தீபம் ஏற்றுவோம்!
தியாகம் போற்றுவோம்!
இனி வரும் காலங்களிலாவது,
தீவிரவாதம் நம் மண்ணில் திளைத்துப்போகாமல்
மரித்துப்போக வைக்கும் பணிகளில்
மனிதர்களாய், மனம் ஒன்றுப்பட்டு
கரம் கோர்ப்போம்!
களம் வெல்வோம்!
களத்தில் எதிரிகளால் வீழ்ந்த வீரர்களை போற்றுவோம்
களத்தில் எதிரிகளை வீழ்த்தும் வீரர்களை வாழ்த்துவோம்!
தீபம் ஏற்றுவோம்! தியாகம் போற்றுவோம்!
# ஆயில்யன் 11 பேர் கமெண்டிட்டாங்க
Labels: அஞ்சலி
இவர்களுக்கு இன்று பிறந்த நாள்...!
இரு மலர்கள்
இனிதாய் கொண்டாடுகின்றனர்
இனிய பிறந்த நாளினை...!
வருடந்தோறும் வரும் நாள்
வாழ்த்துக்கள் தெளிக்கின்ற இத்திருநாள்!
தொட்டு விடும் தூரத்தில் உறவுகள்!
நின்றங்கு வாழ்த்தியிருக்க,
தொலைத்தூரத்து உறவுகளாய்
நின்றிங்கு நாங்கள் வாழ்த்துகிறோம்!
வரும் நாட்களில் வசந்தங்கள் காத்திருக்க...!
இன்பங்கள் எத்திக்கும் பூத்திருக்க...!
கொண்டாடி மகிழ்கிறோம்!
அன்பு நெஞ்சங்கள் அள்ளித்தரும்
வாழ்த்துக்கள் பெற வாருங்கள்!
இணையத்தின்
என் இனிய பாச மலர்கள்...!
நாணல் தங்கச்சி!
அமிர்தவர்ஷினி அம்மாவோட பொண்ணு!
(பேரு எவ்ளோ ஈசியா சொல்றேன் பாருங்களேன்!)
உங்கள் வருகையினூடே உடனிருக்கட்டும்
ரெண்டு பீஸ் கேக்குகளும் கூட.....!
எனக்கு மட்டும்....!
# ஆயில்யன் 25 பேர் கமெண்டிட்டாங்க
Labels: வாழ்த்து
துறவு!
வார்த்தை கேட்டதும் அதிர்ந்தவர்கள் வாழ்ந்த காலங்கள் கடந்துப்போய்விட்டது! - களையிழந்தும்கூட போய்விட்டது!
இப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது - சரியாக புரிந்துக்கொள்ளப்படாமல் இருப்பதால்!
ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவோ முடிவடையக்கூடும்!
உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்!
சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!
# ஆயில்யன் 33 பேர் கமெண்டிட்டாங்க
Labels: துறவு
சட்டக்கல்லூரி - போலீஸ் - நோ எண்ட்ரீ!
நடைப்பெற்று முடிந்த சட்டக்கல்லூரி வன்முறை சம்பவங்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் இப்பொழுது காவல்துறையின் பக்கம் திரும்பி நிற்கிறது!
ஒரு வார காலத்திற்கும் மேலாக சட்டக்கல்லூரியில் சிலச்சில பிரச்சனைகள் முட்டிக்கொண்டிருந்த நிலையில்,உளவுப்பிரிவால் தகவலும் அளிக்கபட்டிருந்த நிலையில் காவல்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும் கூட கட்டாயம் இச்சம்பவம் வேறு மாதிரியான பிரச்சனைகளாகவே அரங்கேறியிருக்ககூடும்!
வாசல்வரை வந்து நின்ற காவல்துறைக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை என்ற செய்தியும் போலீஸ் அதிகாரிகளின் கண்முன்னேயே மாணவர்கள் மாணவனை தாக்கியதும் எல்லோரிடமும் ஒட்டுமமொத்த வெறுப்பினை காவல் துறை வாங்கிக்கட்டிக்கொண்டது!
