சைக்கிள் ரிப்பேரிங்


சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன காரணத்திற்காக வாழ்க்கை பாதையினை தடம் மாத்திக்கிட்டேன்னு கூட சொல்லாம்! அத்தனை ஆர்வம் சைக்கிள் ஓட்டுறதுலயும் அது ரிப்பேர் சரி பண்ணித்தாரேன்ங்கற பேர்ல அக்குவேறு ஆணிவேறா கழட்டிப்போட்டு திரும்ப ஒண்ணு சேக்குறது!

வீல் கழட்ட ரெண்டு ஸ்பானரு டயர்லேர்ந்து ட்யூப்பை கழட்ட ரெண்டு லிவர், ஒரு பஞ்சர் ஒட்டுற ரெட் பேஸ்ட்டு அப்புறம் கொஞ்சமா தேவைப்படறது ஆனா மீட்டர்கணக்குல வாங்கி வைச்சிருக்கிற வால்ட்யூப், காத்தடிக்கிற பம்பு இதெல்லாம் இருந்தால் போதும் சைக்கிள் கடை வைச்சி பொழச்சிகிடலாம்ன்னு மனசுக்குள்ள ரொம்பகாலமா ஒரு நினைப்பு! ஒட்டத்தெரியாம பஞ்சர் ஒட்டி திரும்ப திரும்ப கடைப்பக்கம் வரவழைச்ச செல்வமும் கூட தொழில் சொல்லிக்காமிச்ச குருன்னும் சொல்லலாம்!

சனி ஞாயிறு ஆச்சுன்னா சைக்கிளுக்கும் ஹாலிடே மூட் வந்து பஞ்சராகியோ அல்லது செயின் கட் ஆகியோ போகும்போதும் சரி,சைக்கிளை தள்ளிக்கிட்டு சைக்கிள் ஷாப் போனா அங்கே செல்வம் சார் சைக்கிளே இல்லாத கடையில எதோ ஒரு இத்துபோன ட்யூப்க்கு பஞ்சர் பார்த்துகிட்டு வெயிட்டீஸ் விடறதும் திரும்ப வீட்டுக்கு வந்துட்டு போறமாதிரியான தற்கால சூழல்கள் அப்போ இல்லாத நேரக்கொடுமையும் காத்திருக்கவைச்சு கைத்தொழிலாக சைக்கிள் ரிப்பேரிங்க் கத்துகிடலாம்ன்னு நம்பிக்கையை கொண்டு வந்துச்சு!

அரைகுறையா கத்துகிட்ட நுட்பத்தை வைச்சு வூட்ல இருந்த நாலு சைக்கிள் மேல நம்பிகையும் வைச்சு வீட்லயே தொழில ஆரம்பிச்சு பஞ்சர் பாக்குறது உடைஞ்ச பெடலுக்கு கார்ட்டர் போல்ட் போட்டு அட்ஜஸ்ட் செஞ்சுடறது, செயின் வெட்டிப்போடுதல் அப்டி இப்டின்னு ஓவராயிலிங் வரைக்கும் டெவலப்பானதும், நாமளும் கூடிய சீக்கிரமே கடையை ஓபன் செஞ்சுடலாம்டான்னு நினைச்சுகிட்டிருந்தப்பவே,நம்ம சைக்கிள் கடை செல்வம் கடையை ஊத்தி மூடிட்டு கட்சியில போயி சேர்ந்து வீதி பிரதிநிதியானாதும் நமக்கு யாரோ பெரிய டார்ச் லைட் அடிச்சு ரூட் காமிக்கிறாங்கன்னு நினைப்பு ! எல்லாம் ஒகே ஆனா ஒரே ஒரு சிக்கல் அதுவும் குட்டியூண்டு! கழட்டின வீல்’ஐ திரும்ப மாட்டுறச்ச டென்ஷன் போல்ட் கரீக்டா பொருத்துறது- உலகமகா கஷ்டமான வேலைன்னு நினைக்க ஆரம்பிச்சு தொழில் மேல கொஞ்சமா நம்பிக்கை இழப்பினை ஏற்படுத்திடுச்சு. நாள பின்ன கஷ்டமர் உக்காந்திருக்கறச்ச இப்டியாச்சுன்னா காறியில்ல துப்புவான்னு கனவு வேற! சைக்கிள் கடை வைச்சவனெல்லாம் சாதிச்சதா ஹிஸ்டரியில்ல மூடிட்டு போகவேண்டியதுதான்னு ரைமிங்கா அட்வைசெல்லாம் பலமா இருந்துச்சு ! பிறகென்ன செய்றது அட்வைசு கேட்டு நடந்துதானே ஆகணும் !

நடந்தேன் !

நேத்து ஆபிஸ்ல ஒரு சின்ன கிட் காமிச்சு ஆபிஸ் பாய் சொல்றாரு சைக்கிள் ரிப்பேர் கிட்’டாம் பஞ்சர் பாக்குறதுக்கான அம்புட்டு சங்கதியும் இருக்காமாம் ஆனா சைக்கிளை கடைக்கு எடுத்துகிட்டு போயி செய்றதுதான் கஷ்டமாம்! புலம்பிக்கிட்டிருந்தாரு நான் என்னோட கதையெல்லாம் அவர்கிட்டயா சொல்லமுடியும் ! அதான் இங்கே புலம்பிட்டேன் #சாரி

டிஸ்கி:- எ.பிக்கள் பற்றிய தகவல்கள் வரவேற்கப்படுகின்றன

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வரும் காலத்தில் இது தான் எல்லோருக்கும் வாகனம்...

said...

:)) இவ்ளோ இருக்கா ப்ளாஷ்பேக்..

said...

சைக்கிள் ரிப்பேர் கடை வச்சே கோட்டீஸ்வரனாகியிருக்கக் கூடிய ஒருவரை தமிழகம் இழந்துவிட்டதே!!

இருந்தாலும், திண்டுக்கல் தனபாலனின் கமெண்டைப் பார்க்கும்போது, உங்களுக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுக்கிறதுக்காக “அம்மா”வே பாடுபடு(த்து)கிறாரோன்னு தோணுது.

said...

பாஸ்.. இதே மாதிரி கனவோட ஸ்க்ரூ டிரைவர், பேஸ்ட் எல்லாம் வாங்கி பஞ்சர் ஒட்ரோம்னு வீட்டு சைக்கிள் டுயூபை கிழிச்சது எல்லாம் ஞாபகத்துக்கு வருது பாஸ்.. ஆனா நீங்க கொஞ்சம் ஓவரா யோசிச்சு இருக்கீங்க போல இருக்கு. ;-)

said...

ஆகா ;))