வரேன்ங்க..!

அதிகாலை கோவில் தரிசனம்

உணவு வகையறாக்களுடன் கொஞ்ச நாள் (சு)வாசம்.(நல்லா திங்கறதுக்குத்தான்...!)

இருக்கும் நட்புக்களோடு இணைந்து ஊர் சுற்ற,

இனிய உறவுகளின் இல்லங்களில் தலை காட்டி,

தனிமையை பொறுமையாய் கழித்த காலத்தினை நினைத்துப்பார்த்து,

உறவுகளோடும் நட்புக்களும் மகிழ்வாய் இருந்து போக எனக்கு வரும் ஒரு மாத காலம்!

ஒரு மாத காலம் ஊர் சுற்றி திரிந்தாலும் ஒரு வருடமாய் உற்ற துணையாய் இருந்த, இருக்கும்,இருக்கப்போகும் உங்களின் நினைவுகளை சுமந்தபடியே....

நான் வரேன்ங்க..!

26 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வேரை பார்க்க விழுது போகிறது...
கூடு தேடி இரையோடு பறவை போகிறது...
கடல் தேடி வானம் பார்க்க நதி போகிறது...

வழி விட்டு நில்லுங்கள்...வலி நானுமறிவேன்

said...

Have a safe journey bro. :-)

said...

ஆயில்யன்,உங்கள் விடுமுறை உறவுகளோடு...நல்ல உணவோடு சுகமாய் அமைய என் இனிய வாழ்த்துக்கள்.சுகமாய் சீக்கிரமாய்.சந்தோஷமாய் திரும்பி வாங்கோ.

நான்தான் முதல் வாழ்த்தா!
போய்ட்டு வாங்கோ.

Anonymous said...

சந்தோஷமாக போய்விட்டு வாங்க ஆயில்யன்.

said...

ஆயில்யன்,உங்கள் விடுமுறை இன்பமாக உறவுகளுடன் நிறைய வாழ்த்துக்கள்.

said...

பாஸ்

போனோமா வேலை முடிஞ்சு வந்தோமான்னு இருக்கணும். கனவு தேசம் அது இதுன்னு அலையக்கூடாது ஆம்மா.

said...

bon voyage

கால் கட்டு போட போறேன் என்று சொன்னீங்கள அதுக்கும் என் வாழ்த்துக்கள்

said...

விடுமுறையை நல்ல விதமாக, உறவுகளோடு மகிழ்வாக, விதவிதமான உணவுகளை ஒரு கட்டுகட்ட, ஊர் சுத்த, கடலை போட,அரட்டை அடிக்க என கொண்டாடிவிட்டு வாருங்கள் ஆயில்யன்!!!!!
ஆப்பி ஆலிடேஸ்!!!!

said...

வாங்க!வாங்க! வெல்கம் பேக் :)))

said...

// கானா பிரபா said...
பாஸ்

போனோமா வேலை முடிஞ்சு வந்தோமான்னு இருக்கணும். கனவு தேசம் அது இதுன்னு அலையக்கூடாது ஆம்மா.
//

ரிப்பீட்டு!

said...

சந்தோஷமாக போய்விட்டு வாங்க

said...

இனிமையான பயணத்திற்கும் விடுமுறைக்கும் வாழ்த்துக்கள் அண்ணன்...

said...

ஊருல இருக்கற வயசுப்பொண்ணுங்க எல்லோரையும் கேட்டேன்னு சொல்லுங்க பாஸ்...;)

said...

ஒரு மாத காலம் ஊர் சுற்றி திரிந்தாலும் ஒரு வருடமாய் உற்ற துணையாய் இருந்த, இருக்கும்,இருக்கப்போகும் உங்களின் நினைவுகளை சுமந்தபடியே....//

நல்ல அனுபவங்களுடன் வருக...

said...

உங்ககிட்டயிருந்து இன்னும் எதிர்பார்த்தேன் :))

கூடிய சீக்கிரம் மீட்டைப் போடுவோம் அண்ணாச்சி!! என்சாய் மாடி!!

said...

happy hols :)

said...

\\"வரேன்ங்க..!"//

"வாங்க வாங்க”!

இனிமையாய் அமையட்டும் விடுமுறை:)!

said...

அட்வான்ஸ் கல்யாண வாழ்த்துக்கள் அண்ணே..

போன் நம்பர் கொடுங்கண்ணே

said...

//Muthusamy said...
வேரை பார்க்க விழுது போகிறது...
கூடு தேடி இரையோடு பறவை போகிறது...
கடல் தேடி வானம் பார்க்க நதி போகிறது...

வழி விட்டு நில்லுங்கள்...வலி நானுமறிவேன்
//

முத்துசாமி எழுதிய வரிகள் அருமை!!!

said...

பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க அண்ணா.. இனிய பயணத்திற்கு அன்பும் வாழ்த்துக்களும்..

said...

வாங்க வாங்க :)

said...

:)

said...

சென்றுவா மகனே! சென்றுவா

said...

விடுமுறை நல்லா ENJOY பண்ணிட்டு வாங்க!

said...

விடுமுறை நல்லா ENJOY பண்ணிட்டு வாங்க!

said...

பயணம்/விடுமுறை இனிதெ அமைய வாழ்த்துகள் :-)