(சாமி பட ஸ்டைலில் யாராவது ஒரு சில இளைய தலைமுறை போலீஸ் களமாடியிருந்தால் பொதுமக்களால் பாராட்டுப்பெற்றிருக்கக்கூடும்! )
முன்பு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காவல்துறைக்கு விடுக்கப்பட்ட செய்தி குறிப்பாக காவல்துறை கல்லூரிகளுக்கு குறிப்பாக சட்டக்கல்லூரிகளுக்கு நுழைவதற்கு அக்கல்லூரியின் முதல்வரின் அனுமதியினைப்பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு நடைமுறை பழக்கம் கொண்டு வரப்பட்டிருக்கிறது!
(இது மற்ற மருத்துவ பொறியியல் கல்லூரிகளுக்கு கிடையாது! - போலீஸால், சட்டம் படித்தவர்களினை அத்தனை எளிதில் கைது செய்து விட முடியாது அதே நேரத்தில் மற்ற எத்துணை பெரிய படிப்பு படித்த மனிதராக இருந்தாலும் தூக்கிடலாம் அப்படிங்கறதும் ஒரு விந்தையான நடைமுறை விதி!)
ஜாதி ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து வன்முறை சம்பவம் அரங்கேற்றப்பட்டது, அதற்கு என்ன காரணம் மாணவர்களின் படிப்பு சார்ந்த விசயங்கள் தவிர்த்து மற்ற ஏனைய விசயங்களில் கல்லூரிக்குள் என்ன நடக்கிறது? எப்படி வெடித்தது இப்பிரச்சனை? என்ற எந்த விசயமும் இப்போதைக்கு எழுப்பப்படாமல் சில காவல்துறை அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டும், சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார்கள்! - ஒட்டுமொத்த பிரச்சனையுமே காவல்துறை மூக்கை நுழைக்காமல் வெளியே நின்று வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்!
கேட்டுக்கு வெளியே நின்று அடித்தால் போலீஸ் வந்து பிடித்து துவைக்கும் என்ற சட்டம் தெரிந்தே அழகாய் உட்புறம் நின்று வன்முறையாடிய மாணவர்களுக்கு இப்படியான வன்முறையில் ஈடுபட்டால் என்ன விதமான தண்டனைகள் சட்டத்தில் இருக்கு என்று சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டார்களா ஆசிரியர்கள்?
இந்த சம்பவத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு என்ன விதமான தண்டனை அளித்தால் இது போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையிலும் இருக்கும்? இந்த மாணவர்கள் தண்டனை பெற்ற மீண்ட பிறகு நல்லவிதமாக சமூகத்தில் கடமை ஆற்ற மனதளவில் தயாராக இருப்பார்களா? அல்லது வன்முறையின் ஆணி வேர்களாக மாறுவார்களா? - சிந்திக்கப்படவேண்டிய விசயம் - யார் சிந்திப்பது....?
# ஆயில்யன் 15 பேர் கமெண்டிட்டாங்க
Labels: 1ம்இல்லை, தமிழ் நாடு
நாங்களும் ரவுடிதான் பாஸ்....! - டெரராய் ஒரு பதிவு
எதிர்கால இந்தியாவின் சட்ட மேதைகளாக வரப்போகிறவர்களாக
இன்று இருப்பவர்கள் இவர்கள்......!???
சட்டத்தை சாட்டையாக்கி சுழற்றவேண்டிய நீங்கள்
மரச்சட்டத்தை கட்டையாக்கி கையிலெடுத்துக்கொண்டு சுற்றுவதா?
அடிச்சுக்காதீங்க பாஸ் அடிச்சுக்காதீங்க!
# ஆயில்யன் 29 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ரவுடி
திருக்குறள் பற்றி - நானும்....!
திருக்குறள் - மனித வாழ்வின் குறுகிய காலகட்டத்தில் கண்டுணர முடியாத உண்மைகள் பலவற்றை கூறிச்சென்ற பொதுமறை!
