************************************************************************
நிறைய பேருக்கு ரொம்ப நாளாவே ஆசை இவனெல்லாம் எப்படி எழுத வந்தான்னு தெரிஞ்சுக்கிடணும்னு சரி நாமளே சொல்லாட்டி ஹிஸ்டரி ஜியோகிராபியெல்லாம் வரவழைக்கிற இன்னும் பல தொடர்களை போட்டு தாக்கிடப்போறாங்களோன்னு முந்திக்கிட்டாச்சு!
2003ல சகோதரர் மூலம் அறிமுகமான தமிழ் இணைய உலகம் நெட் செண்டர்களில் மாதத்துக்கு ஒரு முறை செல்லும்போது பார்க்கும் விசயமாகத்தான் இருந்துச்சு பிறகு சும்மா வெளையாட்டுக்கு ஒரு ப்ளாக் ரிஜிஸ்டர் பண்ணி வைச்சதோட சரி! அதுக்கு பிறகு வெளிநாட்டு பயணம் அப்புறம் வெட்டியா இருந்த காலகட்டத்திலதான் மீண்டும் அந்த உலகத்துக்குள்ள தொபுக்கடீர்ன்னு குதிச்சேனாக்கும்!
டிராக் பேக் செஞ்சு எப்படி நுழைஞ்சோம்ன்னு சொல்றதுக்கு பதில் நுழைஞ்ச பிறகு மனசில இருந்த விசயங்களை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு போறேனுங்க!
எப்படியோ ஒரு வழியா பேரெல்லாம் செலக்ட்டி ப்ளாக்கு ஒபன் செஞ்சு அதுக்கு தோரணமெல்லாம் கட்டி தொங்கவிட்டப்பிறகுதான் ஆஹா எதுனாச்சும் விசயம் இருக்கணுமே எழுதறதுக்குன்னு ஒரே யோசனை!
டெய்லி பேப்பர் படிக்கிறதை வைச்சு எதாச்சும் எழுதலாம்ன்னு ஒரு ஐடியா வர்ற அது கொஞ்ச நாள் ஓடிக்கிட்டிருந்துச்சு பிறகு என்ன எழுதலாம் எழுதலாம்ன்னு நினைப்பே ரொம்ப டெரர் காமிச்சுக்கிட்டிருந்துச்சு சரி கொஞ்ச நாள் படிப்போம்ன்னு கம்முன்னு படிக்க ஆரம்பிச்சா,அட இதெல்லாம் இவுங்க எழுதும்போது நாம எழுதறதுல தப்பே இல்லன்னு நினைப்பு வந்து குந்திக்கிச்சு - அதுக்குத்தான் எழுதறதுக்கு மேட்டர் இல்லைன்னா மத்தவங்களை படிக்க ஆரம்பிங்க உங்களுக்குள்ளயே ஒரு நம்பிக்கை ஸ்ட்ராங்காயிடும்ன்னு எல்லாரும் அட்வைஸ் சொல்றாங்க - பள்ளிகூடத்து நினைப்பு ஊர் நினைப்பு அப்படின்னு ஏகப்பட்ட கொசுவர்த்தி சுத்துறது ரொம்ப ஜாலியா இருக்கும்!
சாதாரணமாவே யாரையாச்சும் ஒரு அரசியல் கட்சி தலைவர் சொல்றதை ஒரு மாசம் ஃபாலோ பண்ணுனீங்கன்னா ஏகப்பட்ட காமெடி பதிவுகளை எழுதிடலாம் அந்தளவுக்கு நல்ல கான்பிடெண்ட் கொடுப்பாங்க நம்ம ஆளுங்க! ஒவ்வொரு நாளும் சொல்ற ஒவ்வொரு வாசகமும் இன்னொரு நாள் அலேக்கா பல்டி அடிச்சு ஆடுவாங்க! அதை பாக்குற நமக்கு பீறிட்டு வர்ற கோபத்தை அப்படியே கொண்டாந்து ப்ளாக்ல கொட்டலாம்.அப்படித்தான் நானும் செய்ய நினைச்சேன் ஆனா செய்யல!
கலவர பூமியில வேடிக்கை மட்டும் பார்ப்போம்ன்னு ஒன்லி வாட்சிங்க்! - மாசத்துக்கு ஒரு நாளாச்சும் போஸ்ட் கண்டிப்பா வெறித்தனமா வரும் அதை படிச்சு நம்ம ஆசையை தணிச்சுக்கிடலாம்! [அவுட் ஆப் சிலபஸ் போயிட்டேன் சாரி]
ப்ளாக் ஆரம்பிச்சப்ப நிறைய பேர் ப்ளாக் அப்படிங்கறது டைரி மாதிரி,ப்ளாக்கர் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல, எதுவேணும்னாலும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு எழுதலாம்ன்னு சொன்னதை மறக்காம நல்லா மனசுல பதிச்சு வைச்சிக்கிட்டேன்! எதாச்சும் எழுதி என்னாடா இப்படி கேவலமா இருக்கேன்னு சொன்னா அட இது என்னோட டைரின்னு சொல்லி எஸ்ஸாகிடலாம்ன்னு ஒரு திட்டத்தோடதான்...!
ஆரம்ப கட்டத்தில பொழுது போகாத சூழலில் வேறு வழியே இல்லாத நிலையில் ப்ளாக் படிக்க துவங்கியதும் விடுமுறை நாட்களில் முழு இரவும் பதிவுகளை படித்து ஊர் ஞாபகங்களை மனசுக்குள் ரெப்ரஷ் செய்துகொண்டதும் தான் வழக்கமாய் அமைந்திருந்தது!
நாமும் எதேனும் கிறுக்க தொடங்கலாம் என்று ஆரம்பித்து எந்தவொரு எல்லைகோடும் வரைந்துகொள்ளாமல் நினைப்பதை எல்லாம் எழுதிட - தொடர்ந்துகொண்டிருக்கிறேன்! துறை சார்ந்த பதிவுகளினை எழுத வேண்டும் என்ற நெடு நாள் ஆசை இன்னமும் மனசுக்குள்ள போட்டு பூட்டி வைச்சிருக்கேன் என்னிக்க்கு வாய்ப்புக்கிடைக்கிறதோ தெரியாது அப்பொழுது இருக்கு அட்டாக்கு!
துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!