கோபம்...!

சடக்கென்று வந்து செல்லும் ஒரு விஷயம் சென்ற பின்புதான் தெரியும் அதன் வடுவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளின் விபரங்களும்! நமக்கு பிடிக்காத ஒன்றினை மற்றவர் செய்யும் போதுதான் பெரும்பாலும் கோபம் வெளிப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்கள் கோபம் அடைந்து அதை வெளிக்காட்டிய பின்னர் சில மணி நேரங்கள் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ கூட தமது கோபம் நினைத்து வருந்துதல் அல்லது தவறு என கண்டறிகிறார்களாம் இன்னும் சிலர் தம்மை நினைத்துப்பார்த்து கேலியாக சிரித்துக்கொள்கிறார்களாம்! இதைத்தான் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று நம் பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ....!?

பிடிக்காத வேலையில் மற்றவர்கள் ஈடுபடுதல், பிடிக்காத வேலையில் ஈடுபட்டல் இவைகளால் தான் ஆத்திரம் அல்லது கோபம் குபுக்கென்று வந்து வார்த்தைகளாய் விழுகிறது சில சமயங்களில் அடிதடிகளாய் கூட அரங்கேறுகிறது.

கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது சவுண்டு வுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமாம்!

அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!

நம்ம ஊரு ஸ்டைல் கோபங்கள் எல்லாம், பாத்திரங்களை வீசுதல் - பூரிகட்டைகளை பற்றி தெரியாதவர்களா இருக்கிறார்கள் நம் வலைப்பதிவுலகில்:-)

நாற்காலிகளை உடைத்தல்,சுவரில் முட்டிக்கொள்ளுதல் - இதிலும் சிலர் ரொம்ப ஜாக்கிரதையாக தலையாணை வைத்துக்கொண்டு முட்டுபவர்களும் உண்டு! இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இதையும் தவிர்த்து அதிக பட்ச கோபங்கள் ஆபத்தான முறையிலும் கூட வெளிப்படுத்தப்படுகிறது!

எனக்கு ரொம்ப கோபம் வரும் ஆனால், வெளியில காட்டிக்கவே மாட்டேன் என்று பெருமைக்கொள்ளும் மக்களுக்கு மரியாதையாக கோபத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்...! உங்களுக்குத்தான் நிறைய நோய்கள் வர வாய்ப்பிருக்கிறதாம்!

சரி கோபத்தை எப்படி நிப்பாட்டறதுன்ன்னு கேட்டா?

கோபத்தை நிப்பாட்டுவது என்பது உடனே சாத்தியமில்லாத விசயம், அதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை முதலில் மேற்கொள்ளுங்கள் ! பிறகு மெல்ல குறைந்து, பின் உங்களிடமிருந்து விட்டு விலகும்!

கோபத்தின் ஆதிக்கம் அதிகரித்தால், பிடிக்காத செயல்களும் தொடர்ந்தால், அந்த இடத்தினை விட்டு உடனே அகன்றிடவேண்டும்! என்று சிலர் அறிஞர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்!

ரொம்ப பெஸ்ட்டுன்னு சொல்லணும்னா 1,2,3,4,5,6,7,8,9,10....... தானாம்! இதுதான் நல்ல வொர்க் -அவுட் ஆகி கோபத்தை அவுட் செய்கிறதாம்!

அப்படியும் கோபம் இருந்தால் நன்றாக மூச்சினை உள்ளிழுத்து வெளி விடுங்கள் சில நிமிடங்களுக்கு.....!

இன்னும் கொஞ்சம் கோபம் இருந்தால் எதாவது பாட்டு கேளுங்கள் அல்லது பக்தி மார்க்கத்திற்கு சென்றுவிடுங்கள்!

இல்லப்பா இன்னும் கூட எனக்கு கோபம் இருக்குப்பா என்ன பண்றதுன்னு கேட்டா ஒரே முடிவுதான்...!

போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!

எல்லாமே க்ளியர் ஆகிடும்! (பின்ன என்னங்க இதுக்கும் மேலேயுமா ஒரு மனுசனுக்கு கோபம் இருக்கும்!)

22 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஒண்ணு விட்டுட்டீங்களே... கோவம் வந்தா சட்டுனு ஒரு பதிவு போடலாம் !!

அது இருக்கட்டும்.. இப்ப உங்களுக்கு யார் மேல என்ன கோவம்?

said...

//என்ன பண்றதுன்னு கேட்டா ஒரே முடிவுதான்...!//

வேண்டாங்கோ:( ! நல்ல புள்ளைங்களா 1,2,3,4 சொல்லிக்கறோம். மூச்சை இழுத்து விட்டு, பாட்டுக் கேட்டு, பக்தி வழியிலே போயிக்கறோம்:)!

நல்ல பதிவு:)!

said...

அப்ப மீள்பதிவு போட்டும் காலத்தை ஓட்டலாமா? நல்ல ஐடியாவா இருக்கே.. ;-)

said...

டேய்... என்னை செவுத்துல முட்டிக்கன்னு சொல்ல நீ யார்ரா வெண்ண.. போய் நீ செவுத்துல முட்டிக்கடா!

said...

தமிழ் பிரியன் said...

//அப்ப மீள்பதிவு போட்டும் காலத்தை ஓட்டலாமா?//

ஏன் கூடாது:)? பாருங்க, இதை நான் முன்னர் படித்ததில்லை.

//நல்ல ஐடியாவா இருக்கே.. ;-)//

ஸ்டார்ட் ம்யூசிக்:))!

said...

