புறா!

ஏறக்குறைய நாற்பதுக்கும் அதிகமான புறாக்களின் கூட்டத்தினுள் பார்வையினை செலுத்தியபடி மெளனமாய் அமர்ந்திருக்கின்றேன்!



வார வேலை நாட்களின் பரபரப்புக்களில் புறாக்களும் சிக்கிக்கொண்டுவிட்டனவோ என்று நிறைய நாட்களில் காலை வேளைகளில் காணாமல் போன் இக்கூட்டத்தினை நினைத்து நினைத்ததுண்டு!

வார இறுதி விடுமுறை வெள்ளிகளில் கண்டிப்பாய் காலை 4.30 தொடங்கி 7.00 மணி வரையிலும் இக்கூட்டம் கண்களுக்கு புலப்படும் மற்ற நாட்களில் ஏனோ இத்தனை எண்ணிக்கையிலான புறாக்களின் சங்கமம் இருப்பதில்லை!

எல்லா புறாக்களிலும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்ற உணவினை உண்பதில் தொடங்கி ஏதேனும் சிறு அசைவுகளில் கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வினோடு பறக்க முறபடுகின்ற புறாக்கள் - அவைகளுக்கு! பாதுகாப்பு பறத்தலில் தான் இருக்கிறது போலும்!

கூட்டத்திலிருந்து பிரிந்த புறா ஒன்று தனியே நடக்க தொடங்குகிறது! நான் அமர்ந்திருக்கும் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உருவாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது! முன்னர் கதைகளில் மட்டும் கேட்டிருந்த பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது!

சற்றே இடைவெளி விட்டு மற்றுமொரு புறா அதனை தொடர்ந்து வந்து இணையாக நடக்கமுயற்சிக்கும்போது,முன் சென்ற புறா கோபத்துடன் கழுத்துப்பகுதியிலிருந்து சிலிர்ப்புடன் தலையினை உயர்த்தி எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ?

ஊரில் இருந்த கால கட்டத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டினில் புறாக்கள் வளர்த்துவந்தனர் புறாக்கள் கிளிகள் மற்றும் சில வகை குயில்கள் என பலவித பறவைகள் சுதந்திரமாக கூண்டில் சுற்றிவந்துக்கொண்டிருந்தன. கம்பிகளின் இடுக்குகளின் வழியே கண்ட காட்சிகளுக்கும், தற்போது வெட்டவெளியில் தன் இஷ்டப்படி சுற்றிவருகின்ற புறாக்களினை காண்கின்ற காட்சி நிச்சயம் வெகு சுவாரஸ்யமானதாக இருக்கிறது!



கூண்டினில் அடைப்பட்டிருக்கும் புறாக்களினை காண்பதை விட வெட்டவெளியில் சுதந்திரமாய் உலாவும் புறாக்களினை காண்கையில் மனம் நிச்சயம் மகிழ்வடையக்கூடும்!

ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்!

34 பேர் கமெண்டிட்டாங்க:

said...

/ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்/

boss...joopparu :)

said...

Sura patri ippadi oru post ready pannuneengale athu eppo release aagum???

said...

ரொம்ப நெகிழ்வான பதிவு ஆயில்யன்! சுறா படம் பார்த்து நொந்துபபோனதின் விளைவா இது?:)

said...

ஒருகாலத்துல புறாக்கள் போஸ்ட்மேன் வேலைபார்த்ததை சொல்லி இருக்கலாம் இல்ல? காதல் தூதுக்குக்கூட போயிட்டிருக்கும்! நளதமயந்திக்கு ஒரு அன்னம் மாதிரி புறாக்கும் ஏதும் இருக்கும் நினைவில்லை இப்போ!அப்புறம் புறாக்கள் எப்போதும் கோயில் மாடத்துலயே இருக்கே அது ஏன்?

said...

சுவாரசியம் :)

said...

23ம் புலிகேசி மன்னனுக்கு தூது அனுப்பிய புறாவா பாஸ் இது? :)

said...

பாஸ் சூப்பர்

said...

பாச்.. யூ மீன் கேரளா புறா?!! :-))

said...

/பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது!/

பாஸ்...இதை அப்படியே மடக்கி மடக்கி எழுதியிருந்தா கவிதையாகி இருக்குமே பாஸ்! :-)

said...

எல்லாரும் நல்ல மாதிரி பின்னூட்டம் போட்டிருக்காங்களேனு படிச்சுப் பாத்தேன் பாஸ்! நல்லாத் தான் எழுதியிருக்கீங்க!

said...

தை பிறந்தால் வழி பிறக்கும் பாஸ்...:-) வீட்டுலே கவனிங்கப்பா..பயபுள்ள எப்படில்லாம் போஸ்ட் போடுது!! அவ்வ்வ்!

said...

பாஸ் பதிவே கவிதையா அழகா இருக்கே பாஸ். தனித்தனியா ஆச்சர்யகுறி போடமுடியலைன்னா மொத்தமா ஒரு ஆச்சர்யகுறி போட்டுருங்க பாஸ் :)

said...

//சந்தனமுல்லை said...

தை பிறந்தால் வழி பிறக்கும் பாஸ்...:-) வீட்டுலே கவனிங்கப்பா..பயபுள்ள எப்படில்லாம் போஸ்ட் போடுது!! அவ்வ்வ்!//

:))))) போன் போடுங்க பாஸ் வீட்டுக்கு. நாமளே பேசலாம்

said...

