டிஸ்கி - வழக்கம்போல ரொம்ப நாள் முன்னாடி போஸ்டிட்டு உதவிய ஆச்சிக்கு நன்றிகள்
ஊரை சுத்த கிளம்புகையில் எங்கிருந்தாவது வந்து சேரும் வேலைகள்
ஜீனி,அரிசி,காய்கறி அல்லது பேப்பர் வாங்கிட்டு வா!
இப்பொழுதும் எதாவது ஒன்று வந்து கொண்டுதான் இருக்கிறது
அது எப்பொழுதுமே டார்ச்சராகவே இருக்கிறது
ஏன் நீ மத்தவங்க மாதிரி சாயந்தரத்துல காலேஜ் புக்கை எடுத்துவைச்சு படிக்கமாட்டிக்கிற?
யோசித்து சொல்வதற்குமுன்..
மத்தவங்களெல்லாம் கரீக்டா காலேஜ் போகும்போது நீ மட்டும் ஏன்...?
சொல்வதற்கு நிறைய இருந்தாலும்,
எதை முதலில் சொல்வது;
ஹேய்...! டேய் அந்த பையனை பாரு பர்ஸ்ட் ரேங்க் எடுத்து விப்ரோல வேலையும் கெடைச்சுடுச்சாம்!
நேற்றுக்காலையில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி இப்படியாக இருந்தது;
தம்பி நீ உருப்புட்டுடுவியாடா?
இழுபடும் கேள்விகள்!
# ஆயில்யன் 25 பேர் கமெண்டிட்டாங்க
Labels: 1ம்இல்லை
பதின்மம்
பதின்மம் - கடந்துபோனவற்றை நினைத்து பின்பு கவலை கொள்ளவைக்கும் பல நிகழ்வுகள் நடக்கும் பருவம்
குறிப்பாக இவைகள்தான் எனது பதின்ம வயது நினைவுகளின் பெரும் பக்கங்களை நிறைத்திருக்க முடியும் என்ற தீர்க்கமான முடிவோடு எழுத ஆரம்பிக்கின்றேன் ஒவ்வொரு விசயங்களை பற்றியும் கூறும்போது வெவ்வேறு சம்பவங்களின் குறுக்கீடுகளோ அல்லது இடைச்சொருகள்களோடே செய்யவேண்டிய நிர்பந்தங்களோ மட்டுமே அதிகம் இருக்கிறது!
படிப்பு - 1-முதல் 5 வரையிலான பள்ளி நிகழ்வுகள் மிக சுலபமாகவே சென்றுவிட்டதாகவே தோன்றுகிறது இப்பொழுது நினைக்கையில் அண்ணன் மற்றும் அக்காவுக்கும் அம்மாவிற்கும் துணையாக சென்ற காலத்தினை தொடர்ந்து நானும் பள்ளி சென்று வந்திருக்கிறேன் என்பது 6 ம் வகுப்பு எண்ட்ரன்ஸ் தேர்வு எனும் டெரரிசத்தில் புரிபட்டது!என்னமோ கேட்க நான் என்னமோ எழுதி வைக்க தென்னை தன் வரலாறு கூறுதலில் ஏனோ சறுக்கு ஏற்பட்டுவிட்டது போல அதை பரீட்சை முடிந்து வெளியே வந்து என்னவொல்லாம் எழுதினேன் என்று பெரிதாக சொல்லி வைக்க வீட்டின் உறவுகளுக்கு மத்தியிலும் கேலிகளுக்கு ஆளானதுதான் ஞாபகத்துக்கு வருகிறது - வடிவேலு ஸ்டைலில் நான் எதுக்குடா லாயக்கில்லாம போயிட்டேன் - ரேஞ்சுல நான் அப்படி என்னாடா தப்பு செஞ்சேன்னு கொஞ்ச நாள் சொல்லிக்கிட்டு திரிஞ்சேனாக்கும்.
