பச்சை












பச்சை அப்படின்னு சொன்னாலே மனசு டக்குன்னு பச்சை பசேல் வயல்வெளி - மண் + ஆற்று நீரின் வாசம், நிறத்தோடு பச்சக்குன்னு வந்து ஒட்டிக்கிது ஆனால் அப்படி ஒரு போட்டோ இதுவரையிலும் எனக்கு அமையவே இல்லை - நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெல்மணிகள் பழுத்து மஞ்சள் நிறத்துடனே காட்சி தருகின்றன!

இந்த பச்சை போட்டோ இந்த மாச பிட் போட்டியோடு போய்விடாம நம்மால எதாச்சும் செய்யமுடியுமான்னு கொஞ்சமா யோசிச்சு பார்த்தேன் [கொஞ்சமாத்தாங்க! ரமதான் மாசமா அதான் டயமெல்லாம் இருக்கு!]

சொந்த ஊர் வீடு உறவுகளை விட்டு,பணி சூழல் காரணமாக பெரும்பாலும் எல்லோரும் வெளியூர்களில் வெளிநாடுகளிதான் இருக்கின்றனர் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக விடுமுறைக்கு செல்லும்போது நம்மால் இயன்ற அளவு நம் வீட்டுப்பகுதியில் மரம்,செடி அட்லீஸ்ட் நாலு விதையாவது தூவிட்டு வரலாமே! மரம் நடுவதை சில போட்டோக்களாக்கிகொண்டால் ஊர் நினைவு வரும்போது சொந்தபந்தங்கள் சூழந்திருக்கும் போட்டோக்கள், மனதினை மகிழ்ச்சிக்குட்படுத்தும் சேதிகள் சொல்லுமல்லவா?

டிஸ்கி:- எத்தனை தடவைடா இந்த புறாவை இங்கே நடக்கவிடுவன்னு டென்சனாகிறவங்களுக்கு - ஐயா மன்னிச்சுடுங்க! :)

12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//
டிஸ்கி:- எத்தனை தடவைடா இந்த புறாவை இங்கே நடக்கவிடுவன்னு டென்சனாகிறவங்களுக்கு - ஐயா மன்னிச்சுடுங்க! :)/

:)) ஒவ்வொரு தடவையும் புறா போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே மாட்டேங்குதே ஏன் பாஸ்?

said...

அருமையான போட்டோக்கள்...

said...

எல்லாம் அருமை. ’பச்சை’ மிளகாயும்:)!

போட்டிக்கு எது?

said...

/டிஸ்கி:- எத்தனை தடவைடா இந்த புறாவை இங்கே நடக்கவிடுவன்னு டென்சனாகிறவங்களுக்கு - ஐயா மன்னிச்சுடுங்க! :)/
அப்பிடியா!!!?நா மொத தடவையா பார்க்குறேம்பா!நல்லாருக்கு!

Anonymous said...

Super Photos Aayilu

said...

போட்டோக்கள் அருமை.

said...

photoகள் அருமை ;)

said...

தல..,

ம்கும்... சான்ஸே இல்ல....

(எதுக்குன்னு கேக்கப்பிடாது)

said...

விடிய விடிய முழிச்சிட்டு இருந்ததால வந்த கண்ணு சூடு காணாமப் போச்சுங்க

said...

அழகா இருக்கு எல்லாமே ஆயில்யன்..

பச்சை மிளகாய் ரொம்ப நல்லா இருக்கு.

said...

பசுமையை படங்களில் பார்க்கும் நிலமை வந்துவிடுமோ

ரொம்ப நல்லாயிருக்குங்க

said...

ஆயில்யன், பச்சைமிளாகாய் அருமை.

ஊருக்கு போய் வீட்டில் பச்சை மிளகாய் விதை ,கொத்தமல்லி விதை தூவி வரலாம்.நம் வீட்டீல் காய்த்த பச்சை மிளகாய் என்று ஆசையாய் சமைக்கலாம்.

சொந்த பந்தங்களுடன் உண்டு மகிழலாம்.

வீட்டுத் தோட்டம் மகிழ்ச்சி தரும்.