பதின்மம்

பதின்மம் - கடந்துபோனவற்றை நினைத்து பின்பு கவலை கொள்ளவைக்கும் பல நிகழ்வுகள் நடக்கும் பருவம்



குறிப்பாக இவைகள்தான் எனது பதின்ம வயது நினைவுகளின் பெரும் பக்கங்களை நிறைத்திருக்க முடியும் என்ற தீர்க்கமான முடிவோடு எழுத ஆரம்பிக்கின்றேன் ஒவ்வொரு விசயங்களை பற்றியும் கூறும்போது வெவ்வேறு சம்பவங்களின் குறுக்கீடுகளோ அல்லது இடைச்சொருகள்களோடே செய்யவேண்டிய நிர்பந்தங்களோ மட்டுமே அதிகம் இருக்கிறது!

படிப்பு - 1-முதல் 5 வரையிலான பள்ளி நிகழ்வுகள் மிக சுலபமாகவே சென்றுவிட்டதாகவே தோன்றுகிறது இப்பொழுது நினைக்கையில் அண்ணன் மற்றும் அக்காவுக்கும் அம்மாவிற்கும் துணையாக சென்ற காலத்தினை தொடர்ந்து நானும் பள்ளி சென்று வந்திருக்கிறேன் என்பது 6 ம் வகுப்பு எண்ட்ரன்ஸ் தேர்வு எனும் டெரரிசத்தில் புரிபட்டது!என்னமோ கேட்க நான் என்னமோ எழுதி வைக்க தென்னை தன் வரலாறு கூறுதலில் ஏனோ சறுக்கு ஏற்பட்டுவிட்டது போல அதை பரீட்சை முடிந்து வெளியே வந்து என்னவொல்லாம் எழுதினேன் என்று பெரிதாக சொல்லி வைக்க வீட்டின் உறவுகளுக்கு மத்தியிலும் கேலிகளுக்கு ஆளானதுதான் ஞாபகத்துக்கு வருகிறது - வடிவேலு ஸ்டைலில் நான் எதுக்குடா லாயக்கில்லாம போயிட்டேன் - ரேஞ்சுல நான் அப்படி என்னாடா தப்பு செஞ்சேன்னு கொஞ்ச நாள் சொல்லிக்கிட்டு திரிஞ்சேனாக்கும்.

பத்தாவது வரைக்கும் படிப்பு போனது என்னவோ கொத்ததெருவுக்கும் சின்னகடைத்தெருவுக்கும் சுத்தின காலமாத்தான் தெரிஞ்சுது அடுத்த கட்டம் பலவித கனவுகளோட பயணித்த பாலிடெக்னிக் படிப்புதான் - டெய்லி படிக்கணும் முடிஞ்ச அளவுக்கு பர்ஸ்ட் மார்க் எடுக்க முயற்சிக்கணும் கூட்டத்தில தனியா ஜொலிக்கணும்ன்னு டெரர் கனவுகளோட போயி வந்தாச்சு! -அவ்ளோதான் போயிட்டு வந்தாச்சு - கனவுகள் கனவுகளாகவே நின்னுடுச்சு! - அதுவும் கடந்து போகும்

விளையாட்டு - ஸ்போர்ட் டே என்ற ஒரு நிகழ்வு ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் நடந்துக்கொண்டிருக்கிறது,முன்பிருந்த சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் ஓப்பிட்டு பார்க்கும்போது,பங்கேற்க போன காலம் கடந்து பார்த்துவரச்சென்ற காலமும் கடந்து இன்று அன்று ஒரு நாள் விடுமுறையில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் நிலை! பங்கேற்கும் ஆர்வம் அதிகம் இருந்திருந்தாலும் அதற்கான முயற்சிகள் ஏதுமின்றி போனது இன்றும் ஒரு குறையாகவே நினைவடுக்குகளில் அமிழ்ந்திருக்கிறது

காதல் - ப்ரெண்ட்ஸ் சர்கிள் ஆளாளுக்கு லவ்ஸ்ல உழன்றுக்கிட்டிருந்தாங்க - ஹம்ம்ம் அதுதான் நல்ல டைம்ன்னு யாரு ஐடியா கொடுத்தாங்களோ!- எனக்கு அந்த பக்கம் மனசளவில இருந்த இண்டரஸ்டுக்கு சைடு கொடுத்து கிளப்பிவிடக்கூடிய அளவுக்கு தைரியம் இல்லாம ஏகப்பட்ட விசயங்களை நினைச்சு குழப்பிக்கிட்டு கிடந்தது ஈடுபடும் ஆர்வம் அதிகம் இருந்திருந்தாலும் அதற்கான முயற்சிகள் ஏதுமின்றி போனது இன்று இதுவும் ஒரு குறையாகவே நினைவடுக்குகளில்..!

