தூக்கம்


எனக்கு அவ்ளோவா தூக்கம் வர்லை, இல்லாட்டி மத்தவங்கள மாதிரி அவ்ளோ நேரம் என்னால தூங்க முடியலைன்னு பொலம்புற ஆளா நீங்க,தயவு செயது உங்களது புலம்பலை விட்டு தள்ளுங்க, இல்லாட்டி அதுவே ஒரு வித மன வியாதியாக மாறி விடக்கூடிய ஆபத்துக்கள் உண்டு இதுக்கு learned insomnia பொட்டு வைச்சு பேரு வைச்சு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க அதுக்குள்ள போய் மாட்டிக்காதீங்க!

தூக்கத்தை கட்டாயபடுத்தி வரவழைக்காதீங்க, இது மாதிரி செய்ய ஆரம்பிச்சிங்கன்னா அப்புறம் சீக்கிரமாவே விழிப்பு வந்துடும் அப்புறம் நல்ல தூக்கம் கிடைக்கிறது ரொம்ம்ப்ப்ப் கஷ்டம்

எப்ப உங்களுக்கு தூக்கம் வர்ர ஃபீலிங்க்ஸ் வருதோ அப்ப மட்டும் தூங்க போனா போதும்!
( இது ஃபார் எக்ஸாம்பிளா நம்ம அபி அப்பா வை தூக்கிக்கோங்க, மனுசன் பத்து பதினைந்து பேருக்கிட்ட சாட்டிக்கிட்டிருந்தாலும் தூங்க வந்துடுச்சுன்னா அப்படியே ஆப் லைன் தான்!)

இளம் சூடான தண்ணீரில் கை கால்களை கழுவிவிட்டு போய் உறங்க ஆரம்பித்தால் வரும் அருமையான தூக்கம் ( மேக்கப் கூட போட்டுக்கிட்டு போயும் தூங்கலாம் கனவுல வர்றவங்களுக்கு ஒரு குஜாலா இருக்கும்!)

ஓவரா தூங்கதீங்க! அதாவது லிமிட்ட மீறி போயி தூங்கிக்கிட்டே இருந்தா அப்புறம் கொஞ்ச நாளைக்கு நல்ல தூக்கமே கிடைக்காது !

இது எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் தேவையில்லாம பெட்ரூம்ல உக்காந்துக்கிட்டு, டிவி பார்த்து சீரிய்லா அழுவறது,நல்ல திங்கறது அப்புறம் 24 மணி நேரம் பத்தாத ஆளு மாதிரி படுத்துக்கிட்டே புத்தகம் படிக்கிறது இதையெல்லாம் விட்டாத்தான் நம்மகிட்ட தூக்கம் வரும்!

சரி என்னாடா இவன் தூங்கறாதுக்கு போய் இவ்ளோ பில்ட அப் கொடுத்திக்கிட்டிருக்கான்னு அலட்சியமா பாக்குறீங்களா? அப்பன்னா உங்களுக்காகத்தான் இந்த மெசேஜ் ஒழுங்கா தூங்கலைன்னா டயாபடீஸ் வந்துடுமாம்ல!

நல்லா தூங்கறதுக்கு உடல் நலம் எப்படி பேண வேண்டும்

தூக்கம் வருவதற்கு என்ன செய்யவேண்டும்

நேர மேலாண்மை தத்துவத்தை எப்படி தூங்கறப்ப யூஸ் பண்றது!

தூங்கறதுக்கான இயற்கை சூழல் எப்படி இருக்கணும்

வெப்பம் மிகுதியாக இருக்கும் சுற்று சுழலில் எப்படி நிம்மதியாக தூங்கறது?

உங்களுக்கு நீங்களே எப்படி ஒரு அருமையான தூககத்தை கொண்டு வர முடியும் இப்படின்னு ஆயிரத்தெட்டு சங்கதிகள ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்காங்க விஞ்ஞானிகள்!
பின்குறிப்பு:- எல்லாத்தையும் கரெக்ட்டா கடைபிடிக்கணும் முடிஞ்சா வீட்ல இல்லாட்டி எப்போவும்போல ஆபிஸ்ல :)

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//
எல்லாத்தையும் கரெக்ட்டா கடைபிடிக்கணும் முடிஞ்சா வீட்ல இல்லாட்டி எப்போவும்போல ஆபிஸ்ல
//
நமக்கெல்லாம் ரெண்டாவதா சொன்ன இடம்தான் சொர்கம் சேர்ல உக்காந்த ஒடனே சொக்கிகிட்டு வரும்!!!

said...

தூங்கப் போவதுக்கு 2 மணி நேரம் முன்பே டி.வி,கம்ப்யூட்டர் பார்ப்பதை தவிர்க்கனுமாம்.ஆயில்யா முடியுமா?