பதி பசு பாசம்...!

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதி அணுகிற் பசுபாசம் நில்லாவே.

என் கண்களில் அதிகம் தென்பட்ட வர்த்தையாக இது இருந்தது அடிக்கடி தருமபுரம் பக்கம் செல்லும் போதும் சரி மாத இத்ழாக வரும் ஞானசம்பந்தம் இதழிலிலும் சரி, இந்த வார்த்தைகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்!ரொம்ப நாட்களாக இதன் அர்த்தங்கள் தெரியாது,யாரிடம் கேட்டாலும், நீயெல்லாம் சின்னபயடான்னு தான் பதில் வரும்( ஒரு வேளை அவங்களுக்கும் கூட தெரியாமல் இருந்திருக்கலாம்!)

பதி பசு பாசத்திற்கான விளக்கம் வெகுநாட்கள் கழித்துத்தான் அறிந்துக்கொண்டேன்.

பதி இறைவனையும் பசு எனப்படுவது ஆன்மா அல்லது

உயிரையும் பாசம் எனபது மலங்கள் என்று அழைக்கப்படும்

ஆணவம் கன்மம் மாயை குறிக்கும் சொற்களாம்ஒரு முறை இந்த பதிபசுபாசத்தொகையின் புத்தகம் எங்களின் பெரியப்பா வீட்டில் யாருக்கும் உபயோகமின்றி இருந்தப்போது அதை நான் எடுத்து வந்து படிக்க முயற்சித்து,முடியாமல் தனித்தனியாக டைரியில் எழுதி வைத்து, அப்போதும் அது சம்பந்தமாக சரியான விளக்கங்களுக்கு புரிந்து கொள்ள இயலாமல் விட்டுவிட்டேன்! அதிலிருந்து சில வரிகளாக சிற்சில பகுதிகளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனதில் ஆழ பதிந்து எண்ணங்களுக்கு விதையாகவும் அமையும்!

உதவி இரவி உலகுக்கு

இரவிக்கு உதவி செய்யுமோ உலகு

உலகத்திற்கே உதவும் சூரியனுக்கு உலகம் என்ன செய்யப்போகிறது? என்ற விடை தெரியாத கேள்விகள் சில வரிகளாக நிறைய உள்ளன.

பொதுவாக இது போன்ற புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே பீதி கிளம்பும்
இவர்களால் இயற்றப்பட்டு;
இவரது உரையுடன்;
இவரது திருவுளப்பாங்கின்படி;
இவரால் பரிசோதனை செய்யப்பட்டு;
இவர்களால்,
இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது .
இவை அனைத்தையும் படித்து முடிக்கும் முன்பே அலுப்பு வந்து புத்தகம் திரும்பவும் ஒரு மூலைக்கு போய் விடும்!

ஆனாலும் கூட இது போன்ற புத்தகங்களை படிப்பதன் மூலம்தான் பழந்தமிழ் மொழி சம்பந்தமான,நிறைய சொற்களை தெரிந்து கொள்ளலாம்!

முடிந்தால் முயற்சித்து பாருங்களேன்!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//ரொம்ப நாட்களாக இதன் அர்த்தங்கள் தெரியாது,யாரிடம் கேட்டாலும், நீயெல்லாம் சின்னபயடான்னு தான் பதில் வரும்( ஒரு வேளை அவங்களுக்கும் கூட தெரியாமல் இருந்திருக்கலாம்!//

ஹா..ஹா.,. நிஜம் தான்..

said...

இந்த பதிவை படிக்கும் பொழுது தருமபுரம் சுவாமிநாதன் அவர்களது பாடலை கேட்டுக்கொண்டு இருந்தேன்.நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

said...

//வேளராசி said...
இந்த பதிவை படிக்கும் பொழுது தருமபுரம் சுவாமிநாதன் அவர்களது பாடலை கேட்டுக்கொண்டு இருந்தேன்.நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?
/
தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் பாடலையும் தருமபுர ஆதீன வெளியீடுகளின் மீதான ஆர்வத்திலும் நான் எழுதியது :)))

நாட்களானாலும் நலமாய் வாசித்தமைக்கு நன்றிகளுடன்...