பா & யப்பா!

13 வருடம்தான் வாழ்க்கை கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தா இன்னுமொரு பத்து வருஷம் நிறைய அதிர்ஷடமிருந்தா 20 வருஷம் வாழ்ந்துட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்! இதுதான் progeria வோட பேசிக் பிரப்ளம்!

பொருத்தமா உக்கார வேண்டிய ஜீன்களில் கொஞ்சம் கோச்சுக்கிட்டு இங்கயும் அங்கயும் மாறிப்போய் உக்கார்ந்துடுச்சுன்னா அந்த குழந்தையோட வாழ்க்கையே மாறிப்போயிடும்!

ரொம்ப ரொம்ப rare கேஸ்தான் இந்த நோய் - அதிர்ஷ்டம்ன்னு கூட வைச்சுக்கிடலாம்! இந்த விசயத்தை ஒரு சப்ஜெக்டா வைச்சு ஒரு படம் அதுவும் இந்தி சூப்பர் ஸ்டார் வைச்சு எடுக்கறதுங்கறது சிம்பிள் மேட்டர் கிடையாது!

யு.எஸ்ல இருக்கிற ப்ரோகேரியா ரிசர்ச் பவுண்டேஷன் இந்த படத்தை பார்த்துட்டு இந்த படத்தை விளம்பரபடமா இந்த நோய் பற்றிய விழிப்புணர்ச்சி பிரச்சாரத்துக்கு பயன்படுத்த முடிவு செஞ்சுருக்காங்களாம்!

சாதிச்சிருக்காரு R. பாலகிருஷ்ணன் aka பால்கி !

எம்.பியிடம் அவார்டு வாங்கிட்டு வந்து படுத்துக்கிடந்து கையில அவார்டோட எழுந்து அம்மாவிடம் விவரிக்கும் இடங்கள்

ராஷ்டிரபதி பவனுக்கு போவதற்கு அப்பாவிடம் தேதி பேரம் பேசுவது

ராஷ்டிரபதி பவனுக்கு போயிட்டு திரும்பி வரச்சொல்லிட்டு அதற்கு சொல்லும் காரணம்!

ரொம்ப்ப்ப்ப்ப் க்யூட்டான அந்த சின்ன பொண்ணுக்கிட்டயிருந்து எஸ்ஸாகும் விநாடிகள் கடைசியில் காரணம் நமக்கு புரிபடும் தருணங்கள்

அபிஷேக் வித்யா பாலன் காதல் செய்யும் தருணங்கள்!

பாட்டியுடனான கொஞ்சல்கள்

என ரசிக்கும் கவிதை நிமிடங்கள் நிறையவே இருக்கின்றது பா - விடத்தில்!

இளையராஜாவின் பின்னணி இசையில் சில இடங்களில் சிலிர்ப்பு உணரப்படுகிறது !முழுப்படத்தின் உயிரோட்டமான நடிப்பு வித்யா பாலனும் அமிதாப்பும் - அமிதாப் இந்தி பட உலகின் சூப்பர்ஸ்டார் ஒரு சிறு பையனாக வித்தியாசமான மேக்கப்புடன் வலம் வருகையில் அவருடன் இணைந்து அதுவும் அம்மா கேரக்டரில் நடிக்கவேண்டுமெனில் நிறையவே சிரமங்கள் இருக்கலாம் ஆனால் எந்தவிதமான சமரசங்களுமற்ற ஒரு அம்மாவாக கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார்!


”யப்பா”

இந்த பா பார்ப்பதற்கு முன்பே ஒரு சின்ன வரி வடிவம் - யாரு “பா”வை தமிழ்ல ரீமேக் செய்யப்போறான்னு” டிவிட்டர்ல ஒரு கொஸ்டீன் மாதிரி வந்துச்சு! சரி நாம படம் தயாரிக்காட்டியும் (அடேங்கப்பா ஆசையை பாரு) அட்லீஸ்ட் செலக்‌ஷன்லயாச்சும் உக்காருவோமேன்னு செஞ்ச படங்கள்தான்!


யப்பா - மேலும் ஒரு எடிட் செய்யப்பட்ட படம் மிக குறுகிய காலகட்டத்தில் - நேரத்தில் என்றே கூறவேண்டும்! - இணையத்தில் வெகு வேகமாக பரவியிருந்தது - இத்தனைக்கும் தனிப்பட்ட மெயிலாக அனுப்பப்பட்ட படம்! - இணையத்தில் பரவிய வேகம் என்னை ஆச்சர்யப்படுத்தியது! இது தொடர்பில், ”யப்பா” படங்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டுகிறேன்!

25 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டுகிறேன்!//

மன்னிச்சாச்சு.. போய் அடுத்த கான்சப்ட் ரெடி செய் :)

Anonymous said...

பா பாக்கவேண்டிய படம்.

யப்பால சிம்புவுக்கு பதில் ஏன் அபிசேக்?

Anonymous said...

ஆயிலு நல்லாப்பாத்துட்டேன். அது சிம்புதான்.

said...

நல்லாயிருக்கு விமர்சனம். யப்பாவும் சூப்பரப்பா:)!

said...

சூப்பரு:)

said...

பா-த்துடுவோம் :) அதுவும் வித்யா பா-லனுக்க்காக :))

said...

வித்யா பாலன் அழகோ அழகு. :)

யெப்பா.. யெப்பப்பா.. :)

said...