குறளினை அடிப்படை கல்வியில் மட்டும் பயின்று அதன்பின்னர் காலப்போக்கில் மறந்து செல்லும் பலருக்கு மத்தியில் இன்னும் கூட பலரால் இந்த பொதுமறையான நூல் போற்றப்படுகிறது! -ஒவ்வொருவரும் திருக்குறளினை தம் வாழ்க்கை ஓட்டத்தில், ஒரு முறையாகிலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள கட்டாயம் வேண்டும்!
அறம் - இத்தலைப்பில் நிறைய கருத்துக்களினை கொண்ட குறள்கள் நிரம்பியிருக்கின்றன அவை சொல்லும் கருத்துக்கள் அத்தனையும் நல்லதொரு வாழ்க்கை தத்துவங்களாய் வாழ்க்கையில் கடைப்பிடிக்க தகுந்தவைகளாகவே இருக்கின்றன!
அறம் செய்தல் - தம் தேவை வரம்பினை மீறி அதிகம் உள்ள பொருட்களினை தானம் செய்தல் அல்லது நம்மால் இயனற அளவு உதவிகளை இல்லாதோர்க்கு செய்தல் என்ற அடிப்படை கருத்தில், நம்மால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலவேண்டும்! செய்வது என்று முடிவெடுக்க யோசியுங்கள்,முடிவுகளை எடுத்தப்பின்னால் செயலை செய்துவிட்டு நீங்கள் உங்கள் வழியில் அடுத்த இலக்கினை நோக்கி செல்லுங்கள் இதுவே மிகச்சிறந்த பார்முலாவாக ஏற்றுக்கொள்ளுங்கள்! நல்லது செய்தாலும் சரி செய்யாமல் இருந்தாலும் சரி அதற்கான காரணங்களை நியாயப்படுத்த நிறைய விசயங்கள் மனதில் சஞ்சரிக்கும். அவ்வாறு தூண்டுவதற்கும் சமூகத்தில் பலருண்டு! முடிவெடுத்த பின்னால் யோசிக்காதீர்கள்!
அறம் செய்யுளம் அளவுக்கு பொருள் இல்லை, பொருள் இருந்தாலும் என் எதிர்காலத்தினை எம் குடும்பத்தின் நினை கண்டால் மனம் பயமுறுகிறது என்று இருப்பவர்களுக்குத்தான் இன்னொரு வழியினையும் திருவள்ளுவரின் குறள்களால் வெளிப்படுத்தப்படுகிறது!
இன்சொல் பேசுதல்!
காலை எழுவது முதல் இரவு வீழ்வது வரை நாம் நம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் எத்தனை எத்தனையோ பேர்! உறவுகள் நட்புகள் முதல் முதலாய் சந்திக்க வைக்கும் சம்பவங்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிமுகங்கள் வாழ்க்கை தினசரிகளில் நிறையவே கற்றுக்கொடுக்கிறது! - அல்லது கற்றுத்தருகிறது! - எல்லோரையுமே ஒரளவுக்கு நம்பித்தான் வாழ்கிறோம்!
தினமும் பார்க்கும் மனிதர்களிடத்தில் இனிமையாக நடந்துக்கொள்ளுங்கள்,அன்புடன் கனிவான பேச்சு எவரையுமே நம் பக்கம் எளிதில் ஈர்த்துவிடும்.
ஊரில் இருந்த காலத்தில் தினசரி பணியிடத்திற்கு செல்லும் பயணத்தில் சில மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன் எந்த வொரு கூச்சமும் இன்றி என்னிடத்தில் வந்து தம்மை அறிமுகம் செய்துக்கொண்டு என் விபரங்கள் சில தெரிந்துக்கொண்டவர்கள் தினமும் பார்த்து சிரித்து,வணக்கம் செய்து ஒரு நல்ல நட்பு பெற்ற மகிழ்ச்சியினை அன்று அடைந்தேன் - இன்றும் கூட ஊரில் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியான தருணங்களாகவே இருக்கிறது!