கோபத்தின் ஆதிக்கம் அதிகரித்தால், பிடிக்காத செயல்களும் தொடர்ந்தால், அந்த இடத்தினை விட்டு உடனே அகன்றிடவேண்டும்! என்று சிலர் அறிஞர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்!

ada nalla advice nga
nalla pathivum kuda

said...

ஆயில்யன் ரொம்ப நல்ல பதிவு.. நான் இன்று இருக்கு நிலையில் இது எனக்கு ஒரு பாடம் சொல்லுது..

said...

1,2,3,4,5,6,7,8,9,10...:-)

said...

//கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது சவுண்டு வுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமாம்!

அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!//

நான் சமத்தா அமைதியா ஒரு பேப்பரும் பேணாவும் எடுத்துக்கிட்டு தனியா போய் உட்கார்ந்துடுவேன். அந்த பேப்பர்ல கண்ணாபின்னானு கோவம் தீர்ற வரை கிறுக்குவேன்.. அப்புறம் அந்த பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி போட்டுடுவேன் :))))

Anonymous said...

உங்க பதிவ படிச்சிட்டு எனக்கு கோவம் கோவமா வருதுங்க? ஏன்னு கேக்கிறிங்களா? பின்ன என்னங்க ஒரு தீர்வு சொல்றிங்கனு பார்த்தா சுவத்தில முட்ட சொல்றிங்க ஏன்னா அது old fashion pa........சரி சரி முறைக்காதிங்க நீங்க சொன்ன முறைகளை கையாண்டு பார்க்கிறேன்......

said...

//சென்ஷி said...
டேய்... என்னை செவுத்துல முட்டிக்கன்னு சொல்ல நீ யார்ரா வெண்ண.. போய் நீ செவுத்துல முட்டிக்கடா!
//

ஹைய்ய்ய்ய் எங்க அண்ணன் என்னிய திட்டிட்டாரேய்ய்ய்ய்ய்! :)))

said...

// அமுதா said...
1,2,3,4,5,6,7,8,9,10...:-)//

பரவாயில்லையே நீங்க டக்குன்னு கண்ட்ரோல் பண்ணிட்டீங்க கோபத்தை !

எனக்கெல்லாம் ஆயிரத்தை தாண்டுது :(

said...

ஆகா..நல்ல பதிவு! நிஜமா கோபமெல்லாம் போனதுக்கப்புறம் நாம பண்ணது சின்னப்புள்ளத்தனமா இருக்கேன்னு நினைச்சிருக்கேன்!

//பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!//

கொஞ்சம் ஓவராத் தெரியலை?!! :-)

said...

அட..அமுதா மேடம் பசங்க ஹோம் ஒர்க்-கை இங்கே செஞ்சுட்டாங்க போல! :-))

said...

//தமிழ் பிரியன் said...
அப்ப மீள்பதிவு போட்டும் காலத்தை ஓட்டலாமா? நல்ல ஐடியாவா இருக்கே.. ;-)
//

பெரியவர் விட மாட்டார் போல இருக்கே! :-)

said...

\\போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!\\

தோடா சொல்லிட்டாரு வள்ளுவரு ;)))

அண்ணே நல்ல பதிவுண்ணே.

said...

\\ G3 said...
//கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது சவுண்டு வுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமாம்!

அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!//

நான் சமத்தா அமைதியா ஒரு பேப்பரும் பேணாவும் எடுத்துக்கிட்டு தனியா போய் உட்கார்ந்துடுவேன். அந்த பேப்பர்ல கண்ணாபின்னானு கோவம் தீர்ற வரை கிறுக்குவேன்.. அப்புறம் அந்த பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி போட்டுடுவேன் :))))
\\

ஆகா...இத்தனை நாளா இப்படி ஒரு ஆளு கூடவா பழக்கிட்டு இருந்தோம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

// கோபிநாத் said...

\\ G3 said...
//கோபத்தினை வெளிப்படுத்துவதில், பெரும்பாலானோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது சவுண்டு வுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டுமாம்!

அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல், கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,இதெல்லாம் நார்மலா நடக்குறது!//

நான் சமத்தா அமைதியா ஒரு பேப்பரும் பேணாவும் எடுத்துக்கிட்டு தனியா போய் உட்கார்ந்துடுவேன். அந்த பேப்பர்ல கண்ணாபின்னானு கோவம் தீர்ற வரை கிறுக்குவேன்.. அப்புறம் அந்த பேப்பரை சுக்கு நூறா கிழிச்சி போட்டுடுவேன் :))))
\\

ஆகா...இத்தனை நாளா இப்படி ஒரு ஆளு கூடவா பழக்கிட்டு இருந்தோம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்//

டேய் கோபி! பேப்பரை கிழிச்சுடுறதுனா பயப்படாத சந்தோசப்ப்டு.. அந்த பேப்பர் மாத்திரம் அவங்க கிழிக்கலை, அதுல கிறுக்குனத கவிதைன்னு சொல்லி பதிவுல ஏத்திடுறாங்க :-(

said...

சரி அண்ணே..!

:))

said...

நல்லா இருக்கு...அப்படியே சோகம் வந்தா என்ன செய்யனும்னும் போடுங்க :)

said...

அடப்போங்க

கோவம் வரும்போது 1,2 எண்ணி பாடம் படிக்க சொல்றீங்க.

கோவம் எதுக்கு வருது>
நமக்கு புடிக்காதத மத்தவங்க செய்யும் போது வருது.

ஏன் புடிக்காதத செய்யறீங்க???