முதியோர் வதம்!

தினமணி கருத்துக்களத்தில் வெளிவந்த முதியோர்வதம் கட்டுரையிலிருந்து சில வரிகள்...

இசைபட வாழ்ந்த நாட்களை அசைபோட்டபடி கால வெள்ளத்தில் துடுப்பில்லாத ஓடமாகப் பயணிக்கிறது முதுமை வாழ்க்கை.




முதியவர்களின் கம்பீரம் காக்கும் சுய உழைப்பு சில்லறை வியாபாரங்களும் கால வெள்ளத்தில் கரைந்துபோயின. ரயில் பயணங்கள் சில பரிதாபங்களையும் பரிகாசங்களையும் படம் பிடித்துக் காட்டும். உரிமம் பெறாமல் வேர்க்கடலை, சுண்டல், கொய்யாப்பழம், டீ, காபி, பானங்கள் விற்கும் சில்லறை வியாபாரிகள் இரயில் பெட்டிகளில் தென்படுவது பயணிகளுக்கு ஒரு சாதாரண காட்சி. வெளியில் தெரியாத வேதனைகள் ஏராளம். சில்லறை வியாபாரிகளில் பெரும்பாலோர் முதியவர், மூதாட்டிகள். சுயமரியாதையை இழக்க மனமில்லாமல் இரயில் பயணத்தில் சில்லறை வியாபாரம் செய்து குறைந்த வருமானத்தைக் கொண்டு நிமிர்ந்து வாழும் உழைப்பின் சிறு தேவதைகள் அவர்கள்.

திருநெல்வேலி ரயில் பயணிகளுக்கு மிகவும் அறிமுகமான இட்லி வியாபாரியை எளிதில் மறக்க முடியாது. வயது எண்பத்தி ஐந்தைத் தொடும். கூன் பின்னுக்கு இழுக்கும். இரணியா வீக்கம் முன்னுக்குத் தள்ளும். கரணம் தப்பினால் மரணம். உயிர் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இரயில் பெட்டிகளில் ஏறி இறங்கி கூவிகூவி அவர் இட்லி வியாபாரம் செய்வது கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.

விவசாயத்துறை, தொழிலாளர்கள், வாலிபப் பருவத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பின் வாயிலாகத் தங்களைத் தியாகம் செய்கிறார்கள். முதுமை அவர்களை முடக்கிப்போடும்போது குடும்பத்திற்குப் பராமரிக்கிறார்கள். குலை நடுங்கி துயரத்தில் குமைகிறார்கள். காந்தியும், புத்தரும் காருண்ய இயேசுவும் வள்ளலாரும் புனிதமாய் மதிக்கப்படும் இந்தியத் திருநாட்டில் ஏழை முதியவர்களிடமும் கருணை காட்ட வேண்டும்

முழுமையான கட்டுரை வாசித்தலுக்கு


நன்றி - தினமணி

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

புகைப் படமும், பகிர்வும் மனசை பிசைகிரதுங்க. :-(

said...

முதியவர்களா ? முதியவர் என்றால் கரு"நா"நிதி மட்டுமே. அவரைத் தவிர இந்த தமிழகத்தில் வேறு முதியவர்களுக்கு என்ன வேலை.

காலைல கெட்ட வார்த்தையா வருது வாயில :(

said...

யப்பாடீ என்ன ஒரு கோவம் ஜீவ்ஸ்க்கு!!! செம ஜூடா இருக்கு.

said...

:(

said...

அந்தி மந்தாரைகளின் நிலையும் இடுகையும் பிசையத்தான் செய்கிறது

said...

//இசைபட வாழ்ந்த நாட்களை அசை போட்டபடி கால வெள்ளத்தில் துடுப்பில்லாத ஒடமாகப் பயணிக்கிறது முதுமை வாழ்க்கை//

அசை போட்டபடி பெரியவர்!

இதற்கு படம் பொருத்தமாய் இருக்கிறது.

said...

மூத்த குடிமகன்கள் (senior citizens)பற்றிய
அக்கறையோடு, தினமணியிலிருந்து எடுத்து
மறுபிரசுரம் செய்துள்ளீர்கள்.
இதன்மூலம் அவர்களை மிகவும் மரியாதையோடு
கவனிக்கவேண்டும் என்பதை நினைவூட்டினீர்கள்.

said...

இது அனைவருக்குமான... பாடம்!

புகைப் படமும், பகிர்வும் மனசை பிசைகிரதுங்க. :-(

அவசியமான கட்டுரை.