ஒவ்வொரு வருடமும் ஜனவரி தமிழர்களுக்கு உற்சாகமான ஆரம்பம்தான் தையாக பிறக்கும் தமிழர் நாள்! அதுவும் காவிரி டெல்டாக்களில் தை பிற்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்த எந்த பண்டிக்கைக்குமே கொடுக்கமாட்டார்கள்!
பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் வந்து சேரத்தொடங்கும் மண்பானைகளின் வருகையில் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் எங்களுக்கு பொங்கல் வரும் நாளையும் விடுமுறை வரப்போகும் வேளையையும் குறிப்பில் உணர்த்தும் மண் பானைகளின் வருகை!
எங்கும் பரந்த விற்பனை மையங்களாக அன்றி, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டு வந்து இறக்கும் மண் பானைகளை கிட்டதட்ட 15 நாட்களுக்கு,பானைகளை பத்திரமாக பாதுகாத்து,பனியிலேயே பானைகளோடு உறங்கி உண்டு,வாழ்க்கையை தொடரும் மக்கள்!
இத்தனைக்கும் சொற்பமான வருமானம்தான் அவர்களின் அந்த நேரத்து விற்பனையில் பெறமுடியும்!
நவீன நாகரிகத்தில் பொங்கல் பானையிலிருந்து குக்கர்க்கு மாறி,பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலிட்ட மக்கள்,குக்கரின் விசில் சத்ததில் பொங்கல் கொண்டாடி, டிவிக்களில் வீழ்ந்துகிடக்கிறார்கள்!
வருடத்தின் ஒரு நாளில் நாம் ஏன் பானைகளை உபயோகித்து பயன்பெறக்கூடாது! அல்லது ஒரு ஏழைக்குடும்பம் பயன் பெற் உதவகூடாது ?
சிந்திப்போம்!
பானையில் வைத்து, பொங்கலை சுவைத்திருப்போம்!
வரும் தமிழர் திருநாளில்...!
2010ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்...!
24 பேர் கமெண்டிட்டாங்க:
பொங்கல் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் பாஸூ :)))
பொங்கல் அன்று மட்டுமல்ல;தினமுமே பானையில் வைப்பது ஆரோக்கிய உணவுக்கு முதல் அடிப்படை...
நம் பெண்களுக்கு பானையில் சமைக்க இயலுமா இக்காலங்களில்???
உங்கள் வீட்டிலாவது வைப்பார்களா,குறைந்த பட்சம்???? :))
//Blogger அறிவன்#11802717200764379909 said...
உங்கள் வீட்டிலாவது வைப்பார்களா,குறைந்த பட்சம்???? :))///
சம்பிரதாயம் என்ற முறையில் இத்தினி வருசமாக பொங்கல் பானையிலதான் வைச்சுக்கிட்டு வர்றோம்!
பொங்கல் வாழ்த்துக்கள். நல்ல சிந்தனை
நல்லதுங்கோ
சிங்கைக்கும் பானை கொண்டு வந்து சமைந்துண்டு மகிழ்கிறோம் ...
எங்க வீட்டுல பொங்கப்பானை தான் ஆனா வெங்கலப்பானை.. கேஸ் ஸ்டவ் மேல.. :) மண்பானையில் இது வரை செய்த்து இல்லை.. ஊருக்குப் போய் தான் செய்து பாக்கனும்..
பொங்கல் வாழ்த்துகள் அண்ணா. :))
நல்ல தகவல்
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
யோசிங்க மக்களே யோசிங்க.
பொங்கல் கம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்ங்ணா!! :)
சம்பிரதாயம் என்ற முறையில் இத்தினி வருசமாக பொங்கல் பானையிலதான் வைச்சுக்கிட்டு வர்றோம்! //
எங்க வீட்டிலேயும் அதேதான் பாஸ்.
நல்ல பகிர்வு. பொங்கல் வாழ்த்துக்கள்
பானை நிறைய ,பொங்கல் வாழ்த்துக்கள் ,
பொங்கு பொங்கென்று பொங்கட்டும்
சந்தைக்கு மாட்டுவண்டியில பொங்கப்பானை போவதை சின்ன வயசுல பாத்திருக்கேன் பாஸ். மொழுமொழுன்னு பாக்க அழகா இருக்கும். நல்ல விஷயம்தான் சொல்லியிருக்கீங்க.
அனைவருக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
வென்பொங்கல் வாழ்த்துக்கள்...
மண்பானை சமையல் ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை; கொஞ்சம் கவனமா கையாளணும் அவ்வளவுதான். இந்நாட்கள்ல க்ளாஸ்வேர் இல்லாத வீடே இல்லை; கண்ணாடி பாத்திரங்கள் போலவே கையாண்டால் போதும்.
மண்பாத்திரத்தை மைக்ரோவேவிலும் உபயோகிக்கலாம்!!
என் அம்மா இப்பவும் அடிக்கடி மண்பானையில் சோறு சமைப்பார்.
நாங்கள் மீன் குழம்பு வைப்பது மண்பாத்திரத்தில் மட்டுமே. மேலும் சிலபல உணவுகள் செய்யவும் மண்பாத்திரமே உபயோகிக்கிறேன் அபுதாபியிலும்!!
உடலுக்கும் நல்லது; அத்தொழில் செய்வோர்க்கும் பயனளிக்கும்!
நல்ல கருத்துள்ள பதிவு ஆயில்யன்.
பொங்கல் வாழ்த்துக்கள் சின்னப்பாண்டி , ஊருக்கு போய் சமாய்ங்க
ரொம்ப பெருமையா இருக்கு!! செம ஃபிலீங்ஸ் பாஸ்!! :-)
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துகள் பாஸ்! :-)
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே ;))
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா.ஊருல எல்லாரும் நலமா?
புத்தாண்டு வாழ்த்துக்கள், ஆயில்யன்.
ஆங்கில புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
இன்னுமா பொங்கல் சாப்பிட்டு முடியவில்லை ...அடுத்த பதிவு எப்பொழுது பொங்கும்
Post a Comment