என்ன கான்செப்ட்டோ..?!

முக்கிய நிகழ்வுகள் என்னன்னு பார்கக நான் எப்போது இங்க போய் ஒரு ரவுண்டு அடிக்கிறது வழக்கம்.
இன்னைக்கும் அப்படி போறப்பத்தான் எனக்கு அது கண்ணில பட்டது.
ஆஹா நமக்கும் வாய்ப்பு இருக்குடா பார்த்துடுவோமுனு(தமிழனாச்சே.!ஃப்ரீயா கிடைச்சா விடுவோமா?) கீபோர்டு மவுஸ்லாம் விரல்ல கட்டிக்கிட்டு மாஞ்சி மாஞ்சி டிரை பண்ணேன்,
கடைசியில ஒரு பைல்தாங்க வந்தது -இன்னும் கொஞ்ச நேரம் இருந்த பைல்ஸ்தான்- பார்த்தா பசங்க தியேட்டர் கூரைய பார்த்து பிலிம் எடுத்து ஒவர் பில்டப் கொடுத்துட்டாங்க!
சரி போன போறங்கன்னு விட்டுட்டு வலைத்தளத்தில மேயுறப்ப,
திடீரென்று ஒரு சந்தேகம் பொட்டுன்னு வந்து தட்டுனுதுங்க,
முதல் சேதி என்னான்ன?
Photo Sharing and Video Hosting at Photobucket
படத்த இங்கேல்லாம் போய் டவுன் பண்ணி பார்த்துட்டு அப்புறமா வந்து

ஈழத்தமிழர்களுக்கு உதவாத தென்திரைபடங்களை புறக்கணிங்க,அப்படின்னு இருக்கு.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டவுன் பண்ணிய படத்தை திரும்ப பார்ககதிங்க ஏன்னா நம்ம சீரழிஞ்சிடுவோம்முனு சொல்லுது.
(டவுன் லோடுக்கு கொடுத்திருக்கிற லிங்க போய் சும்மா பார்த்துட்டு மட்டும் வாங்க சொல்றாங்களா?)
Photo Sharing and Video Hosting at Photobucket
இன்னும் கொஞ்சம் சேதிகளை பார்த்தா அய்யோ அம்மான்னு ஒரே புலம்பல் ( இந்த புலம்பல்களும்,சத்தங்களும், யுத்ததால் வாடும் தமிழர்களுக்காக அல்ல! தென்னிந்திய சினிமாவை பற்றித்தான்!?)

வலைப்பக்கங்களில் முக்கால்வாசி தென்னிந்திய சினிமா,தென்னிந்திய தொலைக்காட்டிகளை வைத்து,இணைக்கும்(வளர்க்கும்) இவர்களின் கான்செப்ட்டு என்னவோ..?

0 பேர் கமெண்டிட்டாங்க: