மயிலாடுதுறை - விட்டாச்சு டிரெயினு!

இன்று 23/04/2010 மாலை 6.30 மணிக்கு அகல ரயில்பாதையில் ரயில் வண்டியின் பயணம் தொடங்கியது! கிட்டதட்ட 3 வருடங்களை கடந்த மீட்டர்கேஜ் - பிராட்கேஜ் இருப்புப்பாதை அகலமாக்குதல் திட்டம் ஒரு வழியாக நிறைவேற்றம் பெற்றிருக்கிறது!

மயிலாடுதுறை மக்களுக்கும் சுற்றியுள்ள ஊர்களை சார்ந்திருப்போருக்கும் மேலும் கும்பகோணம் தஞ்சாவூர் மக்களுக்கும் தற்போதைய சூழலில் [ அணைக்கரை பாலம் வலுவிழந்த நிலையில் பேருந்துகள் கிட்டதட்ட 50 கி.மீ சுற்றி சென்றுகொண்டிருக்கிறது] நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது இன்று!

திட்டம் சிறப்பாக[!?] நிறைவேற்றம் பெற பங்கு பெற்ற மத்திய & மாநில அரசு ஊழியர்களுக்கும்,பணிகளை சிறப்பாக செய்து முடித்த தனியார் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மயிலாடுதுறை மக்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !


26 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நன்றி! நன்றி!! நன்றி!!!
'மயிலாடுதுறை- விட்டாச்சு ட்ரைனு' என்று
மகிழ்ச்சிப் பதிவும் அதோடு கால அட்டவணை
இணைப்பும் தந்திட்டீங்க.
மிகவும் மகிழ்ச்சி நண்பரே!

said...

வாழ்த்துக்கள் மக்களே! இனி நாங்க உங்க ஊருக்கு டிரையினில் வரலாம் போல.... :-)

said...

ரயிலுக்கு பச்சக்கொடி காமிச்சு துவக்கி வெக்கறா இந்த கொடி. :)

said...

இதோ வருகிறது,அதோ வருகிறது என்று வந்தே விட்டது மயிலாடுதுறை டிரெயினு!!

உங்கள் மகிழ்ச்சியில் நானும் கலந்து கொள்கிறேன்,ஆயில்யன்.

கொண்டு வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்!!

said...

அன்பின் ஆயில்ஸ்

சொந்த ஊரில் ஒரு நல்ல செயல் நடந்தால் எவ்வளவு மகிழ்ச்சி உங்களுக்கு - இயல்புதானே !

தகவலுக்கு நன்றி ஆயில்ஸ்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

said...

:) super
ஜங்கஷனா அந்த காலத்துல பெரிய பேரு பெற்ற ஊருல இப்படி ஒரு ரயிலு விட இத்தனைநாள் காத்திருப்பும் .. அதுக்கு மகிழ்ச்சியும்னு ஆகிப்போச்சே.. சரி இனி நல்ல காலம்பிறக்கட்டும்..

said...

வாழ்த்துகள் பாஸ் :)

said...

மிக மிக மகிழ்வான செய்தி ஆயில்ஸ் :))))

எங்க ஊருலயும் டிரெயின் நிக்குமே :)

said...

இந்த திட்டத்தை தொடங்கிய பா.ம.க முன்னாள் அமைச்சர் ஆ.கி. மூர்த்தி,

இதன் செலவு பலமடங்கு அதிகரித்த போதும் விடாது விரட்டிய பா.ம.க முன்னாள் அமைச்சர் அரங்க. வேலு ஆகியேருக்கு நன்றி. நன்றி. நன்றி.

said...

நல்ல செய்தி!

அப்படியே இன்னொரு நல்ல செய்தியும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

வாழ்த்துக்கள்!

said...

ம்ம்ம்....நல்லதுங்க... அட்டவணையும் கொடுத்ததுக்கு....

said...

ரொம்ப நன்றிங்க!

அட்டவணைலாம் கொடுத்து கலக்கிப் போட்டீங்க போங்க!

said...

அகலப்பாதைன்னு சொல்லிட்டு மீட்டர்பாதை ரயில் படம் போட்டிருக்கே :)))))))))))

said...

//Mahesh said...

அகலப்பாதைன்னு சொல்லிட்டு மீட்டர்பாதை ரயில் படம் போட்டிருக்கே :)))))))))))//

பழசை நினைச்சுப்பாக்குறேனாக்கும் :)

said...

நல்ல செய்திங்கோ ...

said...

நன்றிகள். மணி சங்கர் அய்யர் எம்பி ஆகித்தான் ரயில் விடணும்னு இருக்கு போல.

அடுத்து மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் ஆகி வந்து மீண்டும் திறப்பு விழா நடத்துவாரா அடுத்த வாரம்.

said...

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு எப்ப train விடுவாங்க ?

said...

//கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு எப்ப train விடுவாங்க ?//

மயிலாடுதுறையிலேர்ந்து டைரக்டா சென்னைக்கு டிரெயின் இதுவரையிலும் ஒரு தகவலும் இல்லை எல்லாமே கும்பகோணம் மயிலாடுதுறையினை கடந்து செல்லும் வண்டிகள்தான் :)

said...

நன்றி:-))
சில ஓம்னி பஸ் முதலாளிகளால் தான் இவ்வளவு தாமதம் என்று கேள்விபட்டேன்.எப்படியோ இனி இவர்களின் கொட்டம் கொஞ்சம் அடங்கும்

said...

நல்ல விஷயம்

said...

இந்தச் செய்தியைப் படித்ததும் உங்கள் அனைவரையும் நினைத்துக் கொண்டேன் ஆயில்யன்.
வாழ்த்துகள். இனிமேல் கோவில்களுக்கு நேரே உங்க ஊருக்கு வந்து ,நிம்மதியாகப் போகலாம். இரு தரம் வந்திருக்கிறேன் மாயவரத்துக்கு. அப்போ உங்களையெல்லாம் தெரியாதே!!

said...

நண்பா.இரயில் விட்ட பிறகு ஒரே போஸ்டர் யுத்தம் தான் இப்போது ஊரில்.கடைசி வரை டிரெயினு வந்ததற்கு உண்மையான காரணமாக இருந்தவர் யார்னு புரியவில்லை.அதற்கு தான் இந்த போஸ்டர் யுத்தம்.

said...

Mayiladuthurai Villupuram rail track not safe for express trains!!!

http://prtraveller.blogspot.com/2010/04/mayiladuthurai-villupuram-rail-track.html

said...

Yeap... turned out to be long delay... but heard that they good engineering challenges ....

said...

மயிலாடுதுறைக்கு ரயில் வந்துடுச்சி பேருந்து நிலையம் வருமா ?

said...

ஃபோட்டோவுக்கு ஒரு கமெண்ட்

மயிலாடுதுறைக்கு ரயில் விட்டாச்சுன்னு எல்லோரும் மயிலோடு சேர்ந்து ஆனந்தத்தாண்டவபுரத்தில் ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார்கள்