அம்மா aka MY MOTHERபாட்டி,அம்மா அக்கா பத்தி எப்பவுமே நினைக்கும்போதெல்லாம் கண்டிப்பா கண்கலங்கிட வைக்கும்! பாட்டி வீட்டிற்காக எல்லா சேவைகளும் செய்து முடித்து,பேரப்பிள்ளைகள் நல்லதொரு உத்தியோகத்தில் அமரும்வரை கூட இருந்துவிட்டு,ஏதோ நம்பிக்கையில் நல்லா இருப்பாங்கன்னு தன் காலம் முடிச்சு போயிட்டாங்க! அம்மாக்கிட்ட பேசுறது கூட, சாப்பாடுக்கு அல்லது எங்கயாச்சும் வெளியே போய்ட்டுவரேன் போன்ற தகவல் சொல்றதுதானே தவிர வேற அதிகம் நீட்டி முழக்கி பேசியது கிடையாது! சின்ன புள்ளையா இருக்கும்போதே,அக்கா கூட பெரும்பாலும் சண்டை போட்டுகிட்டு இருந்ததுதான் அதிகம்! வெளிநாடு வேலைன்னு வந்த பிறகு எப்பவுமே ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்தா உடனே அம்மாவுக்கு போன் செய்யணும்ன்னு தானே தோணுமே தவிர வேற 1ம் தோணாது! அதுவும் ஊரை விட்டு வரும்போது எதாச்சும் சண்டை போட்டு எல்லாரையும் கொஞ்சமா கோபப்படுத்திட்டு வரும்போது, ரூமுக்கு வந்து சேர்ந்ததுமே டக்குன்னு போன் செஞ்சுடவே அல்லது திரும்ப ஊருக்கு போயிடலாமோன்னு நினைப்புத்தான்! அது போல எப்பொழுதாவது கடைக்குபோகும்போது இங்கே தங்கள் பிள்ளைகளை பார்க்க ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா வயது ஆட்களை காண்கையில் பேச அல்லது காலில விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாமோன்னுல்லாம் கூட தோணும்! என்னமோ தெரியல சரியா இன்னைக்குன்னு பார்த்து என் கண்ணில இந்த படம் வந்து பட, கொஞ்சம் கொஞ்சமாய் பார்த்து அழுது முழுதாய் பார்க்க மனமின்றி நிறுத்தியிருக்கிறேன்!

படம் பார்க்க நினைத்தால் சற்றே படுவேகத்தில் ஒரு டிரெயிலர் டைப்பில பார்த்துட்டு படம் ஆரம்பிச்சு முடிக்கிற பழக்கம் உண்டு! அதுல ஒரு இண்ட்ரஸ்ட் அப்படித்தான் MY MOTHERம்

ரொம்ப அழகான ஒரு குடும்பம் அந்த பெண் மட்டும் தன் குடும்பத்தினரை விட்டு தன் தாயினை சந்திக்க ஊருக்கு செல்வதாக தொடங்கி இளம்பிராயத்துக்கு ப்ளாஷ்பேக் ஆகிறது! குட்டி குழந்தையாக பள்ளி விட்டு வீடு வரும் பெண்ணுக்கு அம்மா கொண்டு வந்து தரும் தின்பண்டம் அதை அந்த குட்டி பெண் சாப்பிடும்போது அவளின் தம்பி வந்து பங்கு கேட்டு சாப்பிடுவதும் அப்போது அவனை குட்டிவிட்டு, திட்டும் அம்மாவின் நடவடிக்கையில், தன் பெண் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தினை பிரதிபலிக்க வைக்கும் காட்சி! இதற்கு பின்னர் வரும் காட்சிகள் தொடரும்போதே எனக்கு என் அம்மா மட்டும் பாட்டியின் ஞாபகம் படர்ந்து விட்டது மனமெங்கும்! மேற்கொண்டு சில காட்சிகளுக்கு பிறகு என்னால் தொடர முடியா மனநிலை!

