படிப்பது சுகமே..!

குழந்தைகளைப் போராடும் மனநிலையோடு நாம் வளர்க்க வேண்டும். மிகவும் பணிவோடு வளர்க்கப் படுகின்ற குழந்தைகளுக்குப் போராடத் தெரியாது. உண்மைக்காகவும் நியாயத்திற்காகவும் துணிச்சலுடன் போராடுகின்ற பக்குவம் அவர்களுக்கு வந்து விட்டால், அக்கிர மங்களும் அநீதிகளும் அராஜகங்களும் அடியோடு அழியும்.

நமக்குள் இருக்கும் சக்தி வெளிப்பட வேண்டுமென்றால் நம்மைப் போராடச் செய்கின்ற சூழல் நிலவ வேண்டும். சில நேரங்களில் நாமே சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். - வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

சில வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் எனக்கு பிறந்த நாள் பரிசாக அளித்த படிப்பது சுகமே, பெற்று கொண்டபோது எனக்கு அதை பற்றி பெரிதாக ஆர்வம் கொள்ளவில்லை சில வாரங்கள் கழித்து ஒரு இனிய மாலை வேலையில் மொட்டைமாடியில் தனிமையில் அமர்ந்து படிக்க,எனக்குள் ஒரு புது வித அனுபவம் கல்வி வாழ்க்கையினை முக்கால் பகுதியை நிறைவு செய்த எனககு முன்பே கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தான் முதலில் ஏற்பட்டது. பின்நாளில் பல்ருக்கு என்னால் படிப்பு சம்பந்தமாக ஏதேனும் கூற அது மிக உபயோகமாக இருந்தது.
அதற்கு பின்னர் வந்த நாட்களில் உள்ளொளி பயணம், ஏழாவது அறிவின் மூலம் வெ.இறையன்பு மிக பரிச்சயமானர். அதே காலகட்டத்தில் அரசியல் மாற்றத்தால் ஒய்வான பதவிக்கு தூக்கியடிக்கப்பட்ட போது எங்களுக்கு உண்மையிலேயே சந்தோஷம்தான், ஏனெனில கண்டிப்பாக அந்த நேரங்களில் ஏதேனும் படைப்புகள் வெளியாகும் என, நான் எதிர்பார்த்திருந்தேன் என் நம்பிக்கை வீண் போகத வகையில்,தினத்தந்தியின் சனி தோறும் வெளியாகும் இளைஞர் மலரில் ஆரம்பமானது, "ஒடும் நதியின் ஓசை" பலராலும் பாராட்டபெற்ற, ஒரு தன்னம்பிக்கை தொடராக அமைந்தது
வெ.இறையன்பு அவ்வப்போது டி.டியிலும் கருத்துரை வழங்கி கொண்டிருந்தார்.

தமிழக அரசின் சுற்றுலாத்துறையில் செயலராக பணியாற்றி வருகின்றார். முதலவருக்கு பிடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் இவருக்கும் முக்கிய இடம் உண்டு.

சென்னை சங்கமம் விழாவினை சிறப்பாக அரங்கேற்றம் செய்ததில் இவரது பங்கு பாரட்டப்படவேண்டியது.

இப்படிப்பட்ட சுழலில் தமிழ்நாட்டு சுற்றுலா துறையினை மேம்படுத்தும் பொருட்டு இந்த மாதம் முதல் வாரத்தில் ம்லேசியா சென்றிருந்த வெ.இறையன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததாக செய்திகள் வெளியானது, கண்டு மனம் பதறினேன்.
தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கினறன், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலதிக செய்திகள் தெரிந்தவர்கள் சற்று பகிர்ந்துகொள்ளுங்களேன்.!

0 பேர் கமெண்டிட்டாங்க: