1.கடந்து போன பிறந்த நாட்களுக்காக நண்பர்களை நேரில் வாழ்த்த வேண்டும்
2.எங்கயாவது எந்த வித நோக்கமுமின்றி பைக் செல்லும் திசையில் செல்லவேண்டும்
3.என்னோட போட்டோவை பெருசா போட்டோ ஷாப்ல கொஞ்சம் கரெக்ட் பண்ணி வீட்ல மாட்டணும்!
4.யாருக்கிட்டயும் கோபப்படாம பேசணும்
5.முடிந்தவரைக்கும் நிறைய விஷயங்களை போட்டோ டாக்குமெண்டாக மாத்தணும்!
6.சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று வரணும்.
7.ஒரு நாள் முழுவதும் ரேடியோ கேட்கவேண்டும் (மொட்டை மாடியில் அமர்ந்து!)
8.புதிதாய் நிறைய நண்பர்களை சேகரிக்கணும்
9.மறந்துபோன நட்பு வட்டங்களை புதுப்பிக்கணும்
10.முடிந்தவரைக்கும் புத்தகங்கள் படித்து குறிப்பு எடுக்கவேண்டும்
11.நண்பர்களுடன் சென்று திரைப்படம் பார்க்கவேண்டும்
12.நண்பர்களுக்கு வேலை சார்ந்த விஷயங்களை சொல்லணும் (அரபு நாடுகளில் வேலைகள் பற்றி)
13.யோகா வகுப்பில் சென்று பயில்வதற்கு முயற்சிக்கவேண்டும்
14.ஸ்டாக் மார்கெட் பங்கு சந்தை இன்ன பிற சமாச்சாரங்களை பற்றி தெளிவாக நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்
15.கையில மருதாணி போட்டுக்கொள்ளவேண்டும்
16.ஒரு நாளில் நாம் என்னென்ன செய்தோம் என்று குறிப்பெடுக்கவேண்டும்
17.ஒரு நாளில் நாம் என்னென்ன செய்யப்போகிறோம் என்று குறிப்பெடுத்து செயல்பட வேண்டும்!
18.மொட்டை மாடியில் படுத்து தூங்கவேண்டும்
19.பெட்ரோல் போடாமல் வண்டியை தள்ளிக்கொண்டே தெரு சுற்றவேண்டும்
20.மணிக்கூண்டு அது சார்ந்த இடங்களில் சுற்றி திரிய வேண்டும்
21.எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்
22.இட்லி+சாம்பார்+சட்னி கலந்து சாப்பிடவேண்டும்
23.தலைமுடிக்கு டை அடிக்க முயற்சிக்கவேண்டும்
24.சைவதமிழ் புத்தகங்களை தருமை ஆதீனத்திலிருந்து வாங்கி வரவேண்டும்!
25.குசும்பன் ஊரை சுற்றியுள்ள அனைத்து சிவாலயங்களும் இந்த முறை செல்லவேண்டும்!
26.அண்ணாமலை பல்கலைகழகம் சென்று கண்டு வரவேண்டும்
27.நண்பர்களை ஒருங்கிணைத்து சுற்றுலா சென்று வரவேண்டும்
28.விழியில் விழுந்து எழுந்த மனிதர்களை சந்திக்கவேண்டும்
29.சைவத்தமிழிசை பாடல்களில் நாட்களை கழிக்கவேண்டும்
30.மஹதியிடம் தினமும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
போன்ற எந்தவிதமான பெரிய எதிர்பார்ப்புக்களுமின்றி என் விடுமுறைக்கால பயணம் துவங்குகிறது :-)
லீவ் - ஊருக்குப்போகிறேன்..!
Subscribe to:
Post Comments (Atom)
4 பேர் கமெண்டிட்டாங்க:
ஆகா, என்று படித்துக்கொண்டே வந்தால் கடைசியில்
punch அட!
என் கவிதைத் தொகுப்பு இந்த
புத்தகக் கண்காட்சியில் வரப்போகிறது (இனிமேல்தான்)
உயிர்மை பதிப்பகத்தார்
என் கவிதைத் தொகுப்பைப் பதிப்பிக்கிறார்கள்.
bon voyage!
நன்றாக என்ஜாய் பண்ணிட்டு வாங்க பிரதர் ;))
அப்படியே ஈரோட்டுக்கு போய் நிலாபாப்பாவ பாக்கனும்னு ஒரு லைன் சேத்துக்கோங்க மாமா
என்ஜாய் மாடி !!!
// புதிதாய் நிறைய நண்பர்களை சேகரிக்கணும் //
நான் ரெடி !!!
http://ponvandu.blogspot.com/2008/01/blog-post_23.html
Post a Comment