இந்த பதின்ம வயதில் சட்டுன்னு தான் முடிவுகளை எடுக்க தோணும் ஆனா கொஞ்சம் பொறுமையாத்தான் எடுக்க முயற்சிக்கணும்! பொறுமை எடுக்கறதுங்கிறதே கொஞ்சம் ஆலோசனைகள் நிறைய யோசனைகள் கொண்டதாக அமையும் அப்ப ஒரளவுக்கு நல்லதாகவே முடிவுகள் ஏற்படும் அப்படிங்கறது என்னோட நம்பிக்கை ! (அட்வைஸ்! அட்வைஸ்!!)

ஊர் சுற்றல் - விண்ணை தொட விரும்பும் வயதில் ஊர் சுற்றுதல் என்பது தவிர்க்கமுடியாத நிகழ்வு போதுமான அளவு ஊரையும் சுற்றுவட்டாரங்களையும் சுற்றி வந்ததன் விளைவு இப்பொழுதும் கூட ஏதேனும் ஒரு தெருவினை/ஊரினை கடக்கும்போது நினைவுகள் மீளப்படுகிறது!

நண்பர்கள் - நட்பு ஒருவனாய் தொடங்கியதா அல்லது குழுவாக கிடைத்ததா என்று நினைத்துப்பார்க்க தொடங்கிய நாள் முதல் வீண் கோபத்தில் சண்டையிட்டு முறைத்துக்கொண்டு சென்றதும் மீண்டும் நட்பு பாராட்டியதும் இன்றும் நினைவில் கொண்டு வெட்கச்சிரிப்பு வெளிப்படுத்த தயங்குவதே இல்லை !

இவர்களின் பதின்மம் எப்படி சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்திருக்கும் என்று சில வேளைகளில் கற்பனை செய்து பார்த்ததுண்டு - அவர்களும் வந்து சொல்லட்டும் சரிபார்த்துக்கொள்வோம் :)

சென்ஷி

தமிழ்பிரியன்

கறுப்பி தமிழன்

நிஜமா நல்லவன்


டிஸ்கி:-

பதின்ம பருவத்து நிகழ்வுகள்/நினைவுகள் கன்னாபின்னான்னு இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணமாய் இங்கு :)

49 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பாஸ்.. பதின்ம நினைவுகள் ஒரு டெடரா இருக்க வேணாமா ?... உண்மைகளை அடுத்த பதிவிலாவது வெளிச்சம் போட்டுக் காட்டுங்க.. ;-)))

said...

\\\இந்த பதின்ம வயதில் சட்டுன்னு தான் முடிவுகளை எடுக்க தோணும் ஆனா கொஞ்சம் பொறுமையாத்தான் எடுக்க முயற்சிக்கணும்! பொறுமை எடுக்கறதுங்கிறதே கொஞ்சம் ஆலோசனைகள் நிறைய யோசனைகள் கொண்டதாக அமையும் அப்ப ஒரளவுக்கு நல்லதாகவே முடிவுகள் ஏற்படும்\\\\

பாஸ்... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமை.. ஒத்துக்குறோம்... ;-)

said...

அந்த போட்டோல தண்ணில டைவ் அடிக்குறது நீங்களா பாஸு..???!!!!!

said...

12 தானே ஆகுது

அதுக்குள்ளே பதின்மம் எப்படி வந்திச்சி

said...

/ஆனா கொஞ்சம் பொறுமையாத்தான் எடுக்க முயற்சிக்கணும்! பொறுமை எடுக்கறதுங்கிறதே கொஞ்சம் ஆலோசனைகள் நிறைய யோசனைகள் கொண்டதாக அமையும் அப்ப ஒரளவுக்கு நல்லதாகவே முடிவுகள் ஏற்படும் அப்படிங்கறது என்னோட நம்பிக்கை ! (அட்வைஸ்! அட்வைஸ்!!)/


ஸ்ச்.....பாஸ்...இபப்டிதான் ஆயில்யானந்தா உருவானாரா பாஸ்?! :-))

said...