அதே சமயத்தில் என்னால் ஏன் இது போன்று வெளிப்படையாக புதிது புதிதாய் நண்பர்களை பெற்றுக்கொள்ளமுடிவதில்லை என்று பலமுறை நினைத்ததும் உண்டு! - ஆனால் அதுதான் தவறாகி இருக்கிறது! நினைத்தப்படியே இல்லாமல் செயல்படுத்திப்பாருங்களேன்!
வாழும் வாழ்க்கை ஒன்று செல்லும் தூரமும் தெரியாது செல்லும் வழியும் கூட சிறப்பாக இருக்குமா என்று புரியாது! ஆனாலும் கூட ஒரு நம்பிக்கையோடு தொடங்கிவிட்டோம் அந்த நம்பிக்கையோடே தொடர்வோம் - நட்பு வசத்தில் உறவுகளின் வாசத்தில்....!
**************************************************
என்னை பற்றிய குறள்கள்..! (அட எனக்கு புடிச்சதுப்பா)
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்க்கி அகத்தானாம்
இன்சொலின் அதே அறம்
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப்பெறின்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப்பிற
பின்குறிப்பு:- ஜீவ்ஸ் அண்ணாச்சி இனி என்கிட்ட கதை கதைன்னு 1ம் கேக்கமாட்டீங்கன்னு பெரும் நம்பிக்கையோட எஸ்ஸாகிக்கிறேன்!
# ஆயில்யன் 28 பேர் கமெண்டிட்டாங்க
Labels: குறள்
இது ஒரு பொன் காலைப்பொழுது!
ஹே ஹோ ஹூம்... ல ல லா...
பொன்மாலை பொழுது...
இது ஒரு பொன் காலைபொழுது
பிளாக்கர் பக்கம் ஒடுகின்றேன்
புதிதாய் பதிவு தினம் போடுகின்றேன்
இது ஒரு பொன் காலைபொழுது
ஆயிரம் ஹிட்ஸ்கள் கோலமிடும்
பதிவுக்கு கொஞ்சமாய் கமெண்ட்ஸும் வரும்?
பாதியில் பதிவுகள் ஸ்ட்ரக்கி விடும் :-(
மொக்கைக்கும் கும்மிகள் தாளமிடும் :-)
மூத்த பதிவர் கமெண்டிவிட,
இது ஒரு பொன் காலைபொழுது...!
தமிழ்மணம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது பதிவு தரும்!
ஒரு நாள் கூகுளில் என் பேரும் வரும்,
திருநாள் நிகழும் தேதி வரும்!
மொக்கைகளால் பதிவுகளை நான் செய்தேன்
இது ஒரு பொன் காலைப்பொழுது!
# ஆயில்யன் 71 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
கடமையை செய்! பலனை எதிர்பார்! - ரஜினி
இந்தச் சந்திப்பின் நோக்கம்..?
நீண்ட காலமாக நீங்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டீர்கள்; அதே போல நானும் உங்களைச் சந்திக்க ஆசைப்பட் டேன். இதுதான் நோக்கம். ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்; அதற்கு நான் பதில் அளிக்கிறேன்' என்றார்
அதுதான் இப்போது நடக்கிறது
முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள்; அதன்பிறகு அருணாசலேஸ்வரர்; பிறகு பாபாஜி என்கிறீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வை இல்லையா?
நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என பல படிப்புகள் உள்ளன. அவை நமது அறிவை விருத்தி செய்கின்றன. அதுபோலத்தான் தேடல் நிறைந்த உள் ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கி றது. தேடல் உள்ளவர்கள் பார்வையில் இது ஒன்றும் தவறு கிடையாது
உங்களைக் குழப்பவாதி என எழுதுவதையும் பேசுவதையும் கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம்கொடுக்கிறீர்கள்?
பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்டால் எப்படி?...
சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித் தான் இருக்கிறது. இது செய்தால் இது நடக்கும் என யூகித்துச் சொல்வதில்லை!
