ஆச்சி தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தாங்க. ஆயில்யன்கிட்டே இண்டர்வ்யூ செஞ்சு ஒரு போஸ்ட் போடலாம்ன்னு! நன்றி ஆச்சி!! இனி கேள்விகளுக்கு போகலாம் (ஆச்சி நீங்க போகலாம்!)
டொண்டொடொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
கானா பிரபா:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?
ஆயில்யன்:- நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது
கானா பிரபா:- நீங்க ஆபிஸ் போய்ட்டேன்னா அங்க என்ன பண்ணுவீங்க?
ஆயில்யன்:-சாட்டிங்க் ப்ளாக்கிங்க் அப்புறம் பேஸ் புக் ஆர்கெட் இன்னபிற எல்லாம் வேலை தவிர்த்து மத்த காரியங்கள்
கானா பிரபா:- நீங்க வீட்டுக்கு போய்ட்டா என்ன பண்ணுவீங்க?
ஆயில்யன்:-சோறு தின்னுட்டு மல்லாக்கடிச்சு படுத்துகிடப்பேன்
கானா பிரபா:- உங்களுக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?
ஆயில்யன்:-சோறு தயிரு அப்புறம் இட்டுலி....... தோசை பூரி நூடுல்ஸெல்லாம் பிடிக்காது உவ்வ (வாந்தி ஸ்டைலில் முகத்தை நேராக்குகிறார் - நார்மலா கோணலா இருக்கும்!)
கானா பிரபா:-ஆபிஸ்க்கு என்ன எடுத்துட்டு போகப் பிடிக்கும்?
ஆயில்யன்:-ஐ-பாட்,எம்பி3 பிளேயர் அப்புறம் அப்புறம் திங்கிறதுக்கு மேரி & குட்டே பிஸ்கெட் (டீ கொடுக்கும்போது அதுல நனைச்சு நனைச்சு திங்கலாம்ல - மேரி பிஸ்கட்டுன்னா ரெண்டு ரெண்டா..)
கானா பிரபா:-ஆபிஸ்ல உங்களை என்ன சொல்லி வேலை செய்ய சொல்லுவாங்க?
ஆயில்யன்:-ப்ளீஸ் சார் இன்னிக்கு மட்டுமாச்சும் இதை செஞ்சு கொடுங்க சார்ன்னு - யோவ் நான் பிசின்னு சொல்லிக்கிட்டிருக்கேன்ல நோ சான்ஸ் ஈவன் எனக்கு இருக்கிற இந்த 24 அவர்ஸ் அப்படிங்கறதே ரொம்ப்ப கொஞ்சம் எத்தனை பிராஜெக்ட்ஸ் எத்தனை கிளையண்ட்ஸ் ஒரே குஷ்டமப்பா!
கானா பிரபா:-. நாம ஆன்லைன்ல இருந்தா என்ன பண்ணுவோம்
ஆயில்யன்:-சாட்ல உக்காந்துக்கிட்டு ஸ்டேட்டசு சண்டை போடுவோம்
கானா பிரபா:- நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோமா?
ஆயில்யன்:- ஹைய்ய்ய இல்ல இல்ல! நீங்க சிவப்பு! ரெண்டாவது நீங்க பெரியவரு நான் இன்னும் ச்சின்ன பையன்
கானா பிரபா:-. எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?
ஆயில்யன்:- ரொம்ப சிம்பிள் மல்லு படம் புரொபைல்ல மாத்துனா போதுமே டக்குன்னு வந்து ஹாய் சொல்லிட்டு சிரிப்பீங்களே…!
கானா பிரபா:-. நான் உங்களை என்ன சொல்லி கூப்பிடுவேன்..?
ஆயில்யன்:- பாஸ் வெட்டியாத்தானே இருக்கீங்க..?
கானா பிரபா:- ரேடியோவுல என்ன பார்க்க பிடிக்கும்?
ஆயில்யன்:- ஹய்யோ ஹய்யோ ரேடியோவுல என்ன கேக்க பிடிக்கும்ன்னு இருக்கணும் கேள்வி !(கேள்வி கேக்க கூட தெர்ல)
கானா பிரபா:- எந்த புக் பிடிக்கும்?
ஆயில்யன்:- ஏ,பி,சி,டி புக்கு மட்டும்தான் அதுலதான் 26 எழுத்து மட்டும் இருக்கும்
பகுதி பகுதியாத்தான் ஆயில்யன்கிட்டே கேட்டேன். ரெண்டு மூணு கேள்விகளுக்கு மேலே சார் சாட்டிங்குக்கு ஓடிபோய்டறாங்க... நம்ம தமிழன் கறுப்பி சென்ஷிகிட்டயும், தமிழ்பிரியன்கிட்டயும் இதே மாதிரி ஒரு இண்டர்வியூ எடுக்கணும்ம்னு கேட்டுக்கிறேன்!(கேள்விகள் இதேதான் இருக்கணும்னு கிடையாது இன்னும் வக்கணையா கூட இருக்கலாம்!!)