அய்யா பெரியவரே.....!


பொறுத்து

பொறுத்து

பொறுமையே

பொறுமையிழந்திருக்கும் நேரமாகிவிட்டது இன்று..!

இனியும் பொறுமை காத்தல் என்பது பிணங்களை பார்த்தல் என்பதில் மட்டுமே முடியக்கூடும்!

மத்திய அரசிடம் வைத்த் கோரிக்கைகள் யாவும் வீணாகிப்போனது இன்னும் புரிபடவில்லையா...?

இல்லை இதற்கு மேலும் எதோ ஒன்று தமிழினத்தை காப்பாற்றும் என்ற இறை நம்பிக்கை முடிவில் இருக்கிறீர்களா...?

வீழும் ஈழ தமிழ் மக்களின், கல்லறைகளில், தமிழன் உதவி செய்யாததால் வீழ்ந்தவர்கள் இவர்கள் என்ற குறிப்புக்கள் எழுத்துகளாய் அல்ல எண்ணங்களாய் நிறைந்திருக்கும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்!

17 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆமா பொறுமை எல்லை கடந்து கொண்டிருக்கிறது...!

said...

//பொறுமையே

பொறுமையிழந்திருக்கும் நேரமாகிவிட்டது இன்று..!//

உண்மைதான் ஆயில்யன்!

said...

பொறுத்தார் பூமி ஆள்வாரா பூமிக்குள் போவாரா:(?
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
போர் நிறுத்தத்துக்கு என்ன வழி செய்யப் போகிறது நம் அரசு?

said...

இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசாங்கத்தின் நிலை மாறவே மாறாது

நடுவனரசு - ய்யோ பிரானப் இவனுங்க(தமிழமக்களுங்க) இன்னமும்மா நம்மல நம்புரானுங்க

பிரானப் - அது அவனுங்க விதி

தமிழர்களாகிய நாம் வரும் குடியரசு தினத்தை புறக்கணிப்போம்

said...

நாறவாயன், சிவசங்கர மேனன், இத்தாலி எஜமானி, தலையாட்டி பொம்மை இவர்கள் மத்தியில் இருக்கும்வரை, ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் இல்லை. சுரணையற்ற சில தமிழக தமிழர்களால் அழியப் போகிறது ஒரு இனம்.

said...

செவிடர்கள் காதில் சங்கு ஊதி என்ன பலன் ??

ஆழமான கருத்து பதிவு ஆயில்யன்...

said...

பொறுமையே

பொறுமையிழந்திருக்கும் நேரமாகிவிட்டது இன்று..!

மிகச்சரியான உண்மை.

மனதளவில் நாம் வருந்துவது கூட, அரசியல்வாதிகள் செய்வதில்லை.

said...

//பொறுமையே

பொறுமையிழந்திருக்கும் நேரமாகிவிட்டது இன்று..!//
உண்மை :-((

said...

ஆயில்யன் எங்கே! பிறந்ததினம் கொண்டாடிய அசதியில் ரொம்ப நாளாக் காணோம்.இனிய வாழ்த்துக்கள்.பிராபாவின் பக்கத்தில் உங்களுக்கான வாழ்த்துக்கள் சேகரிக்கப்பட்டதில் நானும் கலந்துகொண்டேன்.

உண்மை ஆயில்யன் நீங்கள் சொல்வது.நாங்களும் எங்கள் நிலைமை சொல்லிச் சொல்லிக் களைத்தே விட்டோம்.இத்தனை கொடுமைகள் கண்ட பின்னும் அமைதியாய் இருப்பது என்பது மனிதாபிமானத்திற்கே ஒரு சவால்.

said...

:-(((

said...

'பொறுத்தது போதும் பொங்கி எழு!'
என்று சொல்லக்கூட திராணியற்ற அவர்களின் இயலாமையை என்ன சொல்ல? இதுக்கெல்லாம் ஆளுவோர் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்..ஓர் நாள்!!!!

said...

அந்தப்படம் மனசை கதற வைக்குதுங்க!

அண்ணன் தஞ்சாவூரான் கூற்றை அப்படியே வழிமொழிகிறேன்.

said...

நம்ம நாட்ல நடக்கற அட்டூழியங்களுக்கே இவுங்க அறிக்கை விட்டே ஒருத்தனை ஒருத்தன் சொறிஞ்சுக்குவானுக... இதுல பக்கத்து நாட்ல நடக்கறதெல்லாம் பாக்க கண்ணு இருக்குமா? கோபாலபுரம் வீடு, ஆலிவர் ரோடு வீடு... இதுல இருக்கறவங்கதான் தமிழனுக...நான் நீங்க ஈழத்துல இருக்கறவங்கள்லாம் கவுண்டர் சொல்ற மாதிரி "வீணாப் பொறந்துட்டோம்"

said...

படம் ரொம்ப நெகிழ வைக்குது...

//பொறுமையே

பொறுமையிழந்திருக்கும் நேரமாகிவிட்டது இன்று..!//

உண்மை...

said...

:((((((

said...

பொறுமைக்கே இது ஒரு சோதனையாத்தான் இருக்கு

said...

எங்கள் சுரணையற்ற தமிழக
தலைவர்களை நம்பாதீர்.