தருமபுரம் ப.சுவாமிநாதன்


தமிழிசைத் தேவாரப்பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்று போற்றப்படும் கலைமாமணி தருமபுரம் . சுவா மி நாதன் ( 86) வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காலமானார் சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள குன்றத்தூர் தச்சர் தெருவில் வசித்து வந்த அவருக்கு 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வாழ்க்கை கு றி ப் பு : நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் கிராமத் தி ல் 29- 5- 1923- ம் ஆண்டு, மு. பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த ராஜகோபால் என்ற .சுவாமிநாதன், தனது 12- வது வயதி ல் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்தார்.

அங்கு 24- வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப்பணி புரிந்துகொண்டே, தேவார பாடசாலையில் சேர்ந்து தேவாரம் பாடும் பயிற்சியை மேற்கொண்டார்.

ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, தேவார இசைமணி பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை இசைக்கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று, முதல் மாணவராகத் தேறிய அவர், சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார்.

1968- ல் தருமபுர ஆதீன தேவாரப்பாடசாலை ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய அவர், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப்பாடும் திருமுறைப்பணிகளில் ஈடுபட்டார். 100க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் இவர் பாடிய 11 திருமுறைகளும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கட்டி இருக்கும் கோவில்களி லும், தமிழர்களின் இல்லங்களிலும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நன்றி - தினமணி

சைவ தமிழ் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க காரணமாய் அமைந்த, தேவாரபாடல்களில் மீண்டும் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்திழுத்த தருமபுரம் .சுவாமிநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

தருமபுரம் ப.சுவாமிநாதன் பாடிய பாடல்களை கேட்க..

7 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

இவர் பாடிய தேவாரம் நிறைய கேட்டிருக்கேன். அஞ்சலிகள்

said...

இந்த பதிவை படிக்கும் போது அவர் பாடிய "மந்திரம் ஆவது நீறு" என்ற பாடல் நினைவில் கணீரென ஒலிக்கிறது. சைவ சித்தாந்த மார்க்கத்திற்கு இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு

said...

pathivuku nandri

said...

பதிவிற்கும் தகவலுக்கும் நன்றி

said...

தருமபுரம் ப.சுவாமிநாதன் அவர்கள் தன்
தேன் குரலால் இங்கு உள்ள மக்கள்
மெய் மறந்து சிவபெருமானை நினைத்து உருக பாடினார்.

இப்போது சிவனிடம் போய் கைலாயத்தில்
உள்ளவர்கள் மனம் உருக
பாடபோயிருக்கிறார்.

அவர் குடும்பத்தார்களுக்கு ஆறுதலை
அந்த இறைவன் அருளட்டும்.

said...

செய்தி கேட்டதும் உண்மையில் ஒருகணம் கலங்கினேன். என் ஆழ்ந்த அஞ்சலிகள்

said...

அஞ்சலிகள்

பகிர்வுக்கு நன்றி