பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞரே...!

இன்று ஜுலை முதல் நாள் தன் பிறந்த நாளினை பெற்றோரின் நல் ஆசியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் எங்கள் மாவட்டத்து கவிஞருக்கு

இன்று போல் என்றும் இன்பமும்,இன்னும் பல இனிய நிகழ்வுகளும் எதிர் வரும் காலத்தில் வளமுடன் வந்து சேர, இறைவன் ஆசிகளோடு எம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!


எழுந்து வரும் வேகத்தை எரிச்சலாய் காட்டாமல்
எழுதும் இப்பேனா முனையால் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன்


தேர்ந்தெடுத்த இவ்வழி தெளிவால் பிறந்த வழி
இவ்வழியின் மகத்துவத்தை தெரிவிக்க வார்த்தையில்லை

என் வழிதான் சிறந்ததென நிரூபிக்க இஷ்டமில்லை
எதிர்படும் நிகழ்வுகளின் தாக்கம் தாளவில்லை

இன்பமோ துன்பமோ நன்மையோ தீமையோ
இலாபமோ நஷ்டமோ வாழ்வோ தாழ்வோ
என் எல்லா உணர்வையும் மதிக்கும் என் உயிர்த்தோழி
என்னையே அறிந்து கொள்ள உதவும் ஓர் கண்ணாடி

ஆத்திரத்தை அறிவிக்கும் அழகிழந்த வார்த்தையெல்லாம்
கோர்க்க முனைகையிலே கும்பிட்டு பின் வாங்கும்
வார்த்தைகளின் வெளிப்பாடு உணர்ச்சிகளைத் தாக்காமல்
உள்ளார்ந்த அறிவின் உயரத்தைத் தொட்டு வரும்

மெல்ல, எழும் வார்த்தைகளை மெருகேற்ற முற்பட்டால்
ஆத்திரம் குறைந்து தானாய் அழகுணர்வு வந்துவிடும்
எழுதுகின்ற எனக்கோ இன்பத்தை அள்ளித்தரும்
என்னாலும் முடியுமென்ற எழுச்சியை வென்று தரும்

இத்தனையும் செய்கின்ற என் கவிதைத் தோழிக்காய்
இறைவா உன்னிடம் என் மன்றாட்டு
உலகம் உள்ளளவும் இந்த உயிர்ப்பிணைப்பை
என்றென்றும் உறுதியாக்கிக் காப்பாற்று !

- சுபஸ்ரீ ராகவன்

19 பேர் கமெண்டிட்டாங்க:

said...

En saarbavum Pirandha naal vaazhthukkal sollikaren Subashree ragaavanukku :)))

said...

வாழ்த்துக்கள் கவிஞரே.

நன்றி ஆயில்யன்.

said...

Subashree Raghavanukku - MANY MORE HAPPY RETURNS OF THE DAY....

said...

வாழ்த்துக்களுக்கும் பதிவுக்கும் நன்றி ஆயில்யன்
பின்னூட்டத்தில் வாழ்த்தியவர்களுக்கும் என் நன்றிகள் !

said...

pirantha naal valthukkal:-)

said...

எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

said...

கவிஞருக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துகள்

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள் ...

said...

கவிஞருக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

அட... அப்படியா.. நேக்கு தெரியாதே!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

ஆயில்ஸ் - மாவட்டத்துக்கே அவங்க தான் கவிஞரா? ;)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

//
ஆயில்ஸ் - மாவட்டத்துக்கே அவங்க தான் கவிஞரா? ;)//

ஆயில்ஸ்-க்கு தன்னடக்கம் ஜாஸ்தி! :-)

said...

கவிஞருக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

said...

கவிஞருக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

My hearty wishes to u Subashree:))

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)

said...

வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்