எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.
55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை!
- யாத்ரீகன்
18 பேர் கமெண்டிட்டாங்க:
ஆக இப்பவும் அப்பா பேச்சை கேட்பதில்லையா ஆயில்ஸ்? ச்சும்மா லூலூலாய்க்கு:-))) வாழ்த்துக்கள் அப்பாவுக்கு!
ஒரு வாழ்த்து ;)
நெகிழ்ச்சியான குறும்பதிவு, அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்
நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு//
உண்மைத்தான்.
தந்தையர் தின வாழ்த்துகள். நல்ல தந்தையர் நல்ல பிள்ளைகளை உருவாக்குகிறார்கள்.
அந்த விதத்தில் உங்கதந்தைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
வாத்துக்கள்..
தந்தையர் தின வாழ்த்துகள்
Very touchy post aayils!!
Happy Father's day! :-)
பெரிய பாண்டி...வேர் ஆர் யூ???
இதன் மூலம் அப்பாவுக்கே அட்வைஸ் செய்து அப்பாவுக்கு அப்பா ஆகிவிட்டீர்கள்..வாழ்த்துகள்! :))
//சந்தனமுல்லை said...
இதன் மூலம் அப்பாவுக்கே அட்வைஸ் செய்து அப்பாவுக்கு அப்பா ஆகிவிட்டீர்கள்..வாழ்த்துகள்! :)//
அவ்வ்வ்வ்வ்வ் சுமூகமா இருக்கிற இப்போதைய காலகட்டத்தில இப்படி ஒரு பில்ட்-அப் கொடுத்து என்னைய கவிழ்க்கணுமா?!
நல்ல விசயம் ஆயில்யன்..
நல்ல அபபா.. கெட்ட பையன்..
சிம்பிளா அழகா இருக்கு சூப்பர் பாஸ்
அன்பு ஆயில்யன் ...
உங்க பதிவு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு ...
நானும் என்னோட அப்பாவை பாத்து நீங்க சொன்னதை தான் சொல்ல விரும்புறேன் ...
ஒரு வேளை ...
உலகத்தில இருக்கிற எல்லா பசங்களும் இத தான் சொல்ல நினைக்கிறாங்களோ என்னவோ ...
வரேன் தோழர் !
----------
தந்தையர் தினம் கொண்டாடினேன்!
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html
Beautiful Fathers' day post!
அருமை அழகு நெகிழ்வு!
குழந்தைகளின் நன்மைக்காக என்று கூறினாலும் வழி காட்ட யாரும் இல்லாத அப்பாக்கள்,நமது நன்மைக்குத்தான் செய்கிறார் என்பது புரியாத பிள்ளைகள்...இரண்டும் தண்டவாளங்களாகப் பயணிக்கின்றன
Post a Comment