கொளுத்தியெடுக்கும் வெய்யில் காலத்தில் ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டுமா என்ற கேள்விகள் பல பத்து முறைகள் எழுந்தடங்கினாலும் பார்த்துடலாம்ன்னு நட்பு கை கொடுக்க ராவணனின் திரைக்களம் -தியேட்டருக்குத்தாங்க - புகுந்தோம்!
ப்ளாக்யெல்லாம் வைச்சுருக்கோம்ல அப்படின்னு ஒரு நினைப்பு வந்துச்சு அதான்...!
*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*
Ø செய்திகளில் பேசப்பட்டது போலவே ராமாயணம் கதையின் கருவே ராவணன் – குரங்கு சேஷ்டை செய்யும் கார்த்திக் விபீஷணனாக மாறும் தம்பி கண்டிப்பாக நம்பவைத்துவிடுகிறது - ஹீரோவின் கேரக்டரினை விட வில்லன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் டைட்டில் வைச்சுருக்காங்கன்னு யோசிக்கவைச்சு பதிலும் சொல்லியிருக்காங்க! என்ன அதுக்குள்ள இண்டர்மிஷனா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு விறுவிறுப்பு
Ø சந்தோஷ் சிவனின் ஒளி ஓவியங்கள் - ஒரு டப்பா எஸ்.எல்.ஆர் கேமராவினை வைத்துக்கொண்டு அலைமோதிக்கொண்டிருக்கும் எனக்கெல்லாம் வியப்பினை தரவைக்கும்விதமான காட்சியமைப்புக்கள் ! ஒரு காட்சியில் ஐஸின் ஐஸ் ஹப்ப்படியோ சொக்கவைக்கிறது! கேரளத்தில் அவுட்டோர் லொக்கேஷன் செண்டிமெண்ட் மணி ரத்னத்திற்கு உண்டு என்பதை நிரூபிக்கும் அதிராம்பள்ளி!
Ø உசுரே போகுதே பாடல் ஒளி/ஒலிக்கதொடங்கும் காட்சிகளில் சற்றே மனதுக்கு நெருடலாய் ஆரம்பித்தாலும், மொத்தமாய் படம் முடியும் பொழுதினில் சாரி டூ திருவள்ளுவர் & அபிஷேக் பச்சன் ”பிறன் மனை பாராமை பேராண்மை ரூல்ஸெல்லாம் ஏத்துக்க முடியாம, ஐஸ்வர்யா ராய் பச்சனை மனதிலேற்றி அமர்த்திவிட்டது!
Ø பெருத்த பிரபு வீராவுக்கு அண்ணன் + அட்வைசராக கால்ஷீட் பிரச்சனையோ அல்லது காலதாமதமோ கண்டினியூட்டி சில இடங்களில் பிரபுவுக்கு தடுமாற்றம்
Ø மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தில் பார்க்க நினைத்துக்கொண்டிருக்கின்ற கேரக்டர் ரஞ்சிதா - ச்சே எக்ஸ்பெக்டேஷனெல்லாம் கிர்ர்ர்ர்ர்
Ø கந்தசாமி எஃபெக்ட் சவுண்ட் கொடுக்கும் மேனரிஷம் எப்படி மணி ரத்னம் அனுமதித்தார் - நிஜமாகவே விரும்பியிருப்பாரோ - ஆச்சர்யம்தான்!
Ø கட்டுமஸ்தான விக்ரம் கந்தசாமியில் விழுந்தவரை கண்டிப்பாக கரை சேர்க்கும்! ஹிந்தியில் ஐஸ்வர்யாவின் கணவராக நடிப்பதையும் பார்த்துவிடும் ஆவல் உண்டாகியிருக்கிறது!
Ø மிக எளிய உரையாடலினை வெளிப்படுத்தும் வசனங்களே! மனைவியினை சந்தேகப்படும் கணவனின் செயல் சாதுர்யமாக கையாளப்படுவதும்,கோபம் விட்டுபோகாமல் இருக்கவும், தீயவர்களிடத்தில் இரக்கம்/அன்பினை வெளிப்படுத்தாமல் இருக்கவும், இறைவனிடம் வேண்டும் கதாநாயகி வசனங்கள் - சுஹாசினி - மணி ரத்னம் கொடுத்து வைத்தவர் ரொம்ப அதிகம் பேசமாட்டாங்க போல அவுரு தங்கமணியும்..!
Ø கோடு போட்ட,கள்வரே கள்வரே,கடா கடா காட்சியமைப்புக்களிலும் தூள்! ரொம்ப சிலாகித்து பேசப்பட்ட உசுரே உசுரே கொஞ்சம் நிமிடங்களில், மயங்கி கிடக்கும் ஐஸ்வர்யாவினை மனதில் இருத்திவிட்டு செல்கிறது!
Ø ஹிஸ்டரியின் ஒன் லைன் தீம் வைத்துக்கொண்டு கரெக்டர்களையும் ஒத்துவருவதுபோலவே உருவாக்கிவிட்டு, அரசியல் இன்ன பிற ஹிஸ்டோரிக்கல் பிரச்சனைகள் எதுவுமின்றி வில்லனை ஹீரோவாக்கும் விசயத்தில் மணி ரத்னம் ஜெயித்திருக்கிறார்
*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*
கடைசியா தோணுச்சு:- ஒரே நேரத்தில ராவணன் ஹிந்தி தமிழ்ல ரீலிசானா மல்லு சேட்டன்மார் ஹிந்திக்குத்தான் போறாங்க செம்மொழி மாநாட்டுல சொல்லி இதுக்கு எதுனா தடை போடணும்
டிஸ்கி டெரரிசம் :- இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று அப்படின்னு பாடுன தேவன் மேல டெரர் கோபம் வர்ற அளவுக்கு உங்களை ஒரு பெண் சஞ்சலப்படுத்தினால் நீங்களும் ராவணனே!