நான் பார்த்த டிரெயிலரினை விட்டு படத்தின் டிரெயிலரினை மீண்டும் ஒரு முறை பார்க்க தொடங்கினேன் தொடர்ந்த காட்சிகள் முடிவில் ஒரு ரயில் நிலையத்தில் அம்மா பெருங்குரலெடுத்து அழுதபடியே பிரியா விடை கொடுக்கும் காட்சி ,அழத்தொடங்கிய என் மனத்துக்குள் மீண்டும் மீண்டும் காட்சியாகி மறைந்துகொண்டிருக்கிறது!

படம் பாருங்கள் என்று சொல்வதை விட அந்த சூழலினை அனுபவியுங்கள்!

எங்கோ ஒரு மூலையில், அம்மாவினை பிரிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற, பெண்கள் மட்டுமல்ல, ஆணகளும் கூட பார்த்தால், பிரிவின் வலி பெருகுவதை உணரமுடியும்!


டிஸ்கி:- வாழ்வியலின் பிரதிபலிப்புகளை சினிமாவாக, டிரெயிலரில்/டிரெயிலராக மட்டும் பார்த்து எழுத முற்பட்டது

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:))

said...

பார்த்திருவோம்ண்ணே..!

said...

சரிண்ணே.. டவுன்லோடு செஞ்சாச்சும் பாத்துடறேண்ணே!

தமிழ் அம்மாவுக்கு இங்கிலீஷ் அம்மாவுக்கும் நடுவுல வர்ற அக்கா யாருண்ணே?

said...

ஓக்கே உனாதானா! ஆனா ஒரு கண்டிஷன், படம் பார்த்து மூஞ்சி வீங்கி போன நம்ம ஆயில் அரை பக்கம் தான் விமர்சனம் போட்டிருக்காரு. அதே போல அரை பக்கத்துக்கு தான் போடனும் விமர்சனம் ஓக்கே:-))

said...

//சென்ஷி said...

சரிண்ணே.. டவுன்லோடு செஞ்சாச்சும் பாத்துடறேண்ணே!

தமிழ் அம்மாவுக்கு இங்கிலீஷ் அம்மாவுக்கும் நடுவுல வர்ற அக்கா யாருண்ணே?/

வெளியூர்லாம் போறீங்கடா இங்கீலிசு படிச்சுட்டு போங்க இங்கிலீசு படிச்சுட்டுபோங்கன்னு ஸ்கூல் இங்கீலிசு வாத்தி தலைப்பாடா அடிச்சுக்கிட்டாரு கேட்டாத்தானே இப்ப வந்து அண்ணே சந்தேகம்ன்னா ?

aka - also known as

said...

படத்தோடு ஒன்றி அளித்திருக்கும் விமர்சனம் நெகிழ்வு.

said...

பார்த்துடலாம் பாஸ். ரொம்ப பாதிச்சிருக்கு போலயே :(

said...

நன்றி ஆயில்யன்.. நல்ல அறிமுகம்..
நெகிழ்ந்து போய் எழுதி படிக்கிறவங்களையும் செமயா ஃபீல் செய்ய வச்சிட்டீங்க

said...

ஓஹோ,பூவே பூச்சூடவா மாதிரி டைப்போ.தேடிப்பிடித்து விமர்சன்ம் போட்டுட்டீங்களே

said...

அன்பின் ஆயில்ஸ்

நெகிழ்வு - அம்மா - மறக்க இயலுமா - கொசு வத்தி சுத்த வச்சீட்டீங்களே ! படம் பாத்தேன் ( நீங்க கொடுத்த டிரெயிலர்தான் ) அதுல இருவருமாக புகைப்படம் பெருமையுடன் எடுத்துக் கொண்ட காட்சி அருமை. தாய்ப்பாசம் என்பது இதுதான் ஆயில்ஸ்

நெகிழ்வு

பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள் ஆயில்ஸ்
நட்புடன் சீனா

said...

ஆயில்யன்,அம்மா,பாட்டி,அக்கா என்று உறவுகளைப் பற்றி நெகிழ்வாய் எழுதி
உள்ளீர்கள்.

அம்மாவுடன் அடிக்கடி பேசுங்கள் அவர்களுக்கு அது தான் ஆனந்தம்.