//பாஸ்...இதை அப்படியே மடக்கி மடக்கி எழுதியிருந்தா கவிதையாகி இருக்குமே பாஸ்! :-)//

மொத்தமா கவிஜயா இருக்குற பதிவை பார்த்து தனியா வரியை எடுத்து கொடுக்குறீங்களே பாஸ். இது அநியாயம்

said...

பாஸ்.. நம்ம வாழ்க்கையையே புறா என்ற ரெண்டு எழுத்து ஜீவனுக்குள் அடக்கிச் சொல்லிட்டீங்க... ம்ம்ம்

said...

அப்புறம் எங்க வீட்லயே நிறைய புறா வளர்க்கிறோம்.. அதைக் காலையில் பார்த்துக்கிட்டே இருப்பது அழகு பாஸ்! ஆனா அதுக்கு தெரியாது மதியம் அதைக் குழம்பாக்கி சாப்பிடுவோம்ன்னு.. புறாக் கறி ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.. ;-)

said...

//ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்!//

அதன் சுதந்திரமாவது நம்மாள் கெடாமலிருப்பதே இன்னும் மகிழ்ச்சியை தரும்..

ரசித்தேன்.... (சுறாவின் எதிர்பதமோ என்று நினைத்தேன்...)

said...

//அனுபவம், நிகழ்வுகள், வாழ்க்கை //

:)))

said...

:)))) mikavum rasiththu vaasiththeen aayilu.....:)

said...

தனக்கு ஆதரவு கொடுக்க வந்த ஒரு புறாவ இந்த புறா ஏன் விரட்டனும்....? அதுபத்தி உங்கலுக்கு எதாவது தெரியுமா பாஸ்?

said...

// rgs said...

தனக்கு ஆதரவு கொடுக்க வந்த ஒரு புறாவ இந்த புறா ஏன் விரட்டனும்....? அதுபத்தி உங்கலுக்கு எதாவது தெரியுமா பாஸ்?//

அதெல்லாம் தெரிஞ்சா நான் அந்த புறாக்கள் கிட்ட பேசி தூது விட்டு எங்கயோஓஓஓஓ போயிடுவேனே பாஸ் ஏன் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேனாம் :)))

said...

நெகிழ்வான பதிவு ஆயில்யன்

said...

/ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்/

boss...joopparu :)

said...

;)

said...

சந்தனமுல்லை said...

தை பிறந்தால் வழி பிறக்கும் பாஸ்...:-) வீட்டுலே கவனிங்கப்பா..பயபுள்ள எப்படில்லாம் போஸ்ட் போடுது!! அவ்வ்வ்!/

பாஸ்

பெரியவங்க நீங்களாச்சும் அவங்க காதில போட்டு வைக்ககூடாதா? பயபுள்ளை ஒவ்வொரு தையா பார்த்துப் பார்த்து தக தைய தையா தையா தக்க தையா தையா

said...

எங்க அப்பார்ட்மெண்ட்ல கூட்டம் கூட்டமா புறாக்கள். அவற்றை ரசிப்பது எனக்கும் பிடித்தமானது:)! புறா படங்களும் கூடவே சிந்தனைகளும் அழகு ஆயில்யன்.

said...

புறா படங்கள் அழகு ஆயில்யன்.


எனக்கு புறாவைப் பார்க்கும் போதெல்லாம் ,அந்த காலத்தில் புறாவை வைத்து எழுதிய கதை எல்லாம் நினைவுக்கு வரும்.

//ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திரநிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்.//

இருக்கும்,இருக்கும்.

said...

oru puraavukkaaha (pora)inge ivvalavu periya bore - aa??

ippadilaam kidal pannave mudiyaatha alavukku ithu azhakaave irukku!

kochchin maadap pura...[song niyabakam varuthu]

/ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்/

ithu remba nice.....:)

said...

எல்லார் சொன்ன நல்ல விஷயத்தையும் ஒருக்கா ரிப்பீட்டிக்கிறேன் பாஸ்

said...

இதுக்கு எதிர் பதிவு போட்டா தலைப்பு என்ன வைக்கலாம் என யோசித்து பார்த்து சரி வேண்டாம்ன்னு விட்டுட்டேன் பாஸ்!

சரி வீட்டிலே பேசிடுவோமா நாளைக்கே!!! நெம்ப ஜோகமா இருப்பது மாதிரி தெரியுதே!!!

Anonymous said...

Photo super boss

said...

//நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது!//

நான் கூட, வரலாறில இன்னொரு சிபிச்சக்கரவர்த்தியா உங்கபேரு ரிஜிஸ்டர் ஆகப்போகுதுன்னு உன்னிப்பாக் கவனிச்சேன்!!

//எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ?//

“ஆயில்ஸ் தமிழ்ப்பிரியன் ஃப்ரண்டு, தெரியுமா? பிரியாணியாக்கிடுவாரு!!”ன்னு அந்தப் புறா கேட்டிருக்கும், அதான் இந்தப் புறா சைலண்டா திரும்பிப் போயிருக்கும்!! :-))))))

said...

புறாவைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும்,
பூரா கவலைகளும் புறாவாகி,ரெக்கை கட்டி பறந்து போகும்

said...

//பாதுகாப்பு பறத்தலின் தான் இருக்கிறது போலும்//

ஏனோ இந்த வரிகள் மனதை நெருடுகின்றது ... அருமையான பதிவு ஆயில்யன் ..