/வடிவேலு ஸ்டைலில் நான் எதுக்குடா லாயக்கில்லாம போயிட்டேன் - ரேஞ்சுல நான் அப்படி என்னாடா தப்பு செஞ்சேன்னு/

ச்சே..பாஸ்..நோ வொர்ரிஸ்..விளையும் பயிர் பாஸ் நீங்க..தெரியாம பயபுள்ளக என்னமோ கிண்டல் பண்ணிட்டாங்க..மன்னிச்சு விட்டுடுங்க பாஸ்! :-))

said...

/எனக்கு அந்த பக்கம் மனசளவில இருந்த இண்டரஸ்டுக்கு சைடு கொடுத்து கிளப்பிவிடக்கூடிய அளவுக்கு தைரியம் இல்லாம ஏகப்பட்ட விசயங்களை நினைச்சு குழப்பிக்கிட்டு கிடந்தது ஈடுபடும் ஆர்வம் அதிகம் இருந்திருந்தாலும் அதற்கான முயற்சிகள் ஏதுமின்றி போனது இன்று இதுவும் ஒரு குறையாகவே நினைவடுக்குகளில்..!
/

பாஸ்...பின்னவீனத்துவ புக் ஏதும் படிக்கறீங்களா..பாஸ்...ஒண்ணுமே புரியலையே...கோனார் நோட்ஸ் ப்லீஸ்!!

said...

/பதின்மம் - கடந்துபோனவற்றை நினைத்து பின்பு கவலை கொள்ளவைக்கும் பல நிகழ்வுகள் நடக்கும் பருவம்/

அவ்வ்வ்வ்! அப்படியா பாஸ்...இடம் சுட்டி பொருள் விளக்கம் ப்லீஸ்!! இல்லேன்னா அட்லீஸ்ட் ஈறுகெட்ட 'எதிரிமறை' பெயரெச்சம்?

said...

பதின்ம வயதில் எப்படி சட்டுன்னு முடிவுகளை எடுத்தீங்கன்னு பொறுமையா யோசிச்சி சொல்லிட்டீங்க

..........

said...

நல்லா அலசி காயப்போட்டுட்டீங்க.

//6 ம் வகுப்பு எண்ட்ரன்ஸ் தேர்வு எனும் டெரரிசத்தில் புரிபட்டது!//

பெரிய பெரிய பரீட்சையெல்லாம் எழுதியிருக்கீங்க போலிருக்கு,

said...

என்ன ஆச்சு..ஏன் திடிரென்னு! ;)

said...

பாஸ் என்ன பாஸ், பதின்மத்த பத்தி எழுத சொன்னா என்னமோ அறுபது வயசானா மாதிரி ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க.

வெ.ஆ. மூர்த்தி ஸ்டைல்ல சொல்லனும்னா “ஒரு கிளுகிளுப்பே” இல்லையே பாஸ் ;)))))))))))))))

said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ் என்ன பாஸ், பதின்மத்த பத்தி எழுத சொன்னா என்னமோ அறுபது வயசானா மாதிரி ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க.

வெ.ஆ. மூர்த்தி ஸ்டைல்ல சொல்லனும்னா “ஒரு கிளுகிளுப்பே” இல்லையே பாஸ் ;)))))))))))))))/


Repeatttttttuu

said...

நல்ல புள்ள:)!

said...

பாலிடெக்னிக்கில் படிக்கும்போது டெய்லி படிக்கறதா?வேண்டாம் நண்பா.
ரிஸ்க் எடுக்க பார்த்திங்க .நல்ல வேலை டெய்லி படிக்காததுற்கு.

said...

அண்ணா

பதின்ம வயதை இன்னும் கடக்காத எனக்கு உங்கள் அனுபவங்கள் சுவையாக இருந்தன, இருந்தாலும் எதையோ மறைக்கிறீங்கன்னு மாயவரம் பட்சி சொல்லுது

said...

\\\\கானா பிரபா said...

அண்ணா

பதின்ம வயதை இன்னும் கடக்காத எனக்கு உங்கள் அனுபவங்கள் சுவையாக இருந்தன, இருந்தாலும் எதையோ மறைக்கிறீங்கன்னு மாயவரம் பட்சி சொல்லுது\\\\

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ஏய்

said...

/கானா பிரபா said...

அண்ணா

பதின்ம வயதை இன்னும் கடக்காத எனக்கு /

ஹிஹி..எகொபெ.பா?!!

said...

