்து அட்டைக்கே வாழ்த்து சொல்லி நீங்க பெரிய ஆளுன்னு காண்பிச்சுட்டீங்க பாஸ்

said...

அப்படியே வாழ்த்து அட்டைய பற்றிய ஒரு சின்ன வரலாறும் போட்டிருக்கலாம். “இந்த பழக்கம் இரண்டாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது. அப்போதைய சோழப்பேரரசன்......” அப்படின்னு ஏதாவது மேட்டர் சொல்லியிருந்தீங்கன்னா சூப்பரா இருக்கும் பாஸ்

said...

குட்டி-சுட்டி? புட்டி பையனா ஆகாம இருந்தா சரிங்க பாஸ் :)

said...

''சாத''’ரண’மப்பான்னு போய்க்கிட்டே இருக்கணும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க ..


இதுக்குத்தான் அதிகமா சமையல் பதிவு போடக்கூடாதுன்னு சொல்றது.. பாருங்க.. இப்போ..சாதா ரணம் கூட சாத ரணமாத் தெரியுது

said...

என்னோட ஃபீலிங்ஸ எழுதுன மாதிரியே இருக்கு பாஸ்

said...

ஆயில்யன் இப்பவே பாக்கிறேன்.
எனக்குப் பிடிச்ச விஷயம்.நன்றி.

said...

அட இதுக்கும் தினமா

இய‌ற்கை said...

என்னோட ஃபீலிங்ஸ எழுதுன மாதிரியே இருக்கு பாஸ்//

கன்னாபின்னாவென்று றிப்பீட்டே

said...

/ இய‌ற்கை said...

என்னோட ஃபீலிங்ஸ எழுதுன மாதிரியே இருக்கு பாஸ்/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

ஆமாண்ணே இந்த வாழ்த்தனுப்பறதெல்லாம் இல்லாம போயிடுச்சுல்ல. :(

said...

Super postu :))))

Anonymous said...

good post

said...

பள்ளிப் பருவத்தில் சார்ட் வாங்கி க்ரீட்டிங் கார்ட் ஸைசில் மடித்து அழகான படங்கள் [எதையும் பார்த்து அப்படியே வரைய வரும்:)!] கைப்பட வரைந்துதான் வாழ்த்துக்கள் தயாராகும். பாராட்டி நெகிழ்ந்திடுவார் உறவினரெல்லாம். அது ஒரு காலம். இது பற்றி பதிவிடக் கூட எண்ணியதுண்டு. இன்று உங்களோடு நானும் கொண்டாடிக் கொள்கிறேன் WORLD CARD MAKING DAY-யை! நன்றி!

said...

செய்தி புதுசு.

அது இருக்கட்டும், முதல்ல பதிவு போடுறதுக்கு முன்னால ரெண்டாவது வாட்டி வாசிங்கையா.. முதல் பாராவில எத்தனை தப்பு இருக்குதுனு போட்டியே வைக்கலாம்.!

said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

செய்தி புதுசு.

அது இருக்கட்டும், முதல்ல பதிவு போடுறதுக்கு முன்னால ரெண்டாவது வாட்டி வாசிங்கையா.. முதல் பாராவில எத்தனை தப்பு இருக்குதுனு போட்டியே வைக்கலாம்.!//

பாஸ் பாரா மிஸ்டேக்....???? :))) கண்டுக்காதீங்க !

said...

நல்ல பதிவு அண்ணா... :))

நானும் சின்ன வயசுல இந்த மாதிரி எல்லாம் கார்டு வாங்கி அணுப்பிட்டு இருந்தேன்... இப்ப எல்லாம் விட்டு போயிடுச்சி.. :((

said...

வாழ்த்து அட்டைகள் நாம்
அனுப்புவதால் நண்பர்களைச்
சந்தோஷப் 'படுத்தி'
அதன்மூலம் நாமே
சந்தோஷம் பெறுவதுதான்.
பதில் வருவதைப் பற்றி
நாம் கவலைப்படலாமா?
நல்ல பதிவு, நன்றி ஆயில்யன்.

said...

Same blood!

said...

வாவ்...நான் கூட இதையெல்லாம் பண்ணியிருக்கேன்...மறுபடியும் ஆரம்பிச்சிடலாம் :)

said...

சோறு போட்டு குழம்பும் ஊத்துறாங்க! டிரை பண்ணி பாருங்க! //

பிரியா சோறு போட்டு கொழம்பும் ஊத்துறாங்களா பாஸ், அப்ப கடைய இன்னிக்கு அங்கிட்டு திருப்பிட வேண்டியதுதான்.


இப்ப சுட்டி பையன் ஆனாப்பிறகு எதையாச்சும் கிரியேடிவ்வா செஞ்சு வாழ்த்து சொல்லணும்ன்னு மனசு கிடந்து துடியாய் துடிக்கும்! //

ஏம் பாஸ் இப்படி பச்சைப் பொய் சொல்றீங்க சுட்டி பையன் அது இதுன்னு, போங்க பாஸ் அழுகாச்சியா வருது :)

said...

உங்களோட க்ரீடத்துல இன்னொரு மயிலிறகு பாஸ் இந்தப் பதிவு

(நெசம்மாலும்மே சொல்ற கமெண்ட்டு பாஸ் இது)

said...

நல்ல பதிவு அண்ணா :))

said...

சூப்பர் சைட்டு. புல் மீல்ஸ் சாப்பிட்டமாதிரி இருக்கு !!!!!!

said...

வாழ்த்துக்கு - வாழ்த்தா

வாழ்த்துகள் ஆயில்ஸ்

said...

நல்ல பதிவு

said...

வாழ்த்து அட்டை பற்றி ஆரம்பிச்சு சோறு போட்டு குழம்பு ஊத்துர இடம் வரை விலாசம் சொல்லி - பதிவுல கஞ்சி ஊத்தி கலக்கிட்டீங்க கடகக்காரே... கஞ்சி/பதிவு குடிச்சேன்/படித்தேன்...அருமை

said...

நல்ல பதிவு ஆயில்யன். வாழ்த்து அனுப்புவதும் பெறுவதும் அலாதியான இன்பம்தான். அதிலும் அனுப்புனர் பகுதியில் நம் பெயரை பார்க்கும் போது பள்ளி நாட்களில் ஆனந்தமாக இருக்கும். திரும்ப கிடைக்காத தருணங்கள்.