பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா !


இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புச்சகோதரி ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ வாழ்த்துக்களோடு அவர்களின் பதிவிலிருந்து சில வரிகளை பகிர்ந்துக்கொள்கிறேன்!

எல்லார்க்கும் இனியவராய்... - இருக்க வாழ்க்கை பயணத்தினை, இயல்பாக இனிமையாக பயணிக்க...!

# தன்’, உணர்ச்சி வசப்பட்டு ‘தான்’ ஆகுகையில், தேவையற்ற விஷயங்களில் காட்டப் படுகையில், விளைவுகள்... வீழ்ச்சிக்கோ விரும்பத் தகாத மன வருத்தங்களுக்கோ அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது?

# எப்போது விசுவரூபம் எடுக்கும் இந்த எண்ணம் எனக் கேட்டால்.. அந்நியரோ அந்யோன்யமானவரோ, அடுத்தவர் அவ்வப்போது நம் தவறைச் சுட்டிக் காட்டும் போதும், அதனால் நம் 'சுயம்' பாதித்து விட்டதாய் பதறி மனம் சுருங்கும் போதும்...

# பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம்! விமர்சித்தவர் பெரியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். 'மூர்த்தி' சிறிதானாலும் 'கீர்த்தி' பெரிதாக இருக்கலாம்தானே!

# வார்த்தைகள் வருத்தம் தந்தாலும், 'நாம் இப்படி இப்படி இருத்திருக்கலாம் நடந்திருக்கலாம், இப்படி இப்படி இனி இருக்கலாம் நடக்கலாம்' என ஒரே ஒரு கணமேனும் அவை நம்மை நினைக்க வைத்தால், அவற்றை உரைத்தவர் நமக்கோர் 'உரை கல்'.

# தவறுகளைத் தட்டிக் கேட்க, சுட்டிக் காட்ட கடவுள் காட்சியொன்றும் தருவதில்லைதான். ஆனால் உணர்ந்து கொள்ள, திருத்திக் கொள்ள சந்தர்ப்பங்களைத் தராமல் இருப்பதில்லை. 'என்னைச் சொல்ல எவருக்கு என்ன தகுதி' என நினைப்பது நியாயமில்லை. ஏன் என வினவினால், நமது தகுதி எது என்பதே பல சம்யங்களில் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை!

# அறிந்த தெரிந்த மற்றவர் மனதில் எங்கு எப்படி நிற்கிறோம் என்பதே 'தகுதி'. நாம் அங்கு நிற்கவே இல்லை என்றால்...?

# சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.

*****************************

முகமே உன் கண்கள் அழகே
விழியே உன் பார்வை அழகே
இதழே உன் பேச்சு அழகே
மொழியே உன் வார்த்தை அழகே

மனமே உன் எண்ணம் அழகே
நினைவே உன் நேர்மை அழகே
உயிரே உன் மூச்சும் அழகே
மனிதா உன் தேகம் அழகே


வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே
இது உண்மையே!

ஒவ்வொரு வரிகளிலும் நம்மை நாமே பாராட்டிக்கொள்ளும்படி அமைக்கப்பட்ட பாடல் இயக்குநர் அகத்தியனில் எழுத்தில் கோகுலத்தில் சீதையில் பாடலாக வெளிப்பட்டது! எத்தனை அற்புதமான எண்ண ஓட்டங்கள் ! கேட்டு ரசித்துபாருங்களேன் நம் தேன்கிண்ணத்தில் இன்றைய ஸ்பெஷல் !
நன்றி:- தேன்கிண்ணம் & முத்தக்கா!

27 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா :))

said...

இங்கேயும் ஒரு தபா இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

அக்காவிற்கு அன்புடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

Anonymous said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா :))

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா :)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி மேடம். :)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் :)

said...

happy birthday ramalakashmi

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லக்‌ஷ்மியக்கா.. வாழ்க வளமுடன்..

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா :))

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி :))

நல்ல ஆரோக்கியத்துடனும் சீரும் சிறப்புமாக வாழ எனது வாழ்த்துக்கள்
சகோதரி!!

said...

வாழ்த்துகள் சகோதரி.

said...

அன்பிற்கும் தேன் கிண்ணத்திற்கும் நன்றிகள் ஆயில்யன்!

வாழ்த்தியிருக்கும் நண்பர்கள்,

கான பிரபா

வடகரை வேலன்

பிரபாகர்

மயில்

சென்ஷி

தமிழ் பிரியன்

சர்வேசன்

நான் ஆதவன்

புதுகைத் தென்றல்

சஞ்சய்

ஸ்ரீமதி

ரம்யா

ஜமால்

அனைவருக்கும் என் அன்பும் நன்றிகளும்.

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

said...

அன்பின் ராமலக்ஷ்மி - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் -இடுகைக்கு நன்றி ஆயில்ஸ்

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..:-))))

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

said...

ஆயில்யனுக்கு நன்றி!
முத்தான பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்க முத்தக்காவுக்கு.

said...

தொடர்ந்து வாழ்த்தியிருக்கும்,

நவாஸுதீன்

திகழ்

சீனா சார்

கார்த்திகைப் பாண்டியன்

நசரேயன்

நானானி

அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம். (ஒரு நாள் தாமதமான வாழ்த்துக்கள்)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம் மேடம். (தாமதமான வாழ்த்துக்கள்):)

said...

நன்றி கருணாகரசு!

நன்றி அமுதா!

நன்றி அமித்து அம்மா!

said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல..:)