:) ரொம்ப வயசாயிருச்சோ...

said...

ஒண்ணும் சொல்லிகிறா மாதிரி இல்லியே!

said...

"கொத்ததெருவுக்கும் சின்னகடைத்தெருவுக்கும் சுத்தின காலமாத்தான் தெரிஞ்சுது"

மிகுதி தொடருமா...

said...

:((((((((((

said...

//தமிழ் பிரியன் said...

பாஸ்.. பதின்ம நினைவுகள் ஒரு டெடரா இருக்க வேணாமா ?... உண்மைகளை அடுத்த பதிவிலாவது வெளிச்சம் போட்டுக் காட்டுங்க.. ;-)))//


டெரராவா?! இனிமேதான் அப்படியெல்லாம் எதாச்சும் டிரை செய்யணும் :)

said...

// தமிழ் பிரியன் said...

பாஸ்... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமை.. ஒத்துக்குறோம்... ;-)//

ஹம்ம்ம்ம் ஏதோ புரிஞ்சா சரி :)

said...

//கண்ணா.. said...

அந்த போட்டோல தண்ணில டைவ் அடிக்குறது நீங்களா பாஸு..???!!!!!///

என் உச்சி மண்டையில கிர்ர்ர்ங்குது உங்க கொஸ்டீனு கேட்டா டர்ர்ர்ங்குது :)

நானெல்லாம் அந்தளவுக்கு ஒர்த் இல்ல பாஸேய்ய்ய்ய் :)

said...

// நட்புடன் ஜமால் said...

12 தானே ஆகுது

அதுக்குள்ளே பதின்மம் எப்படி வந்திச்சி//

வரும்!

வரும்!! :)

said...

//
ஸ்ச்.....பாஸ்...இபப்டிதான் ஆயில்யானந்தா உருவானாரா பாஸ்?! :-))//

ஆச்சி ஒய் திஸ் மச் டெரரிசம்!?

said...

// சந்தனமுல்லை said...

/வடிவேலு ஸ்டைலில் நான் எதுக்குடா லாயக்கில்லாம போயிட்டேன் - ரேஞ்சுல நான் அப்படி என்னாடா தப்பு செஞ்சேன்னு/

ச்சே..பாஸ்..நோ வொர்ரிஸ்..விளையும் பயிர் பாஸ் நீங்க..தெரியாம பயபுள்ளக என்னமோ கிண்டல் பண்ணிட்டாங்க..மன்னிச்சு விட்டுடுங்க பாஸ்! :-))///


ஆனாலும் இன்னுமும் விடைதெரியா வினா பாஸ் :(

said...

//அவ்வ்வ்வ்! அப்படியா பாஸ்...இடம் சுட்டி பொருள் விளக்கம் ப்லீஸ்!! இல்லேன்னா அட்லீஸ்ட் ஈறுகெட்ட 'எதிரிமறை' பெயரெச்சம்?//

ஆச்சி ரொம்ப படம் பார்க்க ஆரம்பிச்சா இப்பிடித்தான் கேள்வி கேட்க தோணும்! :)

said...

//பாஸ்...பின்னவீனத்துவ புக் ஏதும் படிக்கறீங்களா..பாஸ்...ஒண்ணுமே புரியலையே...கோனார் நோட்ஸ் ப்லீஸ்!!//

பாஸ் ஒரு ப்ளோவுல வந்திடுச்சு விட்டுடுங்க விளக்கமெல்லாம் வேண்டாம் :)

said...

//அமைதிச்சாரல் said...

நல்லா அலசி காயப்போட்டுட்டீங்க.

//6 ம் வகுப்பு எண்ட்ரன்ஸ் தேர்வு எனும் டெரரிசத்தில் புரிபட்டது!//

பெரிய பெரிய பரீட்சையெல்லாம் எழுதியிருக்கீங்க போலிருக்கு,//


எஸ்! எஸ்!! திரும்ப திரும்ப கேக்காதீங்க இப்ப நினைச்சாக்கூட பயம்ம்மா இருக்கு :))

said...

// கோபிநாத் said...

