உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்;
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை;
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன,
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!
என்று கம்பீரமாக ஆரம்பமாகும் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஏதோ ஈர்ப்பு இளம் வயதிலிருந்தே தொடங்கிவிட்டது!
இத்தனைக்கும் பாடல் போடுவதுதான் அப்பாவுக்கு வேலை,டேப் பாட ஆரம்பித்ததும்,தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு இவர் கிளம்பிவிடுவார் காளியாக்குடியை நோக்கி.!
அந்த நாள் தொடங்கி இன்று வரை அவ்வப்போது சீர்காழியின் குரலில் லயித்திருப்பது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகிவிட்டது!
எத்தனையோ பேர் வந்தாலும், எத்தனையோ சாமிபாடல்கள் பாடினனலும் இன்றும் கோவில்களில் சீர்காழியின் பழைய பக்தி பாடல்கள்தான் ஒலிக்கின்றன! (மார்கழியில் நீங்க செக் பண்ணி பார்த்துக்கலம்!)
லண்டனில் முருகன் கோவில் விழா கச்சேரியில் அவருக்கு அளித்த வரவேற்பு , அவர் பாடிய பாடல்கள், கண்ணதாசன் பிரத்யோகமாக எழுதிய,
உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த – தமிழன்
உள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த
கலையில் சிறந்த இசைக்கலை நடத்த –
நானும் கடலைக் கடந்து வந்தேன் தமிழ் வளர்க்க...
கரகோஷத்தின் பின்ணணியில் இப்பாடலும், ஆங்கிலத்தில் முருகனை துதித்து பாடிய பாடலும், எப்போது கேட்டாலும் உள்ளத்தில் மகிழ்ச்சியை தூவிச்செல்லும்!
வருடந்தோறும் நடக்கும் தருமையாதீன குருபூஜை விழாவின் ஹைலைட்டான விஷயமே சீர்காழி கச்சேரிதான்!
சுற்றுவட்டாரத்திலிருந்து மதியமே வந்த மக்கள், தருமபுர வீதி ஒரங்களில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் போது,சாலையில் புழுதியை கிளப்பிக்கொண்டு வரும் அந்த வெள்ளை அம்பாசிடார்!
சீர்காழி வந்துட்டாரு....!
காரை துரத்திக்கொண்டு, அவரை காண ஒடும், மக்கள் இன்னும் என் கண் முன்னால நினைவுகளில் நிழலாடுகிறார்கள்..!
தெய்வத்தமிழ் மன்றத்தில் தொடங்கும்,6.00 மணிக்கு தொடங்கும் கச்சேரி, 10.00 மணியை தாண்டியும் சென்றுகொண்டிருக்கும்.
இடையில் நேயர் விருப்பம் போல சீட்டுக்களில் வரும் பாடல்களும் உடனடியாக சீர்காழியின் குரலில் ஒலிக்கத்தொடங்கிவிடும்!
சின்ன்ஞ்சிறு பெண்போலே. .
வாக்குதரும் நல்வாழ்வுதரும்
திருச்செந்தூரில் கடலோரத்தில் ...
மயிலாக நான் மாறவேண்டும்
லார்டு முருகா லண்டன் முருகா.!
போன்ற பாடல்கள் வருஷா வருஷம் பாடினாலும் இந்த பாடல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இன்று அவர் வாரிசு சிவசிதம்பரம் பாடும்போது கூட...!
எத்தனையோ பாடகர்கள் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாலும், இவரின் குரலில் உள்ள ஈர்ப்பினை இது வரை எவரும் தரவில்லை என்பதற்கு இன்னும கோவில்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் இவரின் பாடல்களே சாட்சி!
நினைவு நாளில்..
மார்ச்-23 நினைவுநாள்
7 பேர் கமெண்டிட்டாங்க:
//எத்தனையோ பாடகர்கள் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாலும், இவரின் குரலில் உள்ள ஈர்ப்பினை இது வரை எவரும் தரவில்லை என்பதற்கு இன்னும கோவில்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் இவரின் பாடல்களே சாட்சி!//
சீர்காழி கோவிந்தராஜன் சிறந்த பக்திப்பாடகர்களில் ஒருவர், அவர் குரலுக்கு பிறரைப் போலவே தனிச் சிறப்புகள் உண்டு, மற்றபடி ஒப்பீட்டு அளவில் ஈர்ப்பைத் தரும் பாடல்களை பலரும் பாடியுள்ளனர். கே.வீரமணியின் ஐயப்பன் பாடல்களே இன்றும் ஐயப்பன் பாடல்களாகவு, எல் ஆர் ஈஸ்வரியின் அம்மன் பாடல்களே இன்றும் அம்மன் பாடல்களாக கோவில்களில் ஒலிக்கின்றன. டி எம் எஸ் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் போன்ற உருக்கமான பாடல்களைப் பாடியுள்ளார், பித்துகுளி முருகதாசின் பாடல்கள் கேட்கும் போது உருக வைக்கும்.
எனவே எவரும் தரவில்லை என்று நீங்கள் சொல்லுவது மிகைப்படுத்துதல் தான், அத்தகைய புகழ்ச்சியை சீர்காழியும் விரும்புவார் என்பது ஐயமே
அருமையான நினைவு கூரல்!
சீர்காழியார் என்றும் என் அபிமானபாடகர். தமிழை அவர் அட்சரசுத்தமாக உச்சரித்துப்பாடுவார். உணர்ந்து பாடுவார்.ஈழத்தில் 80 களில் அவர் கச்சேரி யாழ்பாணத்தில் நடந்த போது ஒரு தடவை நேரில் கேட்டுள்ளேன்.
யாழ்/இணுவில் தவில் வித்துவான் சின்னராசா அவர்கள் ஊர்க் கந்தசுவாமி கோவிலுக்கு வந்தபோது வீதியெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க பக்கவாத்தியம் எதுவுமின்றி ஒலிவாங்கியில்" ஆயிரம் கோடி முகங்களைப் பார்த்தேன், ஆறுமுகமே அழகென்றறிந்தேன்;
கோவிலைத் தேடி நான் போகாமல் குமரா உனை நான் கும்பிட வேண்டும்."
இந்த 2 வரியையும் பாடிச் சென்றார்.
கச்சேரியை கல்யாணவிருந்து போல் படைப்பார்.சகலதும் இருக்கும். மோர்சிங்,கஞ்சிரா என இன்று அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் வாத்தியங்கள் புடை சூழ அவர் ரசிகர்களைக்
கட்டிப்போடுவதே ஒரு தனிக்கலை.
இன்னும் சிலகாலம் அவர் வாழ்ந்திருக்கலாம்.
அருமையான குரல் மட்டும் அல்ல நல்ல மனதுக்காரர்
நல்லா இருக்குப்பா நினைவுகள்..
hii.. Nice Post
Thanks for sharing
சீர்காழி கோவிந்தராஜனை பற்றிய சிறப்பான நினைவுகள் பகிர்வுக்கு நன்றி!
good
Post a Comment