நான் நினைப்பது சரி எனும்போது பேசிவிடுகிறேன். அதை வேறு கோணத்தில் பார்ப்பவர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. சில செய்திகளைப் படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில செய்திகள் சிந்திக்க வைக்கும். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். என்னுடைய சுயநலத்துக்காக நான் யாரையும் குழப்பியதில்லை. மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வதுதான்
ஒகேனக்கல் விவகாரத்தில் வருத்தம்; மன்னிப்பு? எது உண்மை?
நான் முன்னால் போக வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் பின்னாலேயே போக வேண்டும் என்கிறீர்கள். விஷயம் முடிந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள். அதிலேயே இருந்தால் எப்படி..? ஒகேனக்கல் பிரச்னை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகத்தைப் பொருத் தவரை எந்தப் பிரச்னை என்றாலும் அங்கு முதலில் தாக்குலுக்கு உள்ளாவது தியேட்டர்கள் தான். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த மேடையில் அமர்ந்தேன். பலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்கள். நானும் மனிதன்தானே!... பேசிவிட்டேன். ஒரு பிரச்னை ஆரம்பித்தால் உடனே முடியவேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் வருத்தம் தெரிவித்தேன்!
நீண்ட காலமாக மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களைப் பற்றி..?
"ரஜினி ரசிகர்கள்' என்பவர்களைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது
நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள்
ரசிகர்களுக்கென ஓர் அங்கீகாரம் கிடைக்குமா?
ரஜினி ரசிகர் என்றால் சமுதாயத்தில் ஓர் அங்கீகாரம் கிடைக்கும்படி நிச்சயம் செய்வேன்
எதிர்காலத் திட்டம்; அரசியல் ஈடுபாடு குறித்த கேள்விகளுக்கு சிறிது மெüனம் காத்து ரஜினிகாந்த் பேசியதாவது:
மீண்டும் மீண்டும் நான் சொல்வது இதுதான்..முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்; அடுத்து நான்... அடுத்ததுதான் அரசியல். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தை களுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என் கடமையைச் செய்து வருகி றேன். அதுபோல நீங்களும் முதலில் உங்கள் கட மையைச் சரியாகச் செய்துவிடுங்கள் அரசியலைப் பொருத்தவரை திறமை, புத்திசா லித்தனம், உழைப்பு இருந்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அதற்கேற்ற சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் அமையவேண்டும். அதுதான் வெற்றிக்கு முக்கியம். 1996-ம் ஆண்டு இருந்த நிலை வேறு. அன்று பதவிக்குரிய சூழ்நிலை இருந்தது.
நமக்கு ஒரு விஷயத்தில் திறமையும் அனுபவமும் இருக்கவேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தில் இறங்கக்கூடாது. என் சிறு வயதில் பணக் கஷ் டத்தில் இருந்தபோதுகூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 ஆண்டுகள் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன். அதன்பிறகுதான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டேன்.
அரசியலுக்கு வருமாறு யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. பலவந்தமாக திருமணம் செய்து வைத்தால் அந்த வாழ்க்கை இனிமையாகவா இருக்கும்? இரண்டு தரப்பிலும் ஈடுபாடு இருக்க வேண்டும். ஒரு தரப்பில் மட்டும் வற்புறுத்தல் இருக்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை எல்லாமே ஆண்டவன்தான். அங்கிருந்து உத்தரவு வந்தால் நாளையே பல விஷயங்கள் நடக்கலாம்
ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. தற்போது பல இடங்களில் நிலைமை சரியில்லை. இங்கு மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் நிலைமை சரியில்லை. நாட்டில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து வாருங்கள்.
# ஆயில்யன் 22 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ரஜினி
ரீ - எண்ட்ரி!
பிரும்மாண்டம் என்ற வார்த்தை பிரயோகித்து பிரபலமானவர்!
தயாரிப்பாளராகி தனக்கு தானே கட்-அவுட் வைத்து கலக்கியவர்!