பா வை விட யப்பா சூப்பர்ப் பா ஆயில்யா.
இந்த வியாதி 60,00,000 பேரில் ஒருவருக்குத்தான் வருமாம்.உலகிலேயே மொத்தம் பத்து பேர் இருக்காங்களாம்.இந்தியாவில் [மாநிலம் மறந்துடுச்சு.குஜராத்?]ஒரே குடும்பத்தில் இரண்டு பையன்கள் மூத்தவன் 18 வயசாம்.இளையவன்11 வயசாம்.மூத்தவன் மரணம் நெருங்கி விட்டதாம்.அதற்குள் அமிதாப்பைப் பார்த்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.

said...

13 வருடம்தான் வாழ்க்கை கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தா இன்னுமொரு பத்து வருஷம் நிறைய அதிர்ஷடமிருந்தா 20 வருஷம் வாழ்ந்துட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்! இதுதான் progeria வோட பேசிக் பிரப்ளம்!

பொருத்தமா உக்கார வேண்டிய ஜீன்களில் கொஞ்சம் கோச்சுக்கிட்டு இங்கயும் அங்கயும் மாறிப்போய் உக்கார்ந்துடுச்சுன்னா அந்த குழந்தையோட வாழ்க்கையே மாறிப்போயிடும்!

ஓஹ் இதுதான் படத்தோட கதையா, நான் என்னவோ படத்துக்காகத்தான் இந்த மாதிரி செஞ்சிருக்காங்கன்னு விமர்சனங்கள வெச்சு யூகிச்சிக்கிட்டேன்.
புரியும்படியா பகிர்ந்தமைக்கு நன்றி.

yeppaa - ஏற்கனவே நிறைய சிரிச்சாச்சு :)))))

said...

/இது தொடர்பில், ”யப்பா” படங்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டுகிறேன்! /

இதுதான் ஆயில்ஸ்!! :-)

said...

பா-வின் அறிமுகமும், தங்கள் யப்பாவும் நல்லாருக்கு ஆயில்ஸ்!! :-)))

said...

நீங்க ஒருத்தர்தான் இந்த நோயைப் பத்தி கொஞ்சமாவது சொன்னீங்க.

அந்த ஸ்பெஷல் லென்ஸைப் பத்தி யாரு சொல்வாங்கன்னு பாத்துகிட்டிருக்கேன்.

said...

யப்பா அருமை.....ட்விட்டரிலே கும்மிவிட்டதால் இங்கே அடக்கி வாசிக்க்கிறேன்..:-)

said...

பாஸ் இங்க வந்து யாராவது இது ஏற்கனவே மெயில்ல வந்திடுச்சுன்னு பின்னூட்டம் போட போறாங்க பாருங்க :)

பா-எளிமையான விமர்சனம்

யப்பா-ஹி ஹி :) அமித்து அம்மா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டே

said...

”யப்பா” லேட்டா வந்தாலும் ”பா:லேட்டஸ்டா மருத்துவ விவரங்களோடு போட்டுட்டீங்க..

\\☀நான் ஆதவன்☀ said...
பாஸ் இங்க வந்து யாராவது இது ஏற்கனவே மெயில்ல வந்திடுச்சுன்னு பின்னூட்டம் போட போறாங்க பாருங்க :)//

அதானே :) எவ்வள்ளோஓஓஓ லேட்

said...

progeria பத்தி சொல்லிட்டீங்க அருமை. பா பற்றியும் நல்லா சொல்லி இருக்கீங்க.. யப்பா கலக்கிட்டீங்க...

said...

boss சூப்பர் பாஸ்

said...

யப்பா -- ‍ஒரு நல்ல படத்தையாச்சு விட்டு வைக்கக்கூடாதா... ;)

said...

அந்த நோயைப் பற்றி விளக்கியதற்கு நன்றி ஆயில்யன்.
படத்தையா நெட் ல பார்த்தீங்க?? இல்ல ''யப்பா''வையா.;)

ரெண்டுமே சூப்ப்ப்ப்பர்.!வித்யா பாலன் அபிஷேக்குக்கு நல்ல ஜோடிதான்.

said...

"பா"ஸ் "பா"ர்த்தாச்சா "பா"

டி.ஆர் யப்பா ஏன்"பா"?

said...

பா-வின் அறிமுகமும், தங்கள் யப்பாவும் நல்லாருக்கு ஆயில்ஸ் ..
அந்த ஸ்பெஷல் லென்ஸைப் பத்தியும் யாரது கொஞ்சம் சொல்லுங்களேன்... ஏற்கனவே அது ஸ்பெஷல் லென்ஸ்னு பி சி ஸ்ரீராம் சொல்லிருக்காரே ஆ வி ல..!!

said...

அருமையாக உள்ளது.

said...

நீங்க பண்ணின வேலைதானா அது? மெயிலில் பார்த்தேன்.. அவ்வ்வ்..

said...

//யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டுகிறேன்!//

Neenga sombu photo potapove enaku thriller mari agi pochu :P

Parava ila..nalla photo editing! ;) Good job!

Anal aarudhalukku - Divya Balan photo potamaikku ParaatukkaL ;)

said...

உங்க படம் பயங்கர பேமஸ் ஆயிடுச்சி...

யப்பா ஹீரோ டி.ஆரு...
உங்களை தேடிட்டு இருக்காரு...