என்ன ஆச்சு..ஏன் திடிரென்னு! ;)///


1ம்மில்ல!
1ம்மில்ல நார்மலாத்தான் இருக்கேன் :)

said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
பாஸ் என்ன பாஸ், பதின்மத்த பத்தி எழுத சொன்னா என்னமோ அறுபது வயசானா மாதிரி ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க.
வெ.ஆ. மூர்த்தி ஸ்டைல்ல சொல்லனும்னா “ஒரு கிளுகிளுப்பே” இல்லையே பாஸ் ;)))))))))))))))//

உங்க வயசுக்காரங்களை வைச்சு எனக்கு உதாரணம் சொல்லாதீங்க எத்தினி தடவை சொல்றது :)))

said...

// நிஜமா நல்லவன் said...

Repeatttttttuu//

நல்லது! :)

said...

// கானா பிரபா said...
அண்ணா
பதின்ம வயதை இன்னும் கடக்காத எனக்கு உங்கள் அனுபவங்கள் சுவையாக இருந்தன, இருந்தாலும் எதையோ மறைக்கிறீங்கன்னு மாயவரம் பட்சி சொல்லுது//

ஹம்ம ரொம்ப வயசாயிட்டா ஞாபகமெல்லாம் இப்பிடித்தான் உமக்கு வரும் :)

said...

/// Vidhoosh said...

:) ரொம்ப வயசாயிருச்சோ...//

நோ! நோ!! :)

said...

// அன்புடன் அருணா said...
ஒண்ணும் சொல்லிகிறா மாதிரி இல்லியே!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//மாதேவி said...

"கொத்ததெருவுக்கும் சின்னகடைத்தெருவுக்கும் சுத்தின காலமாத்தான் தெரிஞ்சுது"

மிகுதி தொடருமா..///

அது எப்டி கரீக்டா ஹைலைட் பண்ணியிருக்கீங்க ? :)

said...

//கண்மணி/kanmani said...

:((((((((((//

அழப்பிடாது அக்கா அழப்பிடாது! நான் என்ன இப்ப சொல்லிட்டேன்! கண்ணை தொடைச்சுக்க்கோங்க! :)

said...

இதற்குதான் நல்ல சர்டிபிகேட்டே கொடுக்கப் பிடாது என்கிறது:(!! எனக்கு பதில் எங்கே:)?

said...

//ராமலக்ஷ்மி said...

நல்ல புள்ள:)!
//

ஹைய்ய்ய்ய் தாங்க்ஸ்க்கா :))


(நிசமாலுமே இதை டைப்பியிருந்தேன் நோட்பேட்ல கட் & பேஸ்ட்டும்போது மிஸ்ஸாகிடுச்சு! - சர்டிபிகேட்டெல்லாம் வாபஸ் வாங்கப்பிடாது :) )

said...

//(நிசமாலுமே இதை டைப்பியிருந்தேன் நோட்பேட்ல கட் & பேஸ்ட்டும்போது மிஸ்ஸாகிடுச்சு! -//

நம்புறேன்:)!

// சர்டிபிகேட்டெல்லாம் வாபஸ் வாங்கப்பிடாது :) ) //

பொழச்சுப் போங்க:))!

said...

//ஈடுபடும் ஆர்வம் அதிகம் இருந்திருந்தாலும் அதற்கான முயற்சிகள் ஏதுமின்றி போனது இன்று இதுவும் ஒரு குறையாகவே நினைவடுக்குகளில்..!//

பாஸ் உங்க பிஞ்சு மனசுல இம்புட்டு சோகம் இருக்கும்னு நினைச்சு கூட பார்க்கல பாஸ்!!!!

said...

ஆயில்யானந்தா நமஹ :)) அட்வைஸ் மழை பொழிஞ்சிருக்கீங்களே பாஸ்

said...

pathinmam pathivaai irukkirathu. nallathu . photo arumai.

said...

அழகாப் பகிர்ந்திருக்கீங்க.

//பங்கேற்க போன காலம் கடந்து பார்த்துவரச்சென்ற காலமும் கடந்து இன்று அன்று ஒரு நாள் விடுமுறையில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் நிலை! //
:-))

//இவர்களின் பதின்மம் எப்படி சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்திருக்கும் என்று சில வேளைகளில் கற்பனை செய்து பார்த்ததுண்டு //
நல்ல வேலை!

said...

ivlo chinna vayasula ivlo poruppoda pesureenga boss!!!!

said...

அண்ணன் ரொம்ப உணர்ச்சிவசப் பட்டிருக்கிங்க போல.. :))

said...

கொஞ்சம் சாப்டான நினைவுகள் போல.. எங்களுது டெர்ரர்...

நன்றி..