ஏற்றமாய் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று படுவேகத்தில் இறங்கி போனவர்!
எங்கு போனார் என்று நினைத்திருந்த வேளையில்....
ரீ - எண்ட்ரி!
வாழ்த்துக்கள் கே.டி. குஞ்சுமோன்!
# ஆயில்யன் 18 பேர் கமெண்டிட்டாங்க
தமிழ்ச்செல்வன்!
புன்னகை இழந்த ஈழமக்களின் வாழ்வில் ஒளியேற்றம் கிடைக்கும் என்று நம்பிய சமாதான பேச்சுவார்த்தைகளின்போது புன்னகையோடு வலம் வந்துக்கொண்டிருந்த சகோதரனை இழப்போம்! என்று எவருமே நினைத்திருக்காத தருணத்தில் எதிரிகளின் வஞ்சகத்தால் ஈழ மக்களின் புன்னகை நெஞ்சம் கருகி இன்றோடு ஒராண்டு!
முகத்தில் புன்னகை எப்போதும்;
முழக்கமும் தமிழில்தான் எப்போதும் ;
போர் வீரனாய் இருந்தவர், பார்தோறும் சென்றார்;
ஈழத்தின் நிம்மதிக்கு நியாயம் தேடி!
ஆண்டனை இழந்த போது, அதிர்ச்சியில் நின்றவர்களுக்கு!
ஆச்சர்யம் கொடுத்தவர்! சர்வதேச அரசியலில் ஆண்டனின் வாரிசாய்!
இரையானார் கொடிய மிருக(குண)ங்களின் நடவடிக்கைக்கு
விதையானார்..!
தன் விருட்சங்(க)கிளை விட்டு...!
# ஆயில்யன் 12 பேர் கமெண்டிட்டாங்க
ஈழம் அடைந்தே தீரவேண்டும் - ரஜினி பேச்சு!
இலங்கையில் ஈழத் தமிழர்கள் புதைக்கப்படவில்லை அவர்கள் அங்கே விதைக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறீலங்காப் படையினர் ஆண்மையற்றவர்கள்.
ஈழத் தமிழர்கள் பேசும் தமிழ் மொழி இனிமையானது. அவர்கள் திட்டினாலு் கூட இனிமையாகவே இருக்கும். அவர்கள் சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புகளால் புலம்பெயர்ந்து உலகப் பந்து முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். சம உரிமைக்காகப் போராடும் அவர்கள் மீதான யுத்தத்தை சிறீலங்கா அரசு உடன் நிறுத்த வேண்டும்.
நான் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகின்றேன். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருகிறீர்கள். ஆனால் அவர்களை உங்களால் அழிக்க முடியவில்லையே ஏன்? நீங்கள் ஆண்மையற்றவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
சாமானிய சனங்களின் வேதனை கலந்த அந்த மூச்சுக் காற்று பரவிக் கிடக்கும் எந்த நாடும் உருப்படாது. அவர்களின் சாபம் யாரையும் சும்மா விடாது. பெண்கள்இ குழந்தைகளின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. உங்கள் பூமியில் தமிழர்களைக் கொன்று புதைக்கவில்லை. விதைக்கிறீர்கள். அந்த விதை உங்களை வாழ விடாது.
‘நான்' ‘எனது' என்ற அகங்காரத்தை விட்டால் உங்களுக்குத்தான் நல்லது. தங்கள் நாட்டை தமிழர்கள் அடைந்தே தீருவார்கள். பெரிய நாடுகள் இலங்கை அரசுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும். எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்
# ஆயில்யன் 12 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ரஜினி
திரையுலக உண்ணாவிரதப்போராட்டம் சில படங்கள்!
இது போன்ற நிகழ்வுகளால் கூட கொஞ்சமாகவேணும் தாக்கத்தினை ஏற்படுத்தி
எம் ஈழ மக்களினை அழிக்க விழும் குண்டுகளின் வேகம் கட்டுப்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையோடு....!
# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க
Labels: படம்