பத்தாவது வரைக்கும் படிப்பு போனது என்னவோ கொத்ததெருவுக்கும் சின்னகடைத்தெருவுக்கும் சுத்தின காலமாத்தான் தெரிஞ்சுது அடுத்த கட்டம் பலவித கனவுகளோட பயணித்த பாலிடெக்னிக் படிப்புதான் - டெய்லி படிக்கணும் முடிஞ்ச அளவுக்கு பர்ஸ்ட் மார்க் எடுக்க முயற்சிக்கணும் கூட்டத்தில தனியா ஜொலிக்கணும்ன்னு டெரர் கனவுகளோட போயி வந்தாச்சு! -அவ்ளோதான் போயிட்டு வந்தாச்சு - கனவுகள் கனவுகளாகவே நின்னுடுச்சு! - அதுவும் கடந்து போகும்
விளையாட்டு - ஸ்போர்ட் டே என்ற ஒரு நிகழ்வு ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் நடந்துக்கொண்டிருக்கிறது,முன்பிருந்த சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் ஓப்பிட்டு பார்க்கும்போது,பங்கேற்க போன காலம் கடந்து பார்த்துவரச்சென்ற காலமும் கடந்து இன்று அன்று ஒரு நாள் விடுமுறையில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் நிலை! பங்கேற்கும் ஆர்வம் அதிகம் இருந்திருந்தாலும் அதற்கான முயற்சிகள் ஏதுமின்றி போனது இன்றும் ஒரு குறையாகவே நினைவடுக்குகளில் அமிழ்ந்திருக்கிறது
காதல் - ப்ரெண்ட்ஸ் சர்கிள் ஆளாளுக்கு லவ்ஸ்ல உழன்றுக்கிட்டிருந்தாங்க - ஹம்ம்ம் அதுதான் நல்ல டைம்ன்னு யாரு ஐடியா கொடுத்தாங்களோ!- எனக்கு அந்த பக்கம் மனசளவில இருந்த இண்டரஸ்டுக்கு சைடு கொடுத்து கிளப்பிவிடக்கூடிய அளவுக்கு தைரியம் இல்லாம ஏகப்பட்ட விசயங்களை நினைச்சு குழப்பிக்கிட்டு கிடந்தது ஈடுபடும் ஆர்வம் அதிகம் இருந்திருந்தாலும் அதற்கான முயற்சிகள் ஏதுமின்றி போனது இன்று இதுவும் ஒரு குறையாகவே நினைவடுக்குகளில்..!
இந்த பதின்ம வயதில் சட்டுன்னு தான் முடிவுகளை எடுக்க தோணும் ஆனா கொஞ்சம் பொறுமையாத்தான் எடுக்க முயற்சிக்கணும்! பொறுமை எடுக்கறதுங்கிறதே கொஞ்சம் ஆலோசனைகள் நிறைய யோசனைகள் கொண்டதாக அமையும் அப்ப ஒரளவுக்கு நல்லதாகவே முடிவுகள் ஏற்படும் அப்படிங்கறது என்னோட நம்பிக்கை ! (அட்வைஸ்! அட்வைஸ்!!)
ஊர் சுற்றல் - விண்ணை தொட விரும்பும் வயதில் ஊர் சுற்றுதல் என்பது தவிர்க்கமுடியாத நிகழ்வு போதுமான அளவு ஊரையும் சுற்றுவட்டாரங்களையும் சுற்றி வந்ததன் விளைவு இப்பொழுதும் கூட ஏதேனும் ஒரு தெருவினை/ஊரினை கடக்கும்போது நினைவுகள் மீளப்படுகிறது!
நண்பர்கள் - நட்பு ஒருவனாய் தொடங்கியதா அல்லது குழுவாக கிடைத்ததா என்று நினைத்துப்பார்க்க தொடங்கிய நாள் முதல் வீண் கோபத்தில் சண்டையிட்டு முறைத்துக்கொண்டு சென்றதும் மீண்டும் நட்பு பாராட்டியதும் இன்றும் நினைவில் கொண்டு வெட்கச்சிரிப்பு வெளிப்படுத்த தயங்குவதே இல்லை !
இவர்களின் பதின்மம் எப்படி சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்திருக்கும் என்று சில வேளைகளில் கற்பனை செய்து பார்த்ததுண்டு - அவர்களும் வந்து சொல்லட்டும் சரிபார்த்துக்கொள்வோம் :)
சென்ஷி
தமிழ்பிரியன்
கறுப்பி தமிழன்
நிஜமா நல்லவன்
டிஸ்கி:-
பதின்ம பருவத்து நிகழ்வுகள்/நினைவுகள் கன்னாபின்னான்னு இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணமாய் இங்கு :)
# ஆயில்யன் 49 பேர் கமெண்டிட்டாங்க
Subscribe to